1963ம் ஆண்டு வெளிவந்த திகிலூட்டும் சம்பவங்கள் மற்றும் அருமையான பாடல்கள் நிறைந்த அற்புதத் திரையோவியம். முற்பிறவியில் ஒன்று சேர முடியாத இளம் காதல் ஜோடிகள் மறுபிறவியில் இணைகின்றதை எடுத்துச் சொல்லும் அற்புதமான காதல் கதை.
அக்காலத்தில் திகில் படம் என்றாலே இப்படம் “நெஞ்சம் மறப்பதில்லை" தான். அதிலும் வில்லனாக வாழ்ந்து காட்டிய உயர்திரு நம்பியாரின் நடிப்பு ஈடு இணையற்றது. இப்படத்தில் நடித்ததற்க்ககவே கல்யாணகுமார், தேவிகா, நாகேஷ், மனோரமா, எம்.என்.நம்பியார், மாலி, கரிக்கோல்ராஜ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி பாலகிருஷ்ணன், மகாலிங்கம், பத்மினி பிரியதர்சினி, சீதாலட்சுமி ஆகியோர் பெருமை பட்டனர் என்பது வரலாறு. பாராட்டப்பட்ட வேண்டிய இருவர் ஸ்ரீதர் மற்றும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி..
இப்படத்தில் வரும் முக்கிய காட்சி 109 வயதில் தன் மகனை அதுவும் மகனின் அடுத்த ஜென்மத்தில் பார்க்கும் போது, நான் தன் அந்த "ஜாமீன்தார்" என்று கூறும் காட்சியில் பலர் பயந்து மயக்கம் அடைந்ததுண்டு. அக்காட்சி இதோ.
இப்படத்தை நான் இணையத்தில் தேடி இக்காட்சியை மட்டும் எடுக்க மூன்று மணிநேரம் மேல் ஆனது.
1 comment:
புது படங்களின் விமர்சனத்திற்கு இடையில் நீங்கள் பகிர்ந்துக்கொண்ட இந்த படம் உண்மையிலேயே மிக சிறந்த படம்தான்!
Post a Comment