Monday, June 21, 2010

கலவை விமர்

ஸ்ரேக் - ஆங்கிலம்

இரவு 09:55 மணிக்கு திரைப்படம். நாங்கள் திரை அரங்கின் பார்கிங் இடத்திற்கு வரும் போது நேரமோ இரவு 09:50. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து, காரை நிறுத்தி விட்டு வேகமாக டிக்கெட் வாங்க ஓடினோம். அன்றைக்கு பார்த்து வீட்டில் இருந்து போன் அதுவும் முக்கியமான விஷயமாக. வீட்டில் கூட அப்புறமாக பேசுகிறேன் என்று கூறி விட்டு விட்டு, கவுன்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கிற்கு ஓடினோம். 3D படம் என்பதால், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பின் சீட்டில் தான் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இந்த பதற்றம் காரணம். ஒரு வழியாக உள்ளே சென்று பார்த்தல், ஒரே அதிர்ச்சி.  அந்த முழு அரங்கில் நாங்கள் மட்டுமே. ஐயோ, ஐயோ. முடியலே.  எங்கள் மூன்று நபருக்கு ஆகா, படத்தை திரை இட்டார்கள். திரைப்படம் நன்றாக தான் இருந்தது என்பது வேறு விஷயம்.


வேதம் - தெலுகு
தெலுகு திரை உலகமும் பல நேரங்களில் நல்ல திரைப்படங்களை தயாரித்து காட்டும். அப்படி பட்ட நல்ல திரைப்படம். நல்ல கதை, திரைக்கதை, மற்றும் நடிகர்கள். மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் எவ்வாறு இருந்தார்களோ, அதோ போல் இப்படத்தில் அரசு பொது மருத்துவமனையில். கண்டிப்பாக திரை அரங்கிலேயே இப்படத்தை பார்க்கலாம்.


பாசஞ்சர் - மலையாளம்
ஒரு சாதாரண மனிதனின் நல்ல எண்ணம், பல பேருடைய உயிரை காக்கிறது. நல்ல நடிகர்கள் மற்றும் திரைக்கதையுடன் அமைந்த படம். இம்மாதிரியான கதையை தேர்ந்து எடுத்து, திரையிட்ட இயக்குனரின் தைரியத்திற்கு சலாம்.


ராஜநீதி - ஹிந்தி
அண்ணன்,தம்பி வாரிசுகள் மும்பையின் முதல் அமைச்சர் பதவிக்காக போட்டி இட்டு யார் வெல்கின்றனர் என்பது தான் கதை. வழக்கமான அரசியல் திரைப்படம் என்றாலும், திரைக்கதை தான் இப்படத்தின் பலம். இப்படத்தை பார்க்கும் போது, கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு இதே மாதிரியான சூழல் தமிழ் நாட்டிற்கு வரும் என்ற எண்ணம் தோன்றும் என்பதில் ஐயம் இல்லை.

No comments: