Sunday, October 04, 2009

திரு திரு துரு துரு - திரைவிமர்சனம்


சென்னையில் வாரயிறுதி நாட்களில் பொழுது போகாமல் இருக்கும் நிலைமை ஏற்பட்டால், கண்டிப்பாக இத்திரைப்படத்தை மடிக்கணினியில் காணலாம். சத்யம் சினிமாஸ் தயாரிப்பு என்ற விஷயத்தை தவிர முக்கியமான விஷயம் நடிகர் மெளலி... பழம்பெரும் நடிகர் என்று பல காட்சிகளில் காட்டி விடுகிறார். ரூபா மஞ்சரிக்கும், அஜ்மலுக்கும் நடிப்பை மட்டும் அல்லாமல் இயல்பான நகைசுவையான கதாபத்திரத்தை  தந்து இருக்கும் படம்... 


      - தவறாமல் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நகைச்சுவை திரைப்படம்
 


இன்றைய சிந்தனை



சினம் கொண்ட சிங்கதுடனும், அவமானம் பட்ட பெண்ணுடனும் மோத கூடாது.
                                 - அம்பை (மகாபாரதம்)



மழை - ஒவ்வொரு விதம் : திருப்பங்கள் - சிறுகதை

பல திடுக்கிட்டும் திருப்பங்கள் நிறைந்த "திருப்பம்" சிறுகதை போலவே இன்னொன்று எழுத வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு இந்த மழை. மழை பெய்யும் போது ஒவ்வொருக்கும் ஒரு விதமான எண்ணங்கள் இருக்கும். இதே இங்கு நான் எழுத போகிறேன் அதுவும் சில திருப்பங்கள் உடன்

சென்னையில் அப்போதும் சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் நிலையில் இன்று மட்டும் இருண்ட மேகத்துடன் இருந்தது நான் நாயகனுக்கு ஒரு சின்ன மன மகிழ்ச்சி. காரணம் இன்று தான் முதல் முதலில் வேலைக்கு போகும் நாள். அதிகாலையிலே அலுவகத்திற்கு சென்று வாயிற்படியில் காலை வைக்கும் போது நினைவில்...
                       மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டியில் இருந்து பிறந்து வளர்ந்து விவசாயத்தை நம்பி உள்ள  பெற்றோர்கள் கஷ்டபட்டு படிக்க வைத்து, நாயகனுக்கும் படிப்பு வராமல்  அவனும் கஷ்டபட்டு படித்து நான்கு வருட படிப்பை ஏழு ஆண்டுகள் படித்து சென்னையில் ஒரு வருடம் வேலை தேடி நண்பன் மூலமாக அவன் மூன்று ஆண்டுகளாக பணிபுரியம் இடத்திலே...

மீண்டும் சென்னையில்...

நாயகன் வலது காலை வைக்கும் போது இதோ ஒரு பெண் (அதாவது நமது நாயகி) அவனை இடித்து கொண்டு உள்ளே செல்ல, மழை பெய்ய ஆரம்பிக்கிறது.... கொட்டாம்பட்டியில் மழை சாரல் அடிக்க அவனது பெற்றோர் மகன் வேலை செல்லும் நேரத்தில் மழை என்பதால் நல்ல நேரம் என்று நினைக்க...

கற்பனை செய்யும் நானும் தமிழன் தான் அதனால்.. சென்னையில் அதே நேரத்தில்  நாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்... மகிழ்ச்சியுடன் அவள் அழகை எண்ணிக் கொண்டே ஒரு காதல் பாடல் அவனது எண்ணத்தில்.. பாடல் முடியும் போது... மீண்டும் அவள் அலுவக வாயிற் வெளியில் செல்ல, நம்ம நாயகனின் கண்ணும் வெளியே பாய்கிறது..

மீண்டும் ஒரு திருப்பம்....

நாயகியின் நான்காவது வகுப்பில் படிக்கும் குழந்தை தோளில் புத்தக பையுடன் அம்மா என்று நாயகியை கூப்பிட... மழை இடியுடன் பெய்ய ஆரம்பிக்கிறது. அப்போது அவனது கண்ணீர் மழையில் கலக்க, அத்துடன் தன்னக்க உலகமே அழுவதாக நினைக்க....

சற்று தூரத்தில் இருந்த வந்த அவனது நண்பனும் அவர்களுடன் பேச... நண்பனின் மனைவி என்று நினைத்து வெட்கத்தில் திரும்பி இருக்கைக்கு செல்கின்றான்.  நண்பன் நமது நாயகி உடன் வந்து நாயகனுக்கு மனைவி அல்ல  காதலி என்று அறிமுகம் செய்ய..நண்பன் திடுக்கிட...

மீண்டும் ஒரு திருப்பம்...

அக்குழந்தை அனாதை என்றும் நாயகி தத்தெடுத்து வளர்பதகவும் கூற நாயகனின் கண்ணீர் மேலும் அதிகரிக்கிறது. நண்பன் அதை ஆனந்த கண்ணீர் என்று நினைக்க, ஆனால் அக்கண்ணீர் தான் செய்த தவறுக்காகவும்,  உண்மையில் அக்குழந்தை நாயகனுக்கும் நாயகிக்கும் அவர்களின் சொந்த ஊரில் இருந்த நட்பின் போது பிறந்த குழந்தை என்று நினைக்க அவனது உடலில் மின்னல் பாய்கிறது

Saturday, October 03, 2009

இந்தவாரம்: கேட்டது: ஐதீகம்

பல நூறு ஆண்டுகளுக்கு சில மனிதர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக சில வரைமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதை ஐதீகம் என்று ஏற்று அதையே நடைபடுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால் மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்பதை நிருபிக்கும் வகையில் ஐதீகமும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு நான் கேட்ட சில முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த வருடம் கும்பாவிஷேகம் நடைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சித்திரை திருவிழா நடந்தது உலகம் அறியும். ஆனால் இந்து மதத்தின் ஐதீகப் படி நடைப் பெற்றது சரியானத என்பது கேள்வி. கும்பாவிஷேகம் நடைப் பெற்று 45 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் வரை எந்த விழாவும் நடக்க கூடாது என்பது முறையாம் (நான் கேட்டது வரை). சித்திரை திருவிழா நடைப் பெறவே கும்பாவிஷேக வேலைகள் வேகமாக முடிக்க பட்டன என்பது நிதர்சன உண்மை. வேதங்களை படித்தவர்கள், ஆன்மிக வாதிகள், பெரிய குருக்கர்கள் என்று பல பேர் இருந்தும் இதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்றால் அவர்கள் ஐதீகத்தை மதிக்க வில்லை என்று அர்த்தம்.

தகனதிரி செய்ய இப்பொழுது நடைமுறையில் மரக்கட்டையில் (சாதரண), மின்சார, மற்றும் எரிவாயு என்று மூன்று முறைகள் உள்ளன. இந்து மதத்தின் வழக்கப்படி சாதரண தகனம் தான் முறை. அது தான் நாம் முன்னோர்கள் சொன்னது. ஆனால் இப்போது யாரும் உபயோக படுத்துவது இல்லை. எரிவாயு முறை தான் எல்லா ஊர்களிலும் இருப்பது. குறிப்பிட்ட காரணங்களுக்காக ஐதீக முறைப்படி நடைப்பெறும் தகனத்தை, குருக்கர்கள் காசுக்காக அதுவும் நம் தொழில் அவசரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு தவறான முறையை கற்று கொடுக்கின்றனர். இந்த தவறான முறையே இப்போது தொடர்கிறது..

கிறித்தவர்கள் உடல்களை மண்ணில் புதைப்பது தான் வழக்கம் (பைபிளில் குறிப்பு உள்ளதாக கேட்டது). ஆனால் மக்கள் எண்ணிக்கை அதிகமா இருப்பதால், அரசு அவர்களுக்கான இடத்தை வழங்க முடியாததால் எரிவாயு தகனத்தை செய்ய அறிவுரை கூறுகிறது/வற்புறுத்துகிறது. அவர்களில் சில பேர் அப்படியே செய்து விடுகின்றனர். அப்படியானால் பைபிளில் கூறிய விஷயமும் பொய் தான என்ற கேள்வி சிறிது நாளுக்கு பிறகு வந்து விடும்.

குருக்கர்களே பயன்படுத்தாமல் இருக்கும் போது ஐதீகம் என்பது பொய் என்று நினைப்பு வந்து விடுகிறது. இதே நிலை தான் வேதத்துக்குமா?

இந்தவாரம்: பார்த்தது: கடைசி 20 நிமிடங்கள்


ஒரு மனிதனின் கடைசி 20 நிமிடங்கள் என்பது இறப்பதற்கு முன்பாக உள்ள நிமிடங்களை பற்றி இங்கு குறிப்பிட இல்லை. வெறும் உடல் என்று இருக்கும் சடலம் சாம்பல் ஆகும் வரை.


நெருங்கிய உறவினரின் தகனதிரியின் காரணமாக தத்தனேரிக்கு சென்று இருந்தோம். குருக்கர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் செய்து கொண்டு இருந்தபோது வரிசையாக நான்குக்கும் மேற்பட்ட சடலங்கள் வந்து சேர்ந்தன. இத்தனைக்கும் அன்று சரஸ்வதி பூஜை வேறு. அனைத்து ஐதீக காரியங்களும் முடிந்த உடன், சடலம் எரிவாயு மூலமாக நெருப்ப வூட்டப்படும் இடத்திற்கு சிலபேருடன் கொண்டு செல்லபட்டது.  இன்னும் சிலர் முதல் மற்றும் இரண்டாம் நாள் செய்யும் மண்டபத்திற்கு சென்று விட்டனர். எரிவாயு அறை மிக பெரியது. உடலை இரு கம்பியின் நடுவே வைத்து எரியும் இடத்திற்கு ஒரு கம்பியின் மூலமாகவே அனுப்பி வைத்தனர். அக்கம்பியை மெதுவாக அழுத்த உடல் தானாக மேலிருந்து கீழ் எரியும் இடத்தில் அழுத்தபட்டது. அதற்கு மேல் சொல்லும் எழுத்துக்கள் என்னிடம் இல்லை.


நாங்கள் மண்டபத்தில் பூஜை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க சரியாய் 20  முதல் 25 நிமிடங்களில் குடுவையில் சாம்பல் எங்களுக்கு வந்து சேர்ந்தது. அதுவும் நெருப்பு கங்கு இல்லாமல் மெதுசூடாக உள்ள நிலையில். அந்த 20 நிமிடத்தில் உடல் எரிந்து நெருப்பு கங்கும் அணைந்து சாம்பல் சாதரண நிலையில். மனிதனின் வாழ்க்கை அவ்வளவு தான்.


இதிலும் லஞ்சம்: அரசு ஆணைப்படி ஒவ்வொரு எரிவாயு காரியங்களுக்கும் ரூ. 750. ஆனால் அங்கு உள்ள ஊழியர்கள் உற்றார், உறவினர்களின் தகுதியைப் பார்த்து பல நூறுகள் வாங்கிக் கொள்கின்றனர். நாங்கள் கொடுத்த தொகை ரூ. 600. நம்நாடு திருந்தவே திருந்தது என்பதற்கு இந்த உதாரணமே போதும்...