படிக்காதவன்
சன் தயாரிப்பில் நான் பார்த்த முதல் திரைப்படம். மேசமான விமர்சனங்கள் இருந்தும் தைரியமாக திரைப்படத்தை ஆரம்பித்த முதல் பத்து நிமிடத்திலே...
(முழுவதும் தூங்கி விட்டேன்)...
விமர்சனம் இப்படத்திற்கு தேவை இல்லை.... படுகேவலமான திரைப்படம்.
ரெட்டி (தெலுங்கு)
தெலுங்கு படசாயல் இருந்தும் குடும்பத்துடன் பர்ர்க்க கூடிய நகைச்சுவை திரைப்படம்.
தோஸ்தான (ஹிந்தி)
ஹிந்தி சினிமாவில் மட்டும் தான் இம்மாதிரியான திரைப்படத்தை எடுப்பார்கள். நல்ல பெயர் உள்ள இரண்டு நடிகர்கள் எப்படி இதில் நடிக்க ஒத்து கொண்டார்கள் என்பதே ஒரு ஆச்சிரியமான கேள்வி. பொழுதே போகாமல் வீட்டில் இருக்கும் சுவற்றை பார்ப்பதைவிட இப்படம் காணலாம்.
வேன்நஷ்டே (ஹிந்தி)
தீவிரவாதத்தைப் பற்றி இந்தியாவின் உள்ள ஒவ்வொரு சாதாரண பொது மனிதனின் மன கேள்விக்கு பதில் சொல்லும் அற்புதமான திரைப்படம். மற்ற விபரங்கள் இதே திரைப்படம் தமிழில் வரும் போது.
அயன்
சன் தயாரிப்பில் மீண்டும் வந்து உள்ள மோசமான திரைப்படம். நடிகர்கள சூர்யா, பிரபு தவிர படத்தில் ஒன்றும் இல்லை.
எனக்கு ஒரு உண்ம தெரின்சுஅகனும்?
எனக்கு ஒரு உண்ம தெரின்சுஅகனும்?
ஏன் நடிகை தமன்னா சன்னின் எல்லா தயாரிப்பிலும்???
2 comments:
> எனக்கு ஒரு உண்ம தெரின்சுஅகனும்?
> எனக்கு ஒரு உண்ம தெரின்சுஅகனும்?
> ஏன் நடிகை தமன்னா சன்னின் எல்லா தயாரிப்பிலும்???
இது தன் இப்பொழுது நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சனை.
நாட்டை பத்தி யோசிங்க நிர்மல்
தோஸ்தான திரைப்படம் சித்திரமல்ல வெறும் சுவரேயென வர்ணித்தது அழகு.
Post a Comment