Friday, September 26, 2008

பிச்சைக்காரன்

நாட்டில் பிச்சைக்காரர்கள் உருவாக அரசாங்கமும் முக்கிய பங்கு வகுக்கிறது. பிச்சைக்காரன் என்பவன் பணத்தை தானமாக பெற்று கொள்பவன் அல்லது பணத்தை மிரட்டி பெற்று கொள்பவன். உதாரணமாக, நாம் வசிக்கும் சென்னை மாநகரில் சாலையின் அருகே பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனை விட வாகனத்தை மறித்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் அதிகம். கேட்டால் தலைகவசம் இல்லை என்பது.

நமது நாட்டு சட்டத்தில் வாகனத்தை ஓட்டும் போது உயிரை காப்பற்றி கொள்ள தலைகவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்று அறிவோம். தலைகவசம் அணியாமல் சென்றால் ரூ. 100 அபராதம். இந்த சட்டத்தை இயற்றியது யார் என்றால், 4 சக்கர வாகனத்தை ஓட்டுவோர். 2 சக்கர வாகனத்தை ஓட்டுவோரின், இன்னல்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும். எடுத்துக்காட்டாக, 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தி தொழில் செய்பவர்கள், தினமும் 40 முதல் 60 கடை வரை ஏறி இருங்க வேண்டும், இவர்கள் தலைகவசம் அணிய முடியுமா? இதே போல் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்த நிலையில் (சில) போக்குவரத்து துறை அதிகாரி, 2 சக்கர வாகனத்தை ஓட்டுபவரை ஓடி போய் பிடித்து, அவர்கள் உழைத்து பார்த்த சிறிய லாபத்தில் கேவலமாக ரூ 20 முதல் ரூ. 50 பிடுங்கி கொள்வது. பொது மக்கள் எவ்வளவு சிரமபடுகிறார்கள் என்று யாருக்கும் தெரிவது இல்லை. இப்போது சென்னையில் 95% பேர் தலைகவசம் அணிகிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. ஆனால் தலைகவசம் அணிபவர்கள் கூறுவது சட்டத்தால் பயந்து இல்லை, பிச்சைக்காரர்கள் இடம் இருந்து தன் உழைத்தை காப்பற்றி கொள்ள.

தலைகவசம் என்பது அவர் அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். கடுமையான சட்டத்தை இயற்றி உயிரை காப்பற்ற பாடுபடுகின்ற சட்டம், வாகனத்தை மறித்து பிச்சை எடுக்கும் (சில) போக்குவரத்து துறை அதிகாரித்திடம் இருத்து பொது மக்களை காப்பற்ற வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்களுக்கு முன்னால், போக்குவரத்து துறை அதிகாரியை பார்த்து மிகவும் வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று அவர்களை பார்க்கும் பொழுது மனித உயிரை/உழைப்பை குடிக்கும் எமனை போல அல்லவா தெரிகிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களிடம் இருந்து ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கும் ஆயிரத்தில் ஒருவன்.

9 comments:

Anonymous said...

Hi,
Dont criticize all the policeman. There are some who really proud to be a policeman and we too feel proud of them.Its our government laws which makes them feel a fruit of it(bribe).

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Thanks a lot.. I have updated post.

Ramkumar said...

ஹாய் நிர்மல், நல்ல பதிப்பு. ஆனால் இதை பாதிக்க பட்டவர்கள் படிப்பதை விட, நமிடம் பிச்சை எடுப்பவர்கள் படித்தல் நன்றாக இருக்கும்.

உங்கள் பணி மென் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள்

கார்த்திக் அருண் said...

ஒரு சிறந்த தலையங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாய்!!!

எளிய நடை, ஆனால் திரைப்பட வசனத்தின் சாயல் அங்கங்கே தெரிகிறது.

உன் சிந்தனைத் துளிகள் மழையாகப் பெருகட்டும். வாழ்த்துகள்!!!

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Thanks to Karthick Arun and PokkiriPayan for your comments.

Anonymous said...

What boss... u explode like a bomb.. But truth one...

Anonymous said...

Dei,

Add ur mob number in ur profile .... policemans are searching u :)

Anonymous said...

Nice...But Don't compare both of them..

BadhriNath said...

40 50 kadai eri irangi uzaikkum purushan veedu vandhu seranum pondatti pullayya paaka thalai kavasam venum.

no comments about pichaikaarans