Thursday, April 15, 2010

காதல் கடிதம் - பத்திரிகை - சிறுகதை

நியூயார்க், நமது கிருஷ்ணாவின் கனவு நகரம். சின்ன வயதில் இருந்தே (அவனது மாமா அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தார்) அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு செல்ல வேண்டும் என்று லட்சியமாக இருந்தது. கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரம் இது. என்ன தான் சென்னை மற்றும் பெங்களூர் என்று வேலை பார்த்து இருந்தாலும், கனவு மற்றும் காதல் வாழ்க்கை இல்லை என்று மனதில் இரண்டு வருத்தம் இருந்து கொண்டு தான் இருந்தது... குடும்ப பொறுப்பின் காரணமாக தனிநபர் வாழ்க்கை கூட சந்தோஷமாக இருந்ததில்லை. வாழ்க்கையில் நம்ப முடியாத எதிர் பாராத திருப்பம். அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய விசா கிடைத்தது அதுவும் நியூயார்க்க்கு. 

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
                         என்று பாடலுடன் நியூயார்க்கில் முதல் காலடி அத்துடன் இத்தனை நாட்கள் அனுபவிக்கத வாழ்க்கை இப்போது வாழ வேண்டும் என்று நினைவுடன். முதல் மாதம் அமெரிக்காவில் நிலைத்து கொள்ளவும், அதே நேரம் நம்மூர் நண்பர்கள் நாகூர் மற்றும் சதீஷ் கிடைக்கவும் சரியாக இருந்தது. மூன்று பேரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ தொடங்கினர் அதுவும் பசங்க பாணியில் 

இரண்டு மாதம் முடிந்த நிலையில், கிருஷ்ணாவின் மனம் காலையில் இருந்தே மகிழ்ச்சியாகவே இருந்தது.. காரணம் பல தடவை யோசித்து பார்த்தும் கிடைக்கவில்லை. சரி தான் இன்னைக்கு என்ன தான் நடக்குதுன்னு பாப்பமே என்று அலுவலகம் சென்று வேலை பார்த்து கொண்டு இருந்த போது கல்யாணி நுழைந்து, அவனை தாண்டி சென்று கிருஷ்ணாவின் மேல் அதிகாரி பார்த்து விட்டு நம்மவர் வேலை செய்யும் அதே குழுவில் வேலைக்கு சேர்கிறாள். கல்யாணி, ஒரு அழகு தேவதை என்று சொல்லி கொள்ளும் நிலையில் இல்லாவிட்டலும், பார்த்த உடன் மனதில் நிற்கும் ஒரு முகம் மற்றும் குடும்ப பெண்ணுக்கு தேவையான அம்சம் உடைய திருமணம் ஆகாத பெண்  ஒரு வாரம் கடந்த நிலையில் முதல் முறையாக கிருஷ்ணாவுடன் பேச


கல்யாணி: ஹாய்ஐ எம் கல்யாணி

கிருஷ்ணா: சோ வாட்? என்று கேட்க, உடனே கல்யாணி கோபத்துடன் திரும்ப மறுபடியும்

கிருஷ்ணா: சாரி கல்யாணி, முதல் சந்திப்பு ஏடாகூடமாக  இருந்தால் மட்டும் தான் என்னை மறக்க மாட்டிங்க. அதனால தான் இப்படி கேட்டேன். ஐ எம் கிருஷ்ணா.. வாட் கேன் ஐ டூ பார் யு என்று கேட்க.

பேச்சு தொடர்கிறது.

கணிப்பொறியில் உள்ள நாட்கள் வேகமாக நடந்து கொண்டு இருக்க, கிருஷ்ணாவிற்கு கல்யாணியின் நெருக்கம் அதிகம் ஆக தனது இரண்டு நண்பர்களை விட்டு விட்டு அவளுடன் நியூயார்க் முழுவதும் பறவைகளாக வலம் வருகின்றனர். நண்பர்கள் இருவரும் என்னவென்று கேட்க, கிருஷ்ணா முதல் முறையாக தனது காதலை அவர்களிடம் கூற

நாகூர்: மௌனம் பேசியதே சூர்யா வடிவில், இத்தன நாள் நல்ல தாண்ட இருந்த. தீடிர்ன்னு எங்கிருந்துட காதல், கீதல்ன்னு வருது. எப்படியோ நல்ல இருந்த சரிதான். பத்துக்கோ என்று கூறி முடிக்க
சதீஷ்: எப்பவுமே தல இப்படி தான். அத எல்லாம் கண்டுக்காத. நீ என்ஜாய் பண்ணு என்று கூற. கிருஷ்ணா முகத்தில் ஒரே மகிழ்ச்சி.

சென்னையில் இருந்து கொண்டு வந்த டைரியில் ஒரு நல்ல முகூர்த்த நாளை மற்றும் நேரத்தை பார்த்து, தமிழ் திரைப்படங்களை அதிகம் பார்த்து இருந்ததினால், கிரேடிங் கார்டு வைத்து காதலை அவளிடம் சொல்ல முடிவு எடுத்து காத்திருந்து, அந்நாளும் வந்தது. தேனீர் அருந்தும் நேரத்தில் கல்யாணி, கிருஷ்ணாவிடம் வந்து வா தனியாக பேசலாம் என்று கூற, மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சி.

கிருஷ்ணாவும் கார்டை எடுத்து மறைத்து கொண்டு வர மேற்பரப்பில் இருவரும் தனியாக இப்போது. கிருஷ்ணா தன் வலது கையில் கார்டை வைத்து கொண்டு மறைத்து பின்னால் வைத்து இருக்க, கல்யாணி தன் வலது கையில் அவளது கல்யாண பத்திரிக்கை எடுத்து,

கல்யாணி: முதல் பத்திரிகை உனக்கு தான் தர்றேன். கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும் என்று கூறி கொண்டு அழைப்பிதழை கொடுக்க
வலது கையில் இருந்த கார்டை பின்னாலேயே இருந்த குப்பையில் போடும் போது, தன் இடது கையில் பத்திரிகை கைக்கு வர,

கிருஷ்ணா: கண்டிப்பா வருவேன்.. முதல்ல பார்ட்டி எப்ப என்று கூறும் போது ஒரு துளி கண்ணீர் இரண்டு கண்களிலும்


முதல் முடிவு:

கல்யாணி அவனின் கண்ணீரை கவனித்து, அதே நேரத்தில் குப்பையில் விழும் கார்டை பார்த்து எதோ இருக்கிறது என்று அறிந்து கொள்கிறாள். கிருஷ்ணா பத்திரிகை படிக்கும் வேளையில் குப்பையில் அடுத்த கார்டை எடுத்து, படித்து காதலை அறிந்து கொள்கிறாள்.

கல்யாணி: டேய், இத ஏன்டா முன்னாடியே என் கிட்ட சொல்லல. என்னை எமத்திட்டேயே. உன்ன விட எனக்கு இந்த கல்யாணம் முக்கியம் இல்ல. சொல்லு இப்பவே நம்ம கல்யாணம் பண்ணி கொள்ளலாம் 
என்று கூற, அவள் கண்களிலும் இரு துளி கண்ணீர்.

இரண்டாம் முடிவு:

கிருஷ்ணாவின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டு வேளையில், அவள் மேல் உள்ள கோபத்தில் கண் முழுவதும் சிவப்பு நிறமாக மாற, கண் பக்கத்தில் எதயோ தேடிகிறது. சற்று தூரத்தில் பூ செடிகளை சீராக்கி விட வைத்து இருக்கும் கத்திரி கோல் தெரிய, கிருஷ்ணா வேகமாக ஓடி அதை எடுத்து கல்யாணியை கொலை செய்ய ஓடி வர, கல்யாணியும் அதை பார்த்து கத்த

கிருஷ்ணாவின் அப்பா: ஒக்க மக்க, பத்தாவது படிக்கிறேன்னு பயம் எதேவது இருக்க பாரு. எக்ஸாம்ம வச்சுகிட்டு எப்படி தூங்கி கிட்டு இருக்கான் பாரு என்று அவன் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்ற, கனவில் இருந்து கிருஷ்ணா வெளிய வர சரியாய் இருக்கிறது.

4 comments:

Mohan Dass said...

Machi.. Inda LOVE neeyum vida maatiya da.. ethana peruthan LOVE STORY ELUTHI Kolluvinga...
But Try Panra. Nalla Eluthu..plz inda kathala mattum eluthatha..

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

ok mappu.. I will try to write story with different concept other than love :)

Anonymous said...

Sir nenga niraya cinema paapenga pola.
Unga manasukula niraiveraadha aasaigal niraya irukum pola.
Freeya vidunga ungalukum kaalam varum. :)

Anonymous said...

செம மொக்கை