Sunday, March 14, 2010

திருமண வாழ்த்துகள் - செந்தில் சகா

எனது உற்ற நண்பர் திரு. செந்தில் சகா அவர்களுக்கு பிப்ரவரி மாதம்  25ம் தேதி சேலம் ஆத்தூரில்  திருமணம் நடைப் பெற்றதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்த நினைத்த மணமக்களில் இவர்களும் ஒருவர். ஆனால் மிக முக்கிய வேலை காரணமாக
, என்னால் நேரில் செல்ல முடியவில்லை என்பதால் வருந்துகிறேன்..

தமிழில் திருமண பத்திரிக்கை

இன்றைக்கு எனக்கு தொழில் முறை நண்பரின் திருமண பத்திரிகை கிடைத்தது. அதில் தமிழில் சில வாக்கியங்களை கண்டு குறுகி போனேன்.. அச்சொற்கள் தமிழில் இருந்தும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை... இதோ அந்த வாக்கியங்கள் கீழே... குறிப்பாக இது கவிதையும் இல்லை, சமஷ்கிரிதத்திலும் இல்லை மட்டும் தெளிவாக தெரிகிறது என்று நம்புகின்றேன்...

அன்னவளை, 'அல்லல்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியோடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான்..

படர்ந்து ஒளி பறந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாலுமே, அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது என் உள்ளம் நண்ணியே.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினர்.

கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கெளசிகனை, 'மேலாய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மணநாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான்.

மன்னரும், முனிவரும், வானுளோர்களும் ,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே.


இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ் சந்திர மெளலியும் தையலாளொடும்
வந்தனன்;  மலர் அயன் வாக்கினாளுடன் அந்தரம் புகுந்தனன் ; - அழகு காணவே

புரிஞ்ச மீனிங் சொல்லுங்கப்பா... இத டைப் அடிக்கவே கண்ண கட்டிரிச்சு...வர வர கல்யாண பத்திரிக்கையே ஏன் இப்படி எல்லாம் புரியாத பாஷையில இருக்குன்னு தெரியல..

அமையுமா நமக்கு??



சமீபத்தில் பார்த்த மற்றும் மனதை தொட்ட ஒரு சின்ன காதல் கதை...

எனது நண்பர்கள் சிலபேர் புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் வேலைக்கு போவதை பார்த்து உள்ளேன். இக்குறும்படத்தில் வரும் நாயகன் கூட இப்படி வருவதை பார்த்தல் நிஜத்தில் இக்கதை நடப்பது போலவே ஒரு உள்ளுணர்வு... இப்படி சில விஷயங்கள் இதில் உண்டு... கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்....

Wednesday, March 03, 2010

சும்மா.. திருப்புரங்குன்றம்...

ஒரு பெரிய வி.ஐ.பி கார் ஒன்று, எனக்கு எதிரில் வந்து கொண்டு இருந்தது... அக்கார் ஒரு அரசியல்வாதியின் கார் என்றும், அதில் உள்ளே இருக்கும் நபர் கண்டிப்பா ஒரு ரவுடி என்றும் பார்த்தாலே தெரிந்து விடும்.. அது போக முன்னால் ஒரு கார். என்னை சுற்றி இருந்த சில பேர் கூட அக்காரையே பார்த்து கொண்டு இருந்தனர். நான் நின்ற இடத்திற்கு அக்கார் வேகமாக வந்துக் கொண்டு இருந்தது. பெரிய காரில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கும் நபர், கை தொலைப்பேசியில் பேசி கொண்டும்,  பின்னால் அமர்ந்து இருக்கும் சில பேரிடம் பேசி கொண்டும் வந்து போது அனைவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம்...

அடுத்து என்ன நடக்கும்...

நான் நின்று இடத்திற்கு பக்கத்தில், கார் மெதுவாக நெருங்கி வர வர அனைவரின் பார்வையும் அக்காரின் மீதே...  அந்த ஒரு வினாடியில் கையில் இருந்த தொலைப்பேசியை முன் சீட்டில் இருந்த நபர், தீடிர் என்று தன் மாடியில் வைத்து  இரு கையை எடுத்து எனக்கு அருகில் இருந்த திருப்புரங்குன்றத்தின் நுழைவுவாயிலை கும்பிட்டு அக்கார் என்னை கடந்து சென்றது...என்னை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அக்கார் போன உடன், தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

மொத்தத்தில் நான் சொல்ல வந்தது, நான் திருப்புரங்குன்றம் கோவிலுக்கு போனது தான்...

இவ்வளவு பெரிய கோவிலில் இந்த அளவு மக்களை நான் பார்த்தே இல்லை... அங்கு அங்கு ஒரு குடும்பம்.. இரண்டு அல்லது நான்கு வயதானவர்கள்..வயதானவர்கள் மட்டும் வணங்கிடும் விதத்தை எதிர்பாரா விதமாக பார்த்தேன்... அவர்கள் கோவிலில் உள்ள ஒரு சில தூண்களை மட்டும் வணங்கி மற்றும் சுற்றி வந்தனர். பல முறை சென்ற நான் அத்தூண்களை கண்டு கொண்டதே இல்லை... அவர்கள் சென்ற உடன், நானும் தூண்களை போய் பார்த்தேன்.. இரண்டு சிலைகள் இருந்தன. அவற்றின் பெயர் தெரியவில்லை...ஆனால் அவற்றை இக்கோவிலில் பார்த்தது கிடையாது... ஆச்சிரியமான விஷயம்...

மூலவரை போய் பார்த்தோமா, மனசார சாமி கும்பிட்டு ஒரு திருப்தியோட வெளியில் வந்தாச்சு...இதுவே சென்னையில் உள்ள எதாச்சு ஒரு பெரிய கோவிலில்ன இது முடியுமா..முடியவே முடியாது...சாமியிர் மொத கொண்டு காச புடுங்கி தின்கிறதுல குறியா இருந்துப்பங்க...

வெயில்???



இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே கூவம் சென்னையிலும் சரி, வைகை மதுரையிலும் சரி வெயில் கொடுமை தாங்க முடியல...இப்பவே இப்படினா, அப்ப ஏப்ரல், மே  மற்றும் ஜூன் மாதத்தில் எப்படி சமாளிக்க போறோமே...

ஐடியா மணி பலர் இருக்காங்க... சுட்ட தணிக்க எதாச்சு ஐடியா சொல்லுங்களேன்