Saturday, March 28, 2009

திருப்பம்: சிறுகதை

"ஆசை தான் எல்லா துன்பத்திற்கு முதற்படி" என்று தெரிந்தும் எனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை. என் நண்பர்களிடம் இதை கூறிய போது உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று வாங்கி கொண்டேன். இருந்தாலும் ஒரு கதையையாவது எழுத வேண்டும் என்று நினைத்து இதோ கீழே ஆரம்பிக்கின்றேன்.

பூ பூத்து குலுக்கும் சாலையில் கதையின் நாயகனும், நாயகியும் எதிர் எதிர் வீட்டில் குடிருக்கின்றனர். நாயகனுக்கு முதலில் அறிமுக பாடலுடன் கதை ஆரம்பமாகிறது. கதை எழுதும் நானும் சாதரண தமிழன் தான். அதனால் என் கதையில் கூட நாயகனுக்கும், நாயகிக்கும் கண்டதும் காதல். இரண்டு காதல் கீதங்களுடன், ஒரு சண்டை காட்சியும் முடியும் போது அவர்களுது காதல், நாயகனின் அப்பாக்கு தெரிய வருகிறது. இக்கதையில் அப்பா பாத்திரம் தான் வில்லன். இத்துடன் முதல்பகுதி முடிவுக்கு வருகிறது.

இரண்டாம் முதல்பகுதியில் மீண்டும் ஒரு காதல் கீதம், ஒரு சோக பாடல். கதை பல திருப்பங்களுடன் முடிவுக்கு வருகிறது.

அப்பா: அந்த பெண்ணை நீ திருமணம் செய்து கொள்வதை என்னால் அனுமதிக்க முடியாது.

நாயகன்: ஏன்? இருவரும் ஒரே ஜாதி. அவளுக்கும் நல்ல படிப்பு இருக்கிறது. பின் உங்களுக்கு என்ன பிரச்சினை.

கதையில் ஒரு திருப்பம்....

அப்பா: அவள் உனக்கு தங்கை முறை.

நாயகன் அழுது கொண்டே சுவரில் சாய்ந்தவாறு உட்காரும் போது

கதையில் மீண்டும் ஒரு திருப்பம்...

நாயகனின் அம்மா: இல்லை... அப்பெண் உனக்கு தான்.

அதிர்ச்சியுடன், கோபத்துடன் அப்பா இருக்கும் வேளையில் நாயகனின் அம்மா: இவர் உனக்கு உண்மையான அப்பா இல்லை.

இப்போது நாயகன் மகிழ்ச்சியுடன் திருமண கனவில்..

சுபம்...

என்று நீங்கள் நினைத்தால் அது தவறு... மீண்டும் ஒரு திருப்பத்துடன் கதை தொடர்கிறது.

நாயகனின் அம்மா: உன் திருமண தேதி உனது ஏழாம் வகுப்பு முடியும் போதும், அவளுக்கு ஐந்தாம் வகுப்பு முடியும் போதும் தான் முடிவு செய்யப்படும் என்று கூறும் போது.. நாயகனின் நண்பன் கோலி குண்டுடன் வெளியில் விளையாடுவதற்கு...

முடியலேப்பா! :)

குறிப்பு: இக்கதை என் கைதொலைபேசியில் குறுன்சொல்லக வந்தது. நான் இக்கதையை எழுது முடிக்கையில் மயங்கி விழபோனேன். ஆனால் படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் நிலைமையை நினைத்தால்....

1 comment:

கார்த்திக் அருண் said...

தலைப்பிற்கேற்ற உள்ளடக்கம். கைப்பேசி சிறுசேதியை சிறுகதையாக உருமாற்றிய தன்மை சிறப்பு.