Wednesday, January 12, 2011

திரைக்கலவைகள்

The A team – ஆங்கிலம்


அமெரிக்கா இராணுவத்தில் இரகசிய புலனாய்வு பிரிவில் பணி புரியும் நான்கு பேர்களை பற்றிய கதை. கதை என்று பார்த்தால் நான்கு பேரும் அவர்களது உயர் அதிகாரிகளால் ஏமாற்றப்பட்டு தூரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்படி சிறையில் இருந்து தப்பித்தார்கள் மற்றும் எப்படி தங்களின் அவபெயரை நீக்கினார்கள் என்பதே மீது சுவரய்யமான திரைக்கதை. அவர்களின் திறமை என்ன, அவர்களின் என்ன மாதிரியான வேலையை செய்பவர்கள் என்பதை படத்தின் முதல் முப்பது நிமிடத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம். இவர்களிடம் தான் சண்டை காட்சிகள் எப்படி எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். படத்தின் பலமே திரைக்கதை, நடிப்பு மற்றும் இசை. மேலும் இது அமெரிக்காவின் இராணுவ படமாக இருந்தாலும் மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சை பற்றி தெளிவான கொள்கை விளக்கம் இப்படத்தில் வருகிறது.

நேரம் கிடக்கும் போது கண்டிப்பாக இப்படத்தை காணலாம்.



Maryada Ramanna – தெலுங்கு



சமீபகாலமாக தெலுகு திரையுலகில் நான் கேட்டவரை அல்லது பார்த்த வரை நல்ல படம் என்று இல்லை. அப்படி பட்ட நிலையில் ஒரு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நகைச்சுவை நிறைந்த படம் தான் இது. கதாநாயகன் யார் என்று பார்த்தால் அத்தடு போன்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் சுனில். நம்ப தான் முடியவில்லை. மனுஷன் பிச்சு எடுக்கிறார்.அவருக்காக தான் இப்படமே.


கதை என்று பார்த்தால் எப்போதும் போல் இரண்டு குடும்ப சண்டை. முதல் குடும்பத்தின் உள்ள இரண்டு ஆண் மக்களில் ஒருவனை இரண்டாம் குடும்பத்தினர் கொன்று விடுகின்றனர். இதன் காரணமாக இரண்டாம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்ல, முடிவில் ஒரு சிறு பையன் தப்பித்து இருப்பான். அவனையும் கொல்ல அக்குடும்பம் காத்து கொண்டு இருப்பது தெரியாமல், அவ்வீட்டிற்கே சென்று, விஷயம் தெரிந்த உடன் எப்படி தப்பி செல்கின்றான் என்பதே மீதி கதை. இதில் நகைசுவையே விஷயம் தெரிந்த உடன், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க எப்படி சமாளிக்கிறான் என்பதே அருமையாக இயக்குனரும், நடிகரும் கொடுத்து இருப்பார்கள்.

முன்பே சொன்னது போல், நகைச்சுவைக்காக பார்க்கலாம்.

Unstoppable – ஆங்கிலம்



என்ன தான் பல இயந்திரங்களை மனிதன் கண்டுபிடித்தாலும் அதை தனக்கு கீழ் மட்டுமே வைத்து இருக்க வேண்டும். மனிதனை மீறி அது செயல் பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. அந்த இயந்திரம் சின்னதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, விளைவுகளை பற்றி நம்மால் யோசிக்க முடியாது. இந்த வரிகளை நினைவில் வைத்து, இயக்குனர் இப்படத்தை கொடுத்து உள்ளார். இந்த வரிக்கு சான்றாக நாம் தினமும் பயன் படுத்தும் இரயில் வண்டியை எடுத்து அதுவும் நம்மூர் வண்டி இல்லை, அமெரிக்காவில் ஓட கூடிய வேகமான இரயில், நம்மை மறந்து நாமும் அந்த இரயிலுடன் பயணிப்பதே கதை. கதையின் கரு என்னவென்றால் ஓட்டுனர் இல்லாத இரயில் எப்படி இயங்கும் மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை இயக்குனர் கொடுத்து உள்ளார்.

இரயில் மெதுவாக புறப்பட்ட உடன், ஓட்டுனர் வழிதடத்தை சரி செய்ய வண்டியை கண்ட்ரோல் செய்யும் கம்பியை வைத்து கீழே இறங்க, அந்த கம்பி சரியாக அமராததல், கண்ட்ரோல் இறங்கி மீண்டும் இரயிலின் வேகம் மீண்டும் பிடிக்கிறது. ஓட்டுனர் வேகமாக முயற்சித்தும் இரயிலை பிடிக்க முடியவில்லை. நேரம் செல்ல செல்ல, இரயில் மணி நேரம் வேகத்திற்கு செல்ல ஆரம்பிக்கிறது. விஷயம் அமெரிக்காவின் மேல் இடத்திற்கு போக, போலீஸ், இரயில்வே துறை என்று அனைத்து பிரிவுகளும் இரயிலை நிறுத்த முயற்சி கொள்கின்றனர். ஆனால் முடியுமா என்று இரயில் வேகம் செல்கிறது.

நம்மை சூடு ஏற்றும் காட்சிகள் சில

இரயில் இரசாயன சம்பந்தபட்ட திரவங்கள் இருக்கும். அதனால் அந்த இரயில் கவிழ்ந்தாலும் விளைவுகள் பல இருக்கும். அதனால் இரயில் கவிழாமல் நிறுத்த வேண்டும்.

இரயில் செல்லும் வழி தடத்தில் அதற்கு எதிராக பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வரும் ஒரு சுற்றுலா இரயில் வருகிறது

நாயகர்கள் ஒட்டி செல்லும் இரயிலும் எதிரே வருகிறது.

இரயில் செல்லும் வழியில் குறிப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற இடத்தில், வேகமாக சென்றால் இரயில் கவிழ்ந்து விடும். அப்படி பட்ட வழி தடத்திலும் நம் வண்டி பயணம் செல்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட வேக அளவை தாண்டினால், கண்டிப்பாக வேண்டி கவிழ்ந்துவிடும் அதுவும் அது விழும் இடம் பெட்ரோலிய பொருட்களை சுத்தம் செய்யும் இடம். ஆக விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும்

இத்தனையும் மீறி நாயகர்கள் எப்படி இரயிலை நிறுத்தினர் என்பதே கதை. பார்க்க அமர்ந்த உடன் நம்மால் வேறு விஷயத்தை பற்றி யோசிக்கவே முடியாத அளவு கட்டி போட்டதே இயக்குனரின் வெற்றி.


The Tourist – ஆங்கிலம்



இந்த மாதிரியான மொக்கை படத்தை பார்த்ததே பெரிய விஷயம். நேரம் செலவழித்து அதை பற்றி எழுத விருப்பம் இல்லை.

No comments: