Monday, February 09, 2009

பட்டிமன்றம்

பட்டிமன்றம் என்றால் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் அத்துடன் உடனே நம் நினைவுக்கு வருபவர்கள் லியோனி, பாப்பையா, விசு போன்றவர்கள்... இதில் எனது மனது அளவில் பட்டிமன்றத்துக்கே என இருப்பவர் லியோனி மட்டும் தான். ஏனெனில் இவர் மதுரை தமிழ் மொழியை பயன்படுத்தியதனால் என்னவோ. முன்பே நான் எழுதிய ஒரு கட்டுரையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை சென்றதாக குறிப்பிட்டு இருந்தேன். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்ல குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். வேலூரில் இருந்து பேருந்து புறப்பட்ட உடன் "பழைய பாடலா அல்லது புதிய பாடலா" என்ற திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவை பட்டிமன்றத்தை கேட்க ஆரம்பித்தேன். இதே பட்டிமன்றத்தை நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் என்வீட்டில் கேட்டு இருக்கிறேன். அப்போது அறியதா வயதில் எதோ ஒன்று என விட்டுவிட்டேன். இப்போது அறிந்த வயதில், என் கைத்தொலைப்பேசி வழியாக கேட்கின்ற போது தான் அதனுடைய முக்கியத்துவம் தெரிகிறது. ஒவ்வொரு பேச்சாளரும் அவர்களுக்குரிய தலைப்பில் ஒவ்வொரு பாடலையும் எடுத்து நகைச்சுவையாக விளக்கிய விதம் ஆணி அடித்தது போல் இருந்தது. பேச்சாளர்கள் காதல், குடும்பம், சமுதாய அக்கறை, தத்துவம் போன்ற தலைப்புகளில் எடுத்துக்கொண்ட பாடல்களில் சில பாடல்கள் கேட்டு இருந்தாலும் நுணுக்கமா ஆராய்ந்தது இல்லை. பல உதாரண பாடல்கள் நான் கேட்காத பாடல்கள். அவ்வளவு அருமையான பாடல்கள் இருக்கின்ற என்று அன்று தான் தெரியவந்தது. இதை விட பட்டிமன்ற விவாதம் ஆரம்பத்திலும், முடிவிலும் நடுவர் பேசியது தான் வயிறை புண் ஆக்குகின்ற இடம். முழுமையான ஒரு விவாதம் நடைப்பெற்று முடிவு தெரிந்தது என மனநிறைவுக்கு வந்து நான் திரும்பி பார்த்த போது, அண்ணாமலையார் குடிக்கொண்டு இருக்கும் திருவண்ணாமலை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் பட்டிமன்றத்தை கேட்டு மகிழுங்கள்.

வாழ்க வளமுடன்..

No comments: