காலை ஆறு மணி அலாரம் அடித்தவுடன் குமார் பரபரப்புடன் எழுந்து நேராக கண்ணாடி முன் சென்று தலைவாரி அவன் அறையில் உள்ள சன்னல் பக்கத்தில் புத்தகத்துடன் போய் நின்று கொண்டான். இச்செயல் கடந்த ஒரு வருடமாக தொடர்கிறது. சுருங்கி இருந்த அவனது கண் எதையோ தேடி கொண்டு இருந்தது. ஐந்து நிமிடம் கழித்து, அவன் கண் விரிய தொடங்க மனதில் பல வண்ண பட்டாம் பூச்சியின் கூட்டம் பறக்க, அதற்கு காரணமான எதிர் வீட்டு உஷா மாடி படியில் ஏறி கொண்டு இருந்தால். குமார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். உஷா அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. எதிர் வீட்டில் பார்த்த போதே மனதை தொலைத்து விட்ட குமாருக்கு கல்லூரியில் அவளை பார்த்த உடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். என்ன தான் ஒரே கல்லூரி மற்றும் எதிர் வீடு என்றாலும், இரண்டு வீட்டின் பிரச்சனை காரணமாக அவர்கள் பேசியதில்லை. அவன் கல்லூரியில் பேச முயற்சி செய்தாலும், அவளை பார்த்த உடன் பேச முடியாமல் மின்னுக்கு வந்து விடுவது வழக்கம்.
குமாரின் நண்பர்கள் அவனிடம், "டேய் மாப்பிள அடுத்த வருஷம் பைனல் இயர். இப்ப போய் கரெக்ட் பண்ண தான் ஒரு வருஷமாச்சு காலேஜ் லவ் லைப்எ என்ஜாய் பண்ணலாம். இத விட்ட போச்சு மாப்பி.. பாத்துக்கோ" என்று பல்வேறு கோணங்களில் அவனிடம் சொல்லி பேச வைக்க முயலுகின்றனர். குமாரும் இதை அறிந்து இருந்ததினால் இம்முறை தன் காதலை கண்டிப்பாக சொல்லி விட வேண்டும் என்று நினைத்து ஒரு காதல் கடிதம் ...
கடிதத்தை கொடுக்க அவள் எப்போதும் தன் நண்பிகளுடன் பழசாறு குடிக்கும் பழமுதிர்சோலையை தேர்ந்து எடுத்து அவள் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் போய் சேர.. இதயம் நின்று இருக்கிறது... ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக...
குமாரின் அதிர்ஷடம் காரணமாக அவள் மட்டும் தனியாக முதலில் வர, குமாரின் கால்களும் அவளை நோக்கி முன்னோக்கி செல்ல.. எப்படியோ தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் முன்னால் நிற்க அவள் சிறு புன்னகையுடன் "ஹாய்" என்கிறாள். பதிலுக்கு அவனும் "ஹாய்" கூற பேச்சு தொடர்கிறது. சில நிமிட கடலைக்கு பிறகு தன் பையில் இருந்த கடிதத்தை அவளிடம் நீட்ட, அவள் படித்து விட்டு கேட்ட கேள்வி அவன் மனதை எரிமலை போல் வெடிக்க செய்தது... அவள் கேட்ட கேள்வி..."அண்ணே, யார அண்ணே லவ் பண்றிங்க?..."
5 comments:
Machi yaruda anda ponnu.. ippathan unnoda love story solla aarambichu iruka.. innum ethana love story iruku..
"Mokka Saamy" endra pattathau unakku valangukinrom ..
- Sundar
Good..I think it may be own experience to you:) Keep it up Nirmal
ha ha ha!!!...
en kitta sollave illa.un valkaiyil ippadi oru visayam nadanthahtha
Post a Comment