Sunday, January 18, 2009

ஆன்மிக சுற்றுலா

தொழில் நூட்ப கல்லூரி நான் படிக்கும் போது ஒரு நாள் சுற்றுலா என்று அடிக்கடி கொடைக்கானல் போன்ற பகுதிக்கு செல்வோம். அதில் விதிவிலக்காக முதல் வரிசையில் அமர்த்திருக்கும் நபர்கள் மட்டும் தான் சேர மாட்டர்கள். பழைய நண்பர்கள் உடன் நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் சுற்றுலா என தொடங்கிய பேச்சு வார்த்தையின் போது முதல் வரிசை நண்பர்கள் சேர்ந்து தான் ஆச்சரியம். முதலில் திருமலையில் ஆரம்பித்து வேலூர் பொற்கோவிலில் வந்து முடிந்தது. தமிழ்நாட்டு வரைபடத்தில் இக்கோவிலை காணும் போது திருவண்ணாமலையும் அருகில் இருப்பதை அறிந்து அதையும் சேர்ந்து கொண்டோம். இதை விட ஆச்சரியம் அன்று கிரிவல நாள். நண்பர்கள் சிலபேர் இரண்டு கோவிலும் ஒரே நாளில் கஷ்டம் என்று கூறினாலும், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நினைத்து பயணத்தை தொடங்கினோம்.


வேலூர் பொற்கோவில்:

நாங்கள் வாசலில் நின்று விசாரித்த பொது, திருமலையை போன்று கை தொலைபேசி, புகைப்பட கருவி என எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லாததினால், அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியாக பணத்தை கொடுத்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை. நாங்கள் சென்ற வேளை மதியம் என்பதால், தேவஸ்தான அன்னதான அறைக்கு சாப்பிட்டோம். அன்னதான அறை திருமலை போன்று இருந்தாலும், சாப்பாடு பணம் சொடுத்து தான் சாப்பிட்டோம். பொற்கோவிலை பார்க்க செல்ல தொடங்கிய போது, கூண்டில் போட்டு அமைத்து விட்டார்கள். இதுவும் திருமலையை பார்த்தே செய்து இருந்தார்கள். பொற்கோவிலுக்கு என தனியாருக்கு சொந்தமான பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி செய்து கொண்டு இருப்பத்தை பார்க்க முடிந்தது. இதை தவிர பல பாதுகாப்பு கூண்டை தாண்டி ஒரு வழியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் வடிவிலான ஒரு வாசலுக்கு வந்தோம். இப்போது தான் பொற்கோவிலுக்கு வந்ததாக ஒரு எண்ணம் வந்தது. வேலூர் என்றாலே வெயில் தான் நினைவுக்கு வரும். ஆனால் விண்மீன் பாதையில் ஒருவிதமான குளிர் இருந்தது. எல்லா பாதைகளை கடந்து பொற்கோவிலை தரிசத்து வெளியில் வந்தோம். பொற்கோவிலில் கண்ட அழகை நான் இங்கு விவரிக்க வில்லை. ஏன் என்றால் அவ்வழகை நீங்களும் காண வேண்டும் என்பதற்க்காக.


வேலூர் கோட்டை:


இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய அக்கால அரண். கோட்டையை சுற்றி பார்த்து விட்டு, ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு அண்ணமலையரை பார்க்க வேலூரை விட்டு கிளம்பினோம். ஜலகண்டேஸ்வரர் பற்றி விரிவாக அடுத்த பதிப்பில் எழுத இருக்கிறேன்.


திருவண்ணாமலை:


அன்றைக்கும் மக்கள் கூட்டத்தில் தத்தளித்து கொண்டு இருந்த கோவிலில், எங்களுடன் வந்த நண்பரின் மூலமாக இலவசசீட்டை பெற்று உடனடியாக தரிசனத்தை முடித்து கொண்டு கிரிவலத்தை இரவு சரியாக 12:10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5:30 முடித்தோம். அன்றைய நாள் முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களுக்கு சென்றதால், கிரிவலத்தில் பலரது கண்களில் ரத்தம் வரபோவதை கண்டேன். இருந்தாலும் அதை யாரும் வெளியில் காட்டிக்கொள்ள வில்லை. என்ன தான் பல துயரங்கள் இந்த சுற்றுலாவில் கண்டாலும், சந்தோசமாக நிறைவு செய்து சென்னை திரும்பும் போது அடுத்த சுற்றுலாவிற்கு இடத்தை ஆராய தொடங்கி விட்டோம்.

இந்த சுற்றுலாவின் புகைப்படத்தை எனது வலைதளத்தில் காணலாம்.

1 comment:

Unknown said...

Content is good...But U have to improve in the way of what you want to say.