Sunday, May 17, 2009

5 வருடம்

மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்ற கூற்றுக்கு நான் மட்டும் விதி விலக்கு அல்ல. 3ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு, காலையில் 7மணி அளவில் பெரியார் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நகரப் பேருந்தில் செல்லும் போது, வாழ்க்கை எப்படி அமையப் போகிறதோ என்ற பயம் என் ஆழ்மனதில் இருந்தது என்பது மறைக்கபடாத உண்மை. 2004 மே மாதம் 7 ம் தேதி, கடைசி பாடத் தேர்வு முடித்துவிட்டு வெளியில் வரும் போது இருந்த பயம் என்னவென்று சொல்ல. மூன்று நாட்கள் கழித்து 11ம் தேதி காலையில் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டே வலதுக்காலை நானும், என் நண்பனும் சென்னையில் எடுத்து வைத்தோம். எங்களை வழியனுப்ப எனது குடும்பத்தாரும், கல்லூரி நண்பர்கள் சுமார் 35 பேர் வந்து இருந்தனர். இப்போது பின்னோக்கி பார்க்கும் போது அதே மே மாதம் ஆனால் ஆண்டு 2009. பெற்றோர் துணை இல்லாமல் அதுவும் நான் வெறுத்து ஒதுக்கக் கூடிய நகரமான இந்த சென்னையில் 5 வருடம்.

கடந்து வந்த இந்த ஆண்டுகளில் சாதித்தது என்ன என்ற என் மன கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்னால் மட்டும் அல்ல என் நண்பர்களும் பதில் சொல்ல முடியாமல் திருதிரு முழிப்பது.... :)

குறிப்பு: 5 வருடம் என்பது எனக்கு ஒரு சில மணி நேரமாக தான் தெரிகிறது. ஆனால் மற்றவருக்கு எப்படியோ என்று தெரியவில்லை இப்பதிப்பு என்னுடைய மனதில் உள்ள எண்ணங்களில் சில.

Sunday, May 03, 2009

மரியாதை: திரைவிமர்சனம்

கேப்டன் புரட்சி கலைஞன் விஜயகாந்த் மற்றும் நம்ம விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த மரியாதை பற்றி சில வரிகளில்...

* நடிகர்கள், நடிகைகள், நகைச்சுவை நடிக/நடிகைகள், துணை நடிக/நடிகைகள் என்ற பட்டாளம் அனைவரும் முதியவர்கள்.
* தந்தை, மகன் உறவை சித்திருக்கும் படம்.
* 'வானத்தை போல' போல மனதை வருடும், கண்ணிரை வரவைக்கும் காட்சிகள் இதில் இல்லை என்பது ஆறுதல்.
* மகன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் பணக்காரன் ஆவது என்பது விக்ரமனின் வழக்கமான காட்சிகள் இதிலும் உண்டு.
* 'இன்பமே' என்ற நாம் எம்.ஜி.ரின் ரீமிக்ஸ் பாடல் மட்டும் மீண்டும் கேட்க தூண்டும் ரகம்.
* நகைச்சுவை என்ற பெயரில் வழக்கம் போல மொக்க நகைச்சுவை... முடியலே..

மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்துடன் சேர்ந்து காண கூடிய திரைப்படம்...

குறிப்பு: இப்படத்திற்கு மேல் கேப்டன் நடித்தால், பார்ப்பது மிக மிக கடினம்.. எனக்கு அந்த அளவு மன தைரியம் இல்லை என்று நினைக்கிறேன்...

என்ன தவறு செய்தோம்

* மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிAlign Leftல் குடமுழுக்கு
* மதுரை மீனாக்ஷி திருகல்யாணம்
* சித்திரை திருவிழா
* நாடளுமன்ற தேர்தல்

என எல்லா முக்கிய விசேஷங்கள்/விஷயங்கள் வார நாட்களில்...
சென்னையில் வாழ்க்கையை கஷ்டமா சென்று கொண்டு இருக்கும் வேளையில், இந்த மாதிரியான விசேஷங்கள் தரும் சிறு சந்தோசம் கூட இந்த ஆண்டில் இல்லை. விசேஷங்கள் தான் நல்ல நாளில் என்று கூறினாலும், தேர்தல் கூட வார நாளில். என்ன கொடுமை சார் இது...

Friday, May 01, 2009

முதுகலைப் பட்டம்


  • கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு
  • படிப்பு என்றைக்குமே வீண் போகாது

இது போன்ற வாக்கியங்களில் எனக்கும் மிகுந்த நம்பிக்கை. அதனால் தான் என்னவோ எனக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு. அதையும் என்னால் முடிந்த வரை செயல்முறைப் படுத்தி வருகிறேன். இந்நிலையில் சென்ற வாரம் தான் முதுகலைப் பட்டத்தின் அனைத்துப் பாடங்களையும் முடித்தேன். ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் பட்டப் படிப்பு சான்றிதல் வரும் என்று எதிர்ப் பார்க்கின்றேன். இதில் எனக்கு துணையை இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்...

திரைவிமர்சனம்

குரு என் ஆளு:

ஒரு முறைக் கூட பார்க்க தகுதியற்ற நிலையில் இருக்கும் இப்படத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.

 

தநா-07-அல-4777:

எம்ஜியாரின் கார் நம்பர் உடன் பசுபதி, அஜ்மல், சிம்ரன் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் ஒரு நல்ல த்ரில்லர் படம்...

 

அஸ்தா சம்மா(தெலுங்கு):

சுப்ரமணியபுரம் படத்தின் கதாநாயகி சுவாதிதான் இப்படத்திலும் கதாநாயகி... சொல்ல போனால் சுவாதிக்காக தான் இப்படத்தை ஆரம்பித்தேன்...ஆனால் ஒரு முழு நகைச்சுவை, குடும்ப திரைப்படத்தை பார்த்த திருப்தி. ஒரு சில  இடங்களில் தெலுங்கு படம் என நிருபித்தலும் ஜாலியாக பார்க்கலாம்..

 

ரெடி (தெலுங்கு):

 

தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான "ரெடி" பார்க்கும் போதே தமிழில் இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிந்து கொண்டேன். தெலுங்கு படம் என் தெரிவிக்கும் காட்சிகள் சில இருந்தாலும், ஒரு பெரிய குடும்ப திரைப்படத்தை பார்த்த நிறைவு. இப்படத்திற்கு மிக பெரிய பலமாக இருப்பது "பிரம்ஹண்டம்" நகைச்சுவை தான். சூப்பர்...

 

தி பட்டர்பிலை எப்ட்(ஆங்கிலம்):

 

ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை அசைவுக்கு கூட ஏதாவது காரணம் இருக்கும் என்ற கூற்றை வைத்து மனிதனின் நினைவுக்களை மையமாக கொண்ட திரைப்படம். பொறுமையாக இரண்டு முறைப் பார்த்த போதும் கூட சொல்ல வந்த கருத்தை எனக்கு புலப்பட வில்லை. யாருக்குவது தெரிந்தால் சொல்லுங்கள்...