Friday, July 09, 2010

விமர்...

திரைப்படங்களில் பல ரகம் உண்டு. அதில் படம் முழுவதும் நன்றாக சென்று, கடைசியாக முடிவில் மட்டும் சொதப்புவது என்பது கடைசி ரகம். இம்மாதிரியான படங்கள் சில நேரங்களில் போட்ட பணத்தை பார்த்து விடும். அப்படிப் பட்ட படங்கள் தான் இவை.

முன்தினம் பார்த்தேனே


கல்யாணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களைப் பற்றிய படம். இருவருக்கும் வேலை,  நண்பர்கள், பிரச்சனைகள் என்று இருந்தாலும் காதலில் எவ்வாறு முடிவு எடுக்கின்றனர் மற்றும் வாழ்க்கை எப்படி அமைகிறது என்ற சாதாரணமான கதை தான். ஆனால் நண்பர்களின் நகைச்சுவை மற்றும் அருமையான பாடல்கள். ஒரு தடவை பார்க்கலாம்.

கிக் - தெலுகு


ரவிதேஜா, ஷ்யாம், இலியான என்று பெரிய குழுவுடன் வந்த திரைப்படம். ரவிதேஜாவின் வித்தியாசமான குணத்தின் நடிப்பு, இலியானவின் கவர்ச்சி, மற்றும் ஷ்யாமின் பொறுமையான நடிப்பு என்று படம் முழுவதும் இருந்தாலும் கிளைமாக்ஸ் பார்த்தால் என்னடா இப்படி ஒரு மொக்க படத்துக்கு வந்தோமா என்று தோன்றிவிடும். ஆனால் கிளைமாக்ஸ் தவிர படத்தை ஜாலியாக பார்க்கலாம். 

No comments: