Monday, September 21, 2009
இன்றைய சிந்தனை
Sunday, September 13, 2009
ஈரம் – திரைவிமர்சனம்
நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர், மற்றும் நடிகை ஆகியோரை வைத்து மட்டுமே மக்கள் நம்பி திரைப்படம் பார்த்து கொண்டு இருந்த காலம் சென்று தயாரிப்பாளரையும் வைத்து திரைப்படம் காணலாம் என்ற எண்ணத்தை முதலில் கொண்டு வந்தவர் இயக்குனர் சங்கர் என்பது நிதர்சன உண்மை. அந்த நம்பிக்கை மீண்டும் காப்பற்றி இருக்கிறார். ஆதி, நந்தா, சிந்துமேனன், சரண்யா மோகன் என்று பிரபல நட்சித்திரங்கள் யாரும் இல்லாமல் படத்தை காண தூண்டிய விஷயம் இயக்குனர் சங்கர் மட்டுமே
முதல் காட்சியில் சிந்துமேனன் தண்ணீரில் இறந்து கிடக்கிறார். காவல்துறை புலன் விசாரணைக்கு வருகிறது. ஆதீ காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி மற்றும் சிந்துமேனனின் முன்னாள் காதலர். அதனால் சிந்துமேனனின் இறப்பை ஆராய்கிறார். இதை தொடர்ந்து சிந்துமேனனின் பக்கத்து வீட்டில் இருக்கும் பலர் ஒன்றின் பின் ஒன்றாக தண்ணீரின் காரணமாகவே இறக்கின்றனர். ஏன், எதற்காக இறக்கின்றனர் என்பதே கதை.
ஆதி: காவல்துறை அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்பட உலகத்துக்கு மற்றொரு நல்ல நாயகன் கிடைத்து விட்டார் என்றே கூற வேண்டும்.
நந்தா: அச்சாதேயில் நடிகர் பிரசன்னா வில்லன் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதே போல் இவருக்கு வலுவான கதாபத்திரம். மனைவின் மீது சந்தேகம் படும் பொது, கொலை செய்யும் போது அவருடைய நடிப்பு பளிச்
சிந்துமேனன்: துணை நடிகையாக இருந்த இவருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு அமையும் என்று அவரே எதிர்ப் பார்த்து இருக்க மாட்டார் என்பது உண்மை. காதலியாகவும், மனைவியாகவும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.
சரண்யா மோகன்: மறுபடியம் தங்கை வேடம். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நடிப்பிலும் குறைவில்லை குறிப்பாக ஆவி அவர் மேல் வந்த உடன் முகபாவனை அசத்தல்.
தமன்: இவர் இல்லை எனில் படம் இல்லை. பின்னணி இசை பார்த்தல் கண்டிப்பாக புரியம்.
இன்னொரு முக்கிய நபர் இயக்குனர் அறிவழகன். திரைக்கதையை லாஜிக் அடி படாமல், அடுத்தது என்ன என்பதை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார். கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கொலையலின் ஆத்மா பழி வாங்கும் கதை பழைய மாவு என்றாலும் இயக்குனர் புது வடிவத்தில் கொடுத்து, நான் தனியாக இருக்கும் போது தண்ணீரை பார்த்தால் பயம் ஏற்படுத்தியதே இயக்குனரின் வெற்றி.
படத்தொகுப்பில் தனி கவனம் செலுத்தப் பட்டு இருக்கிறது என்பது திரையில் காணலாம்.
ஆக மொத்தத்தில் கடந்த சில மாதங்களாக வரும் குப்பை, சாக்கடை திரைப்படங்களுக்கு மத்தியில் மீண்டும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் தரமான படம்.
முகபாவனை
சமீபத்தில் ஒரு வழிகாட்டிற்கு சென்று இருந்தேன்.அதில் நடத்துனர் ஆக இருந்தது ஒரு பெண். நான் கால் மேல் போட்டு அமர்வது, நகத்தை கடிப்பது, கால் உரையின் மேல் கையை மாட்டி கொண்டு நடப்பது என நம் சிறு சிறு தவறுகளை அப்பெண் நடித்துக் காட்டி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் போது.. அப்பெண்ணின் முகபாவனைகள், நடிப்பு, குழந்தை தனம் என்று பல, அங்கு இருந்த அனைவரையுன் இழுத்து கட்டி போட்டது. அதில் நானும் ஒருவன் என்பதில் மறுப்பதற்கு இல்லை. இப்படி அழகாக முகபாவனைகள் செய்ய முடியும் என்பதை நம்மூர் நடிகைகள் அவரிடம் பிச்சை எடுத்து தான் கற்று கொள்ள வேண்டும்.. மீண்டும் அதே வழிகாட்டிற்கு காத்து கொண்டு இருக்கும் சாதாரண வாலிபன் :)
Saturday, September 12, 2009
முன்னோருக்கு முன்னோர்கள்
ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், அரசன் எவ்வாறு ஆள வேண்டும், எது அதர்மம் எது தர்மம் என்பதை சொல்ல பல அறநெறிகள் இருந்தாலும், முக்கியமாக நான் கருதுவது வரலாறு/காவியம் ஆன ஒன்றே ஒன்று "மகாபாரதம்" மட்டும் தான். இராமாயணம், திருக்குறள் என்று பல இருந்தாலும் 4 முதல் 5 தலைமுறைகள், அரசியல், பண்பாடு, நாகரீகம், குரு மரியாதை, படிக்கும் முறை, வாழ்க்கை, கோவில் வழிபாடு முறைகள், யுத்த முறைகள், 64 கலைகள் என அனைத்தும் அடங்கிய ஒரே பொக்கிஷம் இந்த மகாபாரதம்.
உலக அளவில் இந்த வகையான வரலாறு/காவியங்களைப் பற்றி பார்த்தால், கிடைப்பது கிரேக்கர்களின் 'இலியத்'. இதை பற்றி எனக்கு தெரிந்திர விட்டாலும் போற்றப்பட வேண்டியது என்பது என் செவிஅறிவு. ஆனால் இப்போது ஒரு ஆச்சிரியப்பட்ட விஷயம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் இலியத் போன்ற வரலாறு/காவியங்களுக்கு எல்லாம் கொள்ளுத்தாத்தாவாக ஒரு காப்பியம் இருப்பதாக படித்தது. அக்காவியத்தின் பெயர் 'கில்கெமெஷ்' காப்பியம். பாபிலோனியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு (குறிப்பாக கி.மு.2700 ) வாழ்ந்த நிஜ கதாபாத்திரம் கில்கெமெஷ் என்பது உண்மையான ஆச்சிரியம். இந்த காப்பியத்திலும் மக்களை காப்பாற்ற கடவுள் தனிபிறவிகளை படைத்தது, மங்கையை வைத்து ஞானத்தை அழிப்பது, யுத்த தந்திரம் என அனைத்தும் அடங்கிய ஒரு காப்பியம். இதைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றை புரட்டுங்கள்..
வைகை – திரைவிமர்சனம்
எண்ணங்களை பயிரிடும் இந்த பதிவு எனது 100 பதிவு என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுப்பண செலவில் வரும் படங்கள் கூட நல்ல படம் என்பதை சமீபகாலமாக பல படங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. அப்பட்டியலில் இத்திரைப்படத்தை கண்டிப்பாக சேர்க்கலாம். நல்ல விளம்பரங்கள் இல்லாததாலும் மற்றும் வந்ததும்/போவதும் என இருப்பதால் படம் ஓடாமல் போய் விட்டது..
கதை: தன் காதலுக்காக உயிரை விடும் காதலன்..
ஒரு வரி கதை என்று கூறினாலும், எடுக்கப் பட்ட எதார்த்தம் கதையை உயர்த்தி விடுகிறது.மதுரை திருமங்கலத்தை சுற்றி கதைக்களம் ஓடுகிறது. கதாநாயகன் பாலா மற்றும் கதாநாயகி விஷாகா இருவருக்கும் நல்ல அறிமுகத்தை இப்படம் கொடுக்கிறது. மற்ற மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பார்த்த முகங்கள் தான். "ஆயிரம் தாமரை மொட்டுகளே" பாடல் கேட்டும் போது இளையராஜாவின் அருமை இங்கு தெரிகிறது. இப்பாடலை தவிர மற்றொருப் பாடல் கேட்டும் ரகம்.
மொத்தத்தில் மதுரையை மையப்படுத்தி எடுக்கப் படும் படங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் திரைப்படம் வைகை.
Labels:
திரைவிமர்சனம்,
மதுரை,
வைகை
Subscribe to:
Posts (Atom)