Sunday, July 11, 2010

லாஸ் வேகஸ் - 2

பினிக்ஸ்: கேள்விப்படும் போது அது பாலைவன ஏரியா என்றும், வெயில் சுட்டு எரிக்கும் என்றும் கூறியது உண்மை என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. ஊர் என்னவோ பெரிய ஊர் தான். ஆனால் அதை சுற்றி பெரிய காய்ந்த மலைகளும், பாலைவன இடமும் தான். பினிக்ஸ்ல் இருந்தது லாஸ் வேகஸ் வரை இந்த மலைகளிலும், பாலைவனத்திலும் தான் பயணம் செய்து ஆக வேண்டும் என்று பயணம் ஆரம்பித்த போது தான் தெரிந்தது.


இரவு முழுவதும் தூக்கவில்லை என்றாலும், காரிலும் கண்டிப்பாக தூக்ககூடாது என்ற முடிவுடன் தான் ஏறினேன். நண்பர் ஒருவர் கார் ஓட்டும் போது நம் தூங்கினால், நாம்மை பார்த்து அவருக்கும் தூக்கும் வரும் என்ற எண்ணத்திலும், அதே போல் அவர் சிறு கண் அசைந்தாலும், நாம் அனைவரும் மொத்தமாக கண் மூட வேண்டியது தான் நினைத்து, கஷ்டப்பட்டு அமர்ந்து இருந்தோம். காரில் உள்ள குளிர் காரணமாக என்னை அறியாமல் ஒரு மணி நேரம் தூங்கியது, முழிப்பு வந்த பிறகு தான் அறிந்தேன். கொடுமையான வெயில் நான்கு மணி நேர பயணம் பிறகு, சோதனை சாவடியின் காரணமாக கிட்ட தட்ட ஐந்து மைல் தூரத்திற்கும் மேல் வரிசையாக கார் நிற்கிறது.  இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊர்ந்து செல்ல வேண்டி இருந்தது. எல்லோருடைய மனதிலும் ஒரே கவலை, லாஸ் வேகசில் சுற்றி பார்க்க வேண்டிய தினத்தை இப்படி காரிலே போய் விடிகிறதே என்ற எண்ணம். அருகில் செல்ல செல்ல தான் விஷயம் அறிய முடிந்தது. ஆம் செல்லும் வழியில் "உவர் அணை" (Hoover Dam).




இரண்டு மலைகளுக்கு நடுவில் இந்த அணை அமைந்து உள்ளது. இவ்வழியில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக இந்த அணையின் வழியாக தான் செல்ல வேண்டும். செல்லும் வழியில் மக்கள் கண்டிப்பாக வண்டியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழிந்து தான் செல்வர்கள். அதனால் தான் இவ்வளவு டிராபிக் ஆகிறது. இந்த டிராபிக்கை சரி செய்ய, ஒரு மேம்பாலம் அமைக்கபட்டு கொண்டு இருக்கிறது. இரண்டு மலையை இணைக்கும் பாலம். பார்த்தல் தான் அதனுடைய பிரம்மாண்டம் தெரியும். நாங்களும் அங்கு சிறுது நேரம் இருந்து விட்டு, மறுபடியும் பயணம் ஆரம்பித்து. 


முப்பது நிமிடத்தில் லாஸ் வேகஸ்யின் அறிவிப்பு பலகை பார்த்த போது தான், உள்ளத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் ஒரு உற்சாகம். ஊரின் எல்லையை தொட தொட, உடம்பில் இருந்த அனைத்து உளைச்சலும் காணாமல் போய் கொண்டு இருந்தது. லாஸ் வேகஸ்க்கு உள்ளே நுழையும் போது, பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பாலைவனத்தில் இப்படி ஒரு சொர்க்கமா என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டு இருந்தது.


3 comments:

Nazeer Ahamed said...

Hi..Is it on July 4 week end..? same experience with me as well..

AR SURIAMOORTHY said...

Las Vegas parthuvittal veruathuwom ulagathil parka vendam.THE WHOLE WORLD UN LIMITED HAPPINESS,ENTERTAINMENTS,LUXURIOUS,SIGHT SEEING UNDER ALL IN ONE ROOF IS CALLED LAS VEGAS.I VISITED 2014.ENJOYED ALL .

AR SURIAMOORTHY said...

AR SURIAMOORTHY.MOBILE 919443709037.