மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்ற கூற்றுக்கு நான் மட்டும் விதி விலக்கு அல்ல. 3ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு, காலையில் 7மணி அளவில் பெரியார் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நகரப் பேருந்தில் செல்லும் போது, வாழ்க்கை எப்படி அமையப் போகிறதோ என்ற பயம் என் ஆழ்மனதில் இருந்தது என்பது மறைக்கபடாத உண்மை. 2004 மே மாதம் 7 ம் தேதி, கடைசி பாடத் தேர்வு முடித்துவிட்டு வெளியில் வரும் போது இருந்த பயம் என்னவென்று சொல்ல. மூன்று நாட்கள் கழித்து 11ம் தேதி காலையில் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டே வலதுக்காலை நானும், என் நண்பனும் சென்னையில் எடுத்து வைத்தோம். எங்களை வழியனுப்ப எனது குடும்பத்தாரும், கல்லூரி நண்பர்கள் சுமார் 35 பேர் வந்து இருந்தனர். இப்போது பின்னோக்கி பார்க்கும் போது அதே மே மாதம் ஆனால் ஆண்டு 2009. பெற்றோர் துணை இல்லாமல் அதுவும் நான் வெறுத்து ஒதுக்கக் கூடிய நகரமான இந்த சென்னையில் 5 வருடம்.
கடந்து வந்த இந்த ஆண்டுகளில் சாதித்தது என்ன என்ற என் மன கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்னால் மட்டும் அல்ல என் நண்பர்களும் பதில் சொல்ல முடியாமல் திருதிரு முழிப்பது.... :)
குறிப்பு: 5 வருடம் என்பது எனக்கு ஒரு சில மணி நேரமாக தான் தெரிகிறது. ஆனால் மற்றவருக்கு எப்படியோ என்று தெரியவில்லை இப்பதிப்பு என்னுடைய மனதில் உள்ள எண்ணங்களில் சில.
No comments:
Post a Comment