Monday, April 12, 2010

பயணம் - 2

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆடம்பரமாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது நமது மக்களின் எண்ணம். நான் இந்தியாவில் இருக்கும் வரை எனது எண்ணமும் அது தான். ஆனால் இங்கு வந்த பின்பு தான் அதனுடைய நிதர்சனம் அறிய முடிகிறது மற்றும் தெரிகிறது. குறிப்பாக தனி நபராக வரும் நண்பர்கள் வாழ்க்கை ஒரு அமெரிக்க இயந்திரம் தான். (நம்மூர் இயந்திரம் அப்ப அப்ப ஓடாதே). வார நாட்கள் முழுவதும் வேலை, வேலை மற்றும் வேலை. அதனால் தான் கடந்த சில வாரங்களாக பதிவுகள் இல்லை. இங்கு உள்ள நம்மூர் மக்களிடம் பலபேரிடம் நல்ல அனுபவங்கள் கிடைத்தாலும், சில கிறுக்குத்தனமான மக்களை பார்த்தல் நம்பமுடியவில்லை. அப்படி பட்ட இரண்டு கே.பு.விடம் மாட்டி கொண்டு விழிக்கின்றேனே பாருங்கள்... என்னவென்று சொல்ல.

சரி, வேறு விஷயத்திற்கு வருவோம். நான் இங்கு உள்ள வால்-மார்ட் மற்றும் சம்ஸ் என்ற மார்க்கெட்க்கு சென்றேன் (அது தாங்க ரிலையன்ஸ் பிரெஷ் மற்றும் சரவணா ஸ்டோர் மாதிரி). அப்போது தான் இந்நாட்டின் நிலைமையை அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு பார்த்த பொருட்கள் அனைத்தும் சீனாவில் தாயரிக்கப்பட்டது. ஒன்று கூட அமெரிக்காவில் இல்லை. (காய்கறிகளை தவிர, அதுவும் மெக்சிகோவில் தாயரிக்கபட்டாத இருக்கும்). அமெரிக்காவிற்கு சீனா மற்றும் சில ஆசிய நாடுகள் பொருளாதார தடை விதித்தல் போதும், இந்நாட்டின் நிலைமை தலைகீழ் ஆகிவிடும் போல் உள்ளது.


நான் இருக்கும் ரோஜர்ஸ்
, அர்கன்சாஸ் மாவட்டத்தின் முடிவில் உள்ளது. அடுத்த மாவட்டம் மீசுரியின் ஆரம்பத்தில் பிரான்சன் என்ற இடத்தில் பலவகையான ஆடம்பரமான ஆடை மற்றும் அதற்கு சம்பந்தமான பொருட்கள் என்று கடைகள் இருந்தன. எனது இடத்தில் இருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இந்த பயணத்தின் சிறப்பு அம்சம்  என்னவென்றால் வழி அனைத்தும் மலைகளில் உள்ள குறுக்கான மற்றும் செங்குத்தான ஏற்ற மற்றும் இறக்கங்கள். ஒரு மணி நேரத்தில்லேயே லேசான தலை சுற்றல் வந்தது தான் மிச்சம். ஆனால் அங்கு சென்ற பின்பு தான் இந்நாட்டு மக்களின் செலவு செய்யும் மனப்பான்மை அறிய முடிந்தது. ஒரு காரில் ஆறு அல்லது எழு பேர் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். அமெரிக்க கறுப்பின மக்களும் இதில் அடங்குவர். எல்லா வகையான கடைகளிலும் ஓரத்தில் தள்ளுபடி என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் உண்டு. அதற்கு என ஒரு தனி இடமும் உண்டு. அந்த இடத்தில் சில மக்களை மட்டுமே காண முடிந்தது. அந்த சில மக்கள் அனைவரும் நம்மூர் மக்கள். இதே நிலைமை தான் அமெரிக்காவில் உள்ள எல்லா இடங்களிலும். நம்மூர் மக்களின் சேமிப்பு குணம் இதில் காண முடிந்தது.

அதே போல் பாட்டேவிள்ளே என்ற இடத்தில் (டிக்சன் தெரு) கல்லூரிகள் மற்றும் பலவகையான உணவகங்கள் இருப்பதால் ஒரே கூட்டமாக இருக்குமாம். வெள்ளிகிழமை இரவு அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நம்மூர் கல்லூரி மாணவர்கள் எப்படியோ அதே போல் அவர்களின் ஆட்டமும் பாட்டமும். அதை தவிர ஒரு நிகழ்ச்சியை காண முடிந்தது. தமிழ் சினிமாவில் மேடையில் ஒருவர் பாடி கொண்டு இருக்க, மற்றவர்கள் அதை ரசித்து கொண்டு இருப்பார்கள் (ல் வந்த மோகன் மற்றும் முரளி படங்களை பார்த்தல் தெரியும்).. இது சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று இருந்தேன். சென்னையில் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்ததே இல்லை. ஆனால் இந்நாட்டில் அப்படி பட்ட மேடை பாடகரை வைத்து கொண்டு மக்கள் (கல்லூரி மாணவர்கள் உட்பட) தங்கள் ரசனையை மகிழ்ச்சியுடன் பாடி  அவர்களுடன் பாடி கொண்டு வெளிபடுத்தினர். இப்போது தான் அமெரிக்கா வித்தியாசமாக தெரிய ஆரம்பிக்கிறது.

பயணம் தொடரும்..

Sunday, March 28, 2010

புது பயணம்...

வாழ்க்கை என்னும் இரயில் பயணத்தில் நாம் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கின்றோம். இதன் மூலமாக பல்வேறு புதுமையான வாழ்க்கை அனுபவத்தை கற்கிறோம் மற்றும் நல்ல நண்பர்களை பெறுகிறோம். அடுத்த கட்ட இரயில் பயணத்தின் போது காலத்தின் கட்டாயமாக பழகியவர்களை பிரியநேரிட்டு அதற்கு பதிலாக புது மனிதர்களை சந்திக்கின்றோம். அப்படி என்ன புது பயணம்? இது நாள் வரையில், அனைத்துக்கும் பணம் என்ற நிலையில் இருக்கும் சென்னையிலும், அவ்வபோது தென் இந்திய மாநிலங்கள் ஆன கேரளா, கர்நாடகம் மற்றும் தெலுகுதேசம் என்று சென்று இருந்தாலும், பல கோடி இந்திய மக்களின் கனவு நாடான அமெரிக்காவிற்கு எனது பயணம் ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில் கடந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழர்களை (முக்கியமாக சதீஷ், மாதவன், நாகூர், கிருஷ்ண மற்றும் பத்மன்) மறுபடியும் சிந்திப்போம் என்று தெரிந்தாலும், எப்போதும் என் மனதில் அவர்களுக்கு ஒரு இடம். அதே போல் என்னை வழியனுப்ப வந்த நண்பர்கள் பாலாசுப்பிரமணியன், சுந்தர், கார்த்திக் சந் அவர்களுக்கு நன்றி...


Air India

எனது பயணம் சென்னையில் ஆரம்பிக்கும் போது விமானநிலையத்தை பார்த்து ஆச்சரியப்பட்டது உண்மை தான். ஆனால் அது மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் காணமல் போனது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சென்னை, மும்பை போல் ஆகும் என்ற நம்பிக்கை எனக்குள் பலமாக இருந்தது (மும்பை பார்க்காமலே). ஆனால்  மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் கண்டிப்பாக பல வருடங்கள் ஆகும் என்று தெரிந்துவிட்டது. மும்பையில் இருந்து என் விமானம் ஜெர்மன் நாட்டில் உள்ள பிரான்க்பெட்க்கு சென்றது. சில வருடங்களுக்கு முன்னால் ஜெர்மன் மொழியை கற்ற போகிறேன் என்ற பெயரில் இந்த மொழியை பற்றி அறிந்து வைத்து இருந்ததால் எனக்கு மனதில் சிறு மகிழ்ச்சி. ஆனால் அங்கு சோதனை என்ற பெயரில் செய்த மிக கேவலமான முறையை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் செய்த சோதனைகளை விட மோசமான சோதனை... அங்கு ஒரு முடிவு எடுத்தாகிவிட்டது அடுத்த எந்த ஒரு பயணத்திலும் கண்டிப்பாக ஜெர்மன் வழியாக பயணம் கூடாது என்பது தான்.

நான் அர்கன்சாஸ் என்னும் மாநிலத்திற்கு தான் செல்ல வேண்டும். எனது பயணம் ஒரு வழியாக அமெரிக்காவின் முக்கிய மாநிலமான சிக்காகோவிற்கு வந்தது. முதன் முதலில் வெள்ளை நிற மனிதர்கள் என்னை சுற்றிலும். என் மனதில்  2002ம் ஆண்டின் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வேகமாக வந்து நிற்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை பார்த்து பிரம்மித்து கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த ஆச்சிரியம். விமானத்தில் பறக்கும் போது எங்கும் ஒரே வெள்ளை நிறமாக தான் தெரிந்தது... நான் அர்கன்சாசில் விமானம் நின்ற பின்னும் ஒரே வெள்ளை நிறம். ஆம் அனைத்தும் பனி..முதல் முறையாக பனி படர்ந்து இருக்கும் இடத்தில் என்று என்னும் போது உடல் குளிரும் வேளையில், மனமும் குளிர்கிறது என்பது உண்மை தான்

அனுபவங்கள் மற்றும் பதிவுகள் புது உலகத்தில் இருந்து தொடரும்..

Friday, March 19, 2010

என் அருகில் நீ இருந்தால்


வெயில் காலம் உனக்கு.. எனக்கோ பனி காலம்

பூக்களின் மத்தியில் நீ.. போர்களத்தின் மத்தியில் நான்

பருகும் தண்ணீர் உனக்கு.. எனக்கோ அமிர்தம்

பாண்டியன் பேருந்து உனக்கு...எனக்கு இந்திர வாகனம்

நீ சாதாரண பெண் மற்றவருக்கு.. தேவலோக தேவதை எனக்கு

எல்லாம் நீ என் அருகில் இருந்தால்.


இது உன் தங்கைக்கும் பொருந்தும்

Thursday, March 18, 2010

திருமண வாழ்த்துக்கள் - சக்தி அபிராமி

எனது தற்போதைய அலுவலக நண்பர் சக்தி அபிராமி அவர்களுக்கு இன்று 18ம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

திருமண வாழ்த்துக்கள் - பத்ரிநாத்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. பத்ரிநாத் அவர்களுக்கு இன்று 18ம் தேதி சென்னையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...