மக்களால் மக்களுக்குக்காக நிறுவப்பட்ட மக்கள் ஆட்சி என்ற அரசாங்கம் தற்போது மக்களுக்கு பல்வேறு வகையில்/வழிகளில் மக்களுக்கே தெரியாமல் ஏமாற்றி பிழைக்க ஆரம்பித்து விட்டனர். இதை அரசாங்களுக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு தெரியாமல் வரி வாங்கும் அளவுக்கு அறிவாளி ஆகி விட்டார்களா அல்லது சாதரண குடி மக்களுக்கு இன்றும் பொது அறிவு கிட்டவில்லையா என்பது எனது மனகேள்வி. உதாரணத்திற்கு நான் கண்ட ஏமாற்று வழிகள்…
சொகுசு பேருந்து
மக்கள் வசதிக்காக அரசாங்கம் விட்ட பேருந்து தான் இது. முதலில் ஒன்று/இரண்டு என புதிய சொகுசு பேருந்தினை இயக்கி, பின்பு மெதுவாக புதிய பேருந்தினை மக்களுக்கு தருகிறோம் என்ற பெயரில் பழைய பேருந்தினை நிறுத்தி விட்டனர். எடுத்துக்கட்டாக பழைய பேருந்து பயண சீட்டு ரூ3.50. ஆனால் புதிய சொகுசு பேருந்து பயண சீட்டு ரூ 8. பேருந்து நிலையத்தில் "சதா பஸ் எல்லாம் வரதப்பா" என்று பிச்சைக்காரன் கூறும் அளவு வந்துவிட்டது. பின்னர் சாதரண ஜனங்கள் எப்படி தான் பிழைப்பார்கள். பெட்ரோல்/ டீசல் விலைக்கு ஏற்ப பேருந்து பயண சீட்டு விலையை 50 பைசா கூட ஏற்றினால் போராட்டம் வெடித்துவிடும் என தெரிந்து கொண்டு, இப்படி மறைமுகமாக விலை உயர்ந்த புதிய சொகுசு பேருந்தினை கொடுத்து விட்டனர். இதை விட கொடுமையான விஷயம், இந்தியாவிலே தமிழகத்தில் தான் மிக குறைந்த பேருந்து பயண சீட்டு என்ற அறிக்கை வேறு.
இப்படி பொது ஜனங்களை ஏமாற்றி பணத்தை புடுங்குவதற்கு பதிலாக இலவசமாக தந்துக்கொண்டு இருக்கின்றவற்றை நிறுத்தினால் போதும் பெருமளவு நிதி குமை குறையும் அல்லது மக்களிடம் கேட்டு கொண்டாலே கண்டிப்பா உதவி செய்வார்கள்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி என பெருமையுடைய, அதிக கிராம மக்களின் கணக்குகளை உடைய, நாட்டின் பொருளாதரத்தை காக்கும் பெறுப்பில் உடைய வங்கி கூட மக்களிடம் ஏமாற்றி பணத்தை கேவலமா பிடுங்கி சாப்பிடுகின்றனர் என்பது மிகுந்த வருத்தம் தரும் விஷயம். உதாரணமாக என் கணக்கு மதுரை-பசுமையில் உள்ளது. நான் மதுரை-புதூரில் இருந்து சிறு தொகையை என் கணக்குக்கு போட்டால் ரூ.25யை வங்கி எடுத்து கொள்கிறது. ஏன் என்று கேட்டால் வேறு வேறு வங்கி என்ற விளக்கம் கூறுகின்றனர். கணினி மயமாக்க பட்ட நிலையில் இது நம்பும் படியாக இல்லை. ஆனால் வலை தளத்தில் இருந்து வேறு தனியார் வங்கியிலிருந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கிற்கு பரிவர்த்தகம் செய்தால் வரி இல்லை. இதற்குரியாக காரணம் யாருக்கும் தெரியவில்லை. முன்பே கூறியது போல் அதிக கிராம மக்களின் கணக்குகளை உடைய இவ்வங்கி கிராம மக்களிடம் பணத்தை பிடுங்குவது வேதனையான விஷயம்.
இன்னும் எத்தனை காலம் தொடர போகிறதோ இந்த ஏமாற்று வழிகள்?
1 comment:
hahahahahaha.. Ayooo ayooo
Post a Comment