Saturday, January 01, 2011

திரைக்கலவைகள்

வந்தே மாதரம்



வந்தே மாதரம் + அர்ஜுன் என்று பார்த்த உடன், அடுத்த படத்தை பார்ப்பதற்குள், மெகா ஸ்டார் மம்மூட்டி + ஹென்றி தாயாரிப்பு என்று தெரிந்த உடன் படம் ஓட ஆரம்பித்தது. பாதி படம் முடிவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. மெகா ஸ்டார் கதை கேட்டு நடிக்கவில்லை என்றால் இது தான் கதி என்பதை இப்போதாவது அறிந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

வழக்கமான பாகிஸ்தான் தீவிரவாதிகளை, தமிழ்நாடு போலீஸ் வெற்றி கொள்ளும் அர்ஜுன் படம்.

பொழுது போகாமல் சுவற்றை முட்டும் நிலை வந்தாலும் கூட இப்படத்தை பார்க்க கஷ்டம் தான்.

நகரம்



கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் என்பதை மறுபடியும் தலைநகரம் திரைப்பட சாயலில் சொல்லி இருக்கும் படம். ஆனால் அப்படத்தில் இருந்த விறுவிறுப்பு இப்படத்தில் இல்லை. அதே போல் இயக்குனர் சி. சுந்தர் எப்போது நடிப்பை விட்டு விட்டு மறுபடியும் இயக்குனர் வேலைக்கு திரும்புவார் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது.

பொழுது போகாமல் இருக்கும் போது, அப்ப அப்ப சில காட்சிகளை பார்க்கலாம்.

ரத்த சரித்திரம்



பழிக்கு பழி என்ற கொடூர எண்ணத்தை போற்றி பழி வாங்கலாம் என்ற விதையை மக்கள் மனதில் விதைக்கும் திரைப்படம். இதற்கு என்ன தான் மகாபாரதம் என்ற இதிகாசத்தை முன்வைத்தல் கூட கதையை ஏற்று கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இப்படம் மனதில் நிற்பதற்கு

திரைகதை,
இசை
ஒளிப்பதிவு
நடிப்பு
இயக்குனர்.

கண்டிப்பாக பெரிய திரையில் பார்க்கவேண்டிய படம்.

விருதகிரி



மதுரை மண்ணின் மைந்தன் நீண்ட நாட்கள் கழித்து நடித்து மற்றும் இயக்கி இருக்கும் படம் என்பதால் பார்க்க வேண்டும் என்று இருந்தேன் அது கண்டிப்பாக நகைப்புக்காக மட்டுமே. ஆனால் படம் வெளிவந்து ஒருவாரம் கழித்து விமர்சனத்தை பார்த்தால் கதை நல்ல கதை என்றும், திரைகதை தேவலாம் என்று தெரிந்த உடன் கண்டிப்பா பார்க்க வேண்டும் என்று பார்த்தேன்.


தற்போது நடக்கும் ஆட்சியில் உள்ள குறைகளை, கேப்டன் அவர்கள் எப்படி படத்தில் கொடுத்து உள்ளார் என்பது தான் அவரது திறமை. அதில் வெற்றியும் பெற்று உள்ளார் தான் கூற வேண்டும்.

கண்டிப்பாக பெரியதிரையில் நகைச்சுவையுடன் படத்தை காணலாம்..

மன்மதன்அம்பு



இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பெயரில், கமல்ஹாசன் தன்னுடன் நடித்த நான்கு நடிகர்களை கொண்டு கொடுத்து இருக்கும் மொக்கை படத்தை பற்றி எழுத எனக்கு விருப்பம் இல்லை.

No comments: