Tuesday, July 13, 2010

விமர்...

பயம் அறியான்: 


கத்தி எடுத்தவனுக்கு கத்தியல தான் சாவு என்பதை மறுபடியும் கூறி இருக்கும் படம். படம் சுமாராகவே இருந்ததாலும், இந்த படத்திலும் அதே பிடிக்காத விஷயம் இருக்கிறது. அது எப்படின்னு தெரியலே, கல்லூரி போகின்ற பெண்களுக்கு ரவுடிகளையும், போக்கிரி தானம் பசங்கள மட்டும் தான் பிடிக்கிறது. முடியலே

லிடர் - தெலுகு


ஆண்டுக்கு பத்து நல்ல படங்களை தரும் தெலுகு திரை உலகம், அந்த வரிசையில் இந்த படத்தையும் தந்து இருக்கிறது. அட்டகாசமான திரைக்கதை மற்றும் இயக்கம். சாகும் போது ஆந்திர முதல் அமைச்சர், தன் மகனை பார்த்து நாட்டை நீ தான் ஆள வேண்டும் என்று கூறி இறந்து விட;அதே நேரத்தில் அக்கட்சியில் இருக்கும் முக்கிய உறுப்பினர்கள் முதல் அமைச்சர் போட்டிக்கு வர, அதை நம் நாயகன் எப்படி எதிர் கொள்கிறான் மற்றும் எப்படி நாட்டை ஆளுகிறான் என்பதை நல்ல திரை கதையில் கூறி இருக்கின்றனர். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

அம்பாசமுத்திரம் அம்பானி:


நல்ல கதையை தேடி அதில் நடித்து மீண்டும் கருணாஸ் நல்ல நடிகர் என்று நிருபித்து விட்டார் என்று கூற வேண்டும். கிளைமாக்ஸ்ல் ரயில் நிலையத்தில் "நான் யாருக்கும் தூரோகம் பண்ணலையே" என்று கூறி அழும் போது, மனதில் அவர் நின்று விடுகிறார். இரண்டாம் பாகத்தில் பண பிரச்சனை மற்றும் தூரோகம் என்று குடும்ப படம் போல் போனாலும், நம் வாழ்க்கையில் நடக்கும் கதை போல் இருப்பதால் நல்ல படம் தான் என்று தோன்றிவிடுகிறது. சொல்லப்பட வேண்டிய இன்னொரு விஷயம் நசைக்சுவை. கருணாஸ் படத்தில் நகைச்சுவை இல்லை என்றால் எப்படி. லிவின்ஸ்டன் மற்றும் மயில்சாமியின் நகைச்சுவை படத்துடன் இருப்பதாலும், எதார்த்தமாகவும் இருப்பதாலும் நம்மை அறியாமல் சிரிப்பு வருவது உண்மை தான். இதே போல் கருணாசின் நல்ல படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

No comments: