Monday, May 17, 2010

மியாமி - 2

விலங்குகளின் தீவை அடைந்த போது, கூட்டம் என்று எதுவும் இல்லை. என்னடா இது! சுற்றுலா தளம் தானே என்று யோசித்து கொண்டே உள்ளே சென்றால் தான் தெரிகிறது, அது முழுக்க சிறுவர்களுக்கான இடம் என்று தெரிகிறது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று ஒவ்வொரு பறவைகளாக, விலங்குகளாக பார்க்க ஆரம்பித்தோம்.

அடுத்தது மியாமியின் மீன்களின் அரும்காட்சியகம். நாம் இது நாள் வரை எத்தனை படத்தில் பார்த்து இருந்த டால்பின் என்ற மீனின் சாகசங்கள் கண் முன்னே. சுமார் ஒரு மணி நேரம். வித்தியாசமான கண் காட்சி. இதே சில காட்சிகள் உங்களுக்காக






மாலைப் பொழுதில் செல்ல முடிவு எடுத்து இருந்த இடத்திற்கு நேரம் இருந்ததால், அதற்கு நடுவில் சென்ற இடம் மிக பிரபலமான மற்றும் அரசாங்கமே அனுமதி கொடுத்து இருக்கின்ற சூதாட்ட விடுதி. உள்ளே போய் பார்த்து தலை சுற்றியது தான் மிச்சம். ஒன்றும் விளையாட தெரியவில்லை. நண்பர் அங்கூர் தான் பணத்தை இழந்தது தான் தெரியும். உடனே அங்கிருந்து மியாமியின் முக்கிய தலமான அதுவும் மியாமியின் தீவுகளை சுற்றி காட்டும் கப்பல் பயணம்.

அவ்விடம் மியாமியின் மைய பகுதியில் இருப்பதாலும், துறைமுகத்தில் இருப்பதாலும்  மேற்கு ஆசிய மக்கள், அமெரிக்காவின் வெள்ளை, கருப்பு இனத்தவர், மற்றும் மெக்சிகன் மக்கள் என்று களைகட்டி இருந்தது. அனைத்து வகையான அம்சம் கொண்ட அழகு மிக்க பெண்கள் மற்றும் ஆண்கள் என்று அவ்விடத்தில் இருந்தாலும், அதே போல் அதற்கு எதிர் மறையான மக்களையும் அங்கே காணமுடிந்தது. ஆனாலும் அங்கு இருந்த அனைவரின் உடை மற்றும் நடையில் வித்தியாசம் இல்லை. அனைவரும் பணகார கலை உடையவர்கள் என்று நிதர்சனம்.

கப்பல் பயணம் ஆரம்பிக்கும் முன்னர், அங்கே கறுப்பின மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. இசை கேட்டாலே தன்னால் ஆட்டம் வரும் என்பது இங்கே காண முடிந்தது. இதோ அந்த இசை நிகழ்ச்சியின் சில நிமிடங்கள் 



பயணம் தொடரும்

No comments: