நான் சென்னையில் இருந்து மதுரைக்கு இரயிலில் தான் பயணம் செய்வது வழக்கம்.. மூன்று மாதம் முன்பு இரயில் பயணசீட்டை எடுத்து, முடிந்த அளவு பேருந்து பயணத்தை தவிர்ப்பது எனது வாடிக்கை. பேருந்து பயணத்தை பற்றி உங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. அதுவும் மதுரை முதல் சென்னை வரை நாற்கரச் சாலை திட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. என்ன தான் மிகக் கவனமாக இரயில் பயணச்சீட்டை எடுத்தாலும் ஒரு சில தவறு நடக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய கஷ்டம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில வேலைகளில் அந்த பயணத் திட்டமே செயல்படுத்த முடியாமல் போகிறது. எனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் இங்கே..
முதல் அனுபவம்
இரயில் கிளம்பும் முன் அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்று பக்கத்து இருக்கையில் இருப்பவர்களுடன் உரையாடுவது எனது பழக்கம். ஒரு நாள் இப்படி ஒருவர் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது, இருக்கை எண்ணை கேட்டேன். அவர் சென்ன பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் என்றால் அவர் இருக்கை எண்ணும், என்னுடைய இருக்கை எண்ணும் ஒன்றாக இருந்தது. அவரிடம் வாதம் செய்துக் கொண்டே எனது பயன் சீட்டை பார்த்தப் போது எனக்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் நாளில் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பும் இரயிலிலும், மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் நாளில் சென்னையில் இருந்து மதுரைக்கு கிளம்பும் இரயிலிலும் பயணசீட்டு இருந்தது. யார் நினைத்தாலும் எதுவும் செய்ய முடிய சூழ்நிலை. எதுவும் யோசிக்காமல் மீண்டும் எனது வீட்டை நோக்கி...
இரண்டாவது அனுபவம்
எனது பயணசீட்டை இரயில் நிலையத்திற்கு சென்று முன்பதிவு செய்ததாக நினைவு. ஆனால் என்னிடம் பயணசீட்டு இல்லை. அதனால் இரயில் நிலையத்திற்கு சென்று மறுசீட்டு கேட்டு விண்ணப்பித்த போது, நான் பதிவு செய்த அதே இரயிலில் என் பெயர் இருப்பதை பார்த்து அது வலைத் தளத்தில் முன் பதிவு செய்ததாக கூறி எனக்கு மறுசீட்டு தராமல் பயணசீட்டு எண் கொடுத்து அனுப்பி விட்டனர். ஆனால் நானோ அல்லது என் நண்பர்களோ எனக்காக வலைத் தளத்தில் முன்பதிவு செய்யவில்லை. பயணசீட்டு எண்ணை வைத்து வலைத்தள முகவரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அங்கிருந்தும் பதில் இல்லை. மீண்டும் அதே எண்ணை வைத்து இரயில் நிலைய தொலைப்பேசிக்கு தொடர்புக் கொண்டு எனது முகவரிக்கு பயணசீட்டை அனுப்ப சொன்னப் போது அவர்கள் எனது வலைத்தள முகவரி, தொலைப்பேசி எண், வீட்டு முகவரி கேட்டு கொண்டனர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால் நான் சொன்ன பதில் எதுவுமே சரியானது இல்லை என்று கூறி எனக்கு பயண சீட்டை கொடுக்காமல் இருந்து விட்டனர். அவர்கள் கூறிய பதில் தான் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த பயண சீட்டு வலைத்தளத்தில் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கைதொலைப்பேசியில் இருந்து பதிவு செய்யப் பட்டது என்றும் முகவரி பெங்களூர் உள்ளது என்றும் கூறி முடித்தனர். இதில் கொடுமை என்னவென்றால் கைதொலைப்பேசியில் இருந்து பதிவு செய்ய எனக்கு தெரியாது. ஆக மொத்தத்தில் அது என் பயண சீட்டா இல்லை வேறோருவருடையாத என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியாமல் முழித்துக் கொண்டே மீண்டும் வீட்டை நோக்கி...
ஒரு நாளில் சென்னையில் இருந்து மதுரைக்கு எத்தனை இரயில்கள் போகின்றன, அதில் எத்தனை பேருக்கு பயண சீட்டில் என்ன என்ன பிரச்சனை இருக்கிறதோ என்று நினைத்தால்....
No comments:
Post a Comment