Thursday, May 24, 2012

பெட்ரோல் - மரண அடி என்பது இது தானா?

சிறு வயதில் நான் கண்ட அரச பெரிய நெடுந்தொடர்களில் , மன்னர் கொடுமையான வரிகளை போடுகிறார் என்றும், அதனால் மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று பார்த்து இருக்கிறேன். அதே போல் இப்போது இந்தியாவில் நடக்கிறது என்பது தான் நிதர்சனம். அப்போதைய நிலைமையை நாம் பார்க்கும் மற்றும் படிக்கும் நிலைமை போல், நம்முடைய நிலைமையை எதிர்கால மக்கள் இப்படி தான் பேசுவார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக பெட்ரோல் விலையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. பெட்ரோலின் முக விலை 40 என்று எடுத்துக் கொண்டால், நாம் கொடுக்கும் தொகை 78 . வித்தியாச தொகை அனைத்தும் பலவகை வரிகள்.

(நன்றி: புதிய தலைமுறை) தற்போதைய நிலவரப்படி சுமார் 159 லிட்டர்களைக் கொண்ட 1 பேரல் கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 5 ஆயிரத்து 110 ரூபாயாகும். அதன் படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 32 ரூபாய் 13 காசுகள். கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது பெட்ரோலுடன், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா, தார் போன்றவை கிடைக்கிறது. அவையும் எண்ணெய் நிறுவனங்களால் காசாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் விலை சுமார் 38 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் மீது மத்திய அரசு கலால் வரியாக சுமார் 15 ரூபாய் விதிக்கிறது. அடிப்படை விலையில் கச்சா எண்ணெய் மீது 5 சதவீத சுங்க வரியும், பெட்ரோல் மீது ஏழரை சதவீத சுங்க வரியும் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு 30 சதவிகித வாட் வரி விதிக்கிறது. பெட்ரோல் பங்க் முகவர்களுக்கு ஒரு லிட்டர் 1 ரூபாய் 45 காசுகள் கமிஷன் வழங்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணமாக சுமார் 7 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கல்வி வரியாக கலால் வரியில் இருந்து 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று40 ரூபாய் அளவுக்கு அடுக்கடுக்காக வரி விதிக்கப்படுவதாலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் 53 காசுகளாக சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸின் கடந்த ஆட்சியில் 22 முறையும், ஆளுகின்ற ஆட்சியில் 16 முறையும் பெட்ரோல் விலை ஏறி உள்ளது. விலை மாற்றத்தின் பட விளக்கம் இங்கே.

(நன்றி: mypetrolprice.com)


மற்ற நாடுகளை ஒப்பிடும் போதும் கூட இந்தியாவில் தான் அதிகமாக பெட்ரோல் விலை இருக்கிறது. சில அறிவு ஜீவிகள் வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் நிலைமை குறித்து தெரியாமல், அனைத்தும் தெரிந்தார் போல் பேசி வருகின்றனர். எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. தான் சொல்வது தான் சரி என்ற எண்ணம் தான் காரணம். நான் படித்த விலை பட்டியல் விவரங்கள் இங்கே.

(நன்றி: புதிய தலைமுறை) நமது அண்டை நாடான பாகிஸ்தானில் லிட்டர் பெட்ரோல் 59 ரூபாய்தான். இலங்கையில் 61 ரூபாய் 70 காசுகளாகவும், சீனாவில் 72 ரூபாய் 10 காசுகளாகவும் உள்ளது. வங்கதேசத்தில் 43 ரூபாய் 40 காசுகளாகவும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலை குறைவாக சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 5 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிக அதிகபட்சமாக நைஜீரியாவில் 181 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் லிட்டர் பெட்ரோல் விலை 53 ரூபாய் 70 காசுகளாகவும், ரஷ்யாவில் 50 ரூபாய் 20 காசுகளாகவும், பிரிட்டனில் 101 ரூபாய் 10 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக மக்கள் எவ்வளவு அடி கொடுத்தாலும் தங்குவார்கள், திரும்பி ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்பது உலக உண்மை. இலங்கை விவகாரம் வைத்தே, தமிழக மக்கள் எப்படி பட்டர்கள் என்பதையும், தமிழக அரசியல்வாதிகள் எப்படிபட்ட சுயநலம் என்பதையும் கண்டு கொள்ளலாம். ஆனால் தமிழன் மட்டும் அல்ல இந்தியனும் அதே வகை சேர்ந்தவர்கள் என்பதை இந்த பெட்ரோல் விலை ஏற்றத்தை வைத்தே சொல்லி விடலாம்.

வாழ்க ஜனநாயகம்...

Wednesday, May 02, 2012

Amazon.com: USA 2 India: Is it worth?

இந்தியா என்பது ஒரு வியாபார தளம். எல்லாவிதமான பொருட்களையும்  இங்கு விற்க முடியும். எவ்வளவு விலை கூட்டி விற்றாலும், இங்கு கேட்ட ஆட்கள்/சட்டங்கள் கிடையாது.  சட்டங்கள் இருந்தாலும், அதை செயல் படுத்தும் அதிகாரிகள்  தான் அரசு. அதிகாரிகளுக்கு கேட்டதை கொடுப்பதன் மூலம், நிறுவனங்கள் என்ன என்ன தில்லு முள்ளு செய்ய முடியுமோ அதை செய்து அவர்களுடைய பொருட்களை விற்கின்றனர். காரணம்  லஞ்சம் மற்றும் ஊழல். அதனால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் கூட இந்தியாவை குறி வைத்து தான் பொருட்களை விற்க ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற ஊர்களை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும், சென்னை படு மோசம் தான். எல்லாவற்றுக்கும் மக்கள் தொகை தான் காரணமாக வந்து நிற்கிறது. சென்னையில் எந்த பொருளையும் விற்கலாம். விற்பனை செய்பவர் வைத்தது தான் சட்டம். அவர் சொல்லும் விலை, அப்பொருளின் விலை. பாரிஸ் முதல் தாம்பரம், ஆவடி முதல் எழும்பூர் வரை, விற்பனை செய்பவர் வைத்தது தான் சட்டம் போல் இருக்கிறது. விலையை குறைத்து கேட்டால், தர முடியாது என்று நேரடியாக கூறுகின்றனர். ஏனென்றால், அதே பொருளை, நமக்கு பின்னல் நிற்கும் நபர் அதை விட அதிக விலைக்கே வாங்கி செல்வார். இது தான் தற்போதைய சென்னையின் நிலை. தக்காளி முதல் பெரிய மின்னணு சாதனங்கள் வரை ஒரே சூழ்நிலை தான் நிலவுகிறது. யார் தான் கேள்வி கேட்க முடியும். இந்த சூழ்நிலையில் தான் இணையதள வர்த்தகம் கண்கள் முன்னால் வந்து நிற்கிறது. இணையத்தில் விற்பதால் சில வலை தளத்தில் வரி இல்லை. அதுவும் கணினி, சகலவசதியுடன் கூடிய கைதொலைபேசி என்ற போன்ற வளர்ச்சியின் காரணமாக, இணையதள வர்த்தகம் முதல் இடத்தில் வந்து விடுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், இணையத்தில் பொருட்களை வாங்குவது என்பது சாதாரணம். அதே போல் இப்போது இந்தியாவில் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக போன்ற இணைய தளங்கள்.

flipkart.com
homeshop18.com
ebay.in
junglee.com
indiatimes.com
rediff.com
futurebazzar.com
indiaplaza.com
fashionandyou.com
tradus.in

மின்னணு பொருட்களை பொறுத்த வரையில், அமெரிக்காவை அடித்துக் கொள்ள முடியாது. அனைத்து பொருட்களும் பாதிக்கு மேல் விலை குறைவு. ஏன் என்று காரணம் சரியாக தெரியவில்லை. மக்கள் தொகை இந்தியாவில் அதிகம் என்றாலும், விற்க கூடிய பொருட்கள் இந்தியாவில் அதிகம் என்றாலும், விலை இந்தியாவில் தான் விற்கும் விலை அதிகம். இதற்கு வரிகள் தான் காரணமா?

இது ஒரு புறம் இருக்க, இணையத்தில் வியாபார ராஜாவாக இருக்கும் amazon.com சென்ற வருடம் உலகில் பலராலும் எதிர் பார்க்கப்பட்ட ஒரு புதிய வழிமுறையை கொண்டுவந்தது. அது உலகில் உள்ள குறிப்பிட்ட நாடுகள் அமெரிக்காவில் கிடைக்கும் பொருட்களை amazon.com ல் வாங்க முடியும். அப்பொருளை amazon.com அந்த நபருக்கு/அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கும். இவ்விஷயம் உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது நிதர்சனம்.

மற்ற நாடுகள் பற்றி தெரியவில்லை என்றாலும்,  இந்தியாவை பொறுத்த வரை, பார்சல்கள் என்பது மிக சாதாரண விஷயம். பார்சல்களை  கையாளும் விதம் மிக மிக மோசமாக தான் இருக்கும். பன்னாட்டு நிறுவனமான amazon.com வருவதால் இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். பொருட்களை கையாளும் விதம், வடிவமைப்பு, கட்டமைப்பு என்று சகலமும் மாறும் என்பதை ஒத்து கொள்ள வேண்டும். உலக அளவில் பொருட்களை அனுப்பும் போது பல வித சிக்கல்கள் இருக்க செய்யும். அதை amazon.com சிறப்பாக கையாண்டு வருவதே அதன் ஓராண்டு வெற்றி என்று கூறலாம். சில முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.

பொருட்கள் அனுப்பப்படும் இடங்கள்: ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள், ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் மற்றும் கரிப்பியன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, இஸ்ரேல, ஜப்பான், தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்.

பொருளின் விலையை தவிர இரண்டு விதமான கட்டணம் வசூலிக்க படுகிறது.

முதலாவது கட்டணம் பொருளை  பத்திரமாக வேறு நாட்டிற்கு அனுப்ப. ஒவ்வொரு நாட்டிற்கும் கட்டணம் மாறுபடும்.

இரண்டாவது கட்டணம் வரி கட்டணம். ஒரு பொருள் வெளிநாட்டில் இருந்து வருகிறது என்றால், அதற்க்காக ஒரு வரி தனியாக உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும், அவ்வரி மாறுபடும்.  இக்கட்டணம் சில நாடுகளில் இல்லாமலும் இருக்கும். ஆனாலும் முதலிலே amazon.com ஒரு கட்டணத்தை வசூலித்து விடுகிறது. இப்பொருள் அனுப்பிய நபருக்கு கிடைத்த உடன், வரி வசூல் கட்டணம், கூடுதலாக வசூலிக்க பட்டு இருந்தால், மீண்டும் மீதம் உள்ள தொகை திரும்ப தரபடுகிறது. இல்லை வரி வசூல் கட்டணம், வசூலித்ததை விட அதிகமாக கொடுக்க பட்டு இருந்தால், அப்பணம் நம்மிடம் இருந்து வசூலிக்க படுகிறது.

அமெரிக்காவில் உள்ளது போல் இங்கும் பொருட்கள் அனுப்பபட்ட உடன், பொருள் எங்கு உள்ளது என்பதை அறிய தொழில்நுட்பம். இந்தியாவில் எந்த நிறுவனத்தை அது தேர்ந்து எடுத்து உள்ளது என்பதை பொறுத்து நாம் பெற முடியும்.

இதை தெரிந்து கொள்ள நான் ஒரு மின்னணு 5.1  ஓலி கருவியை எடுத்து கொண்டேன். இதனுடைய விலை இந்தியாவில் ரூ.16000 முதல் 18000 வரை. ஆனால் இதே பொருளின் விலை அமெரிக்காவில் டாலர் 182.96 மட்டுமே (ஒரு டாலர் என்பது ரூ.50 கணக்கில்). அதாவது பாதிக்கு பாதி. இத்தனைக்கும் பெரும்பாலான பொருட்கள், சீனாவில் இருந்தே தயாரிக்க பட்டு, ஏற்றுமதி செய்யபடுகிறது. ஆனால் விலையின் வித்தியாசத்தை காணுங்கள் இப்போது இந்த ஒலி கருவியை, நான் amazon.com ல் உலக அளவில் ஏற்றுமதி ஆகும் வரைமுறை படி வாங்கினால், அதனுடைய விலை கீழ்கண்டவாறு மாறிவிடுகிறது.



பொருளின் விலை
$182.96
ரூ 9,148.00
இப்பொருளை இந்தியாவிற்கு அனுப்ப
$63.79
ரூ 3,189.50
சுங்க வரி
$64.62
ரூ 3,231.00
மொத்தம்
ரூ 15,568.50

அதாவது, கிட்டத்தட்ட இந்தியாவின் கிடைக்கும் பொருளின் விலைக்கு வந்துவிடுகிறது. இப்போது இரண்டு முக்கிய விஷயங்கள், கவனிக்க வேண்டும். முதலாவது விஷயம்: சுங்க வரி என்பது பொருளின் விலையை பொறுத்து மாறும். நாம் அதிகமாகவும் கொடுத்து இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் நேரத்தில், அதிகமாக எடுத்த பணம், நம்மிடம் திரும்ப கொடுக்க படுகிறது. அதே நேரத்தில், சுங்க வரி அதிகமாகும் போது, மீண்டும் பணம் நம்மிடம் இருந்து வசூலிக்கபடுகிறது. ஆக மொத்தித்தில், பொருளின் முடிவான விலை சில நாட்கள் கழித்தே நமக்கு தெரியும்.

இரண்டாவது விஷயம்: amazon.com ல் வாங்கிய பொருட்களுக்கு வாரண்டி என்ற விஷயம் என்பது வருமா என்பது கேள்வி. எனக்கு தெரிந்தவரை, உலக அளவில் வாரண்டி என்பது பல பொருட்களுக்கு கிடையாது. அதனால் வாங்கும் போது, உலக வாரண்டி உள்ளதா என்பதை அறிய வேண்டும். 

நானும் பல முறை யோசித்து, தளத்தில் வாங்குவது வீண் என்ற முடிவிற்கு வந்து விட்டேன். இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும், நான் கண்ட அனுபவம் என்ற முறையில் பதிவு செய்து விடுகிறேன்.

Wednesday, April 18, 2012

சூரிய மின்சக்தி


சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த முக்கிய விஷயம் சூரிய மின் சக்தி பயன்பாடு.  அ.தி.மு.க அரசு வரும்போது எல்லாம் ஏதாவது முக்கிய மக்கள் பிரச்சனை கையாளும். சென்ற முறை மழை நீர் சேமிப்பு திட்டம். இம்முறை சூரிய மின் சக்தி. நான் எழுதுகின்ற முறையை பார்த்து அ.தி.மு.க தொண்டன் என்று நினைத்து கொள்ள வேண்டாம். ஒரு லட்சம் மக்களை கொன்ற தி.மு.க அரசு தான், தமிழ் நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை, உலகதரத்தில் சாலைகளை போட்டு உள்ளது. என்ன தான் அவர்கள் கொள்ளை அடித்தாலும், நிச்சயமாக இந்த சாலைகளை போட்டு சென்றதில் அவர்களுக்கு ஒரு பேர் உண்டு. அதே போல் அ.தி.மு.க என்ன தான் பல கொடுமைகளை செய்து இருந்தாலும் மற்றும் செய்து கொண்டு இருந்தாலும், பாரட்ட பட வேண்டிய விஷயம், மழை நீர் சேமிப்பு திட்டம் மற்றும் வர போகின்ற சூரிய மின் சக்தி பயன்பாடு. இந்த மின் பயன்பாட்டில் நான் பார்த்த மற்றும் கேட்ட விஷயங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

தற்போது தமிழ்நாட்டில் மிகவும் பயன்பாட்டில் இருக்கும் சாதனம் என்றால் அது இன்வேர்டோர் என்று அழைக்கப்படும் ஒரு மின் சாதனம். பாட்டரி மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து மின்னணு பொருட்களை செயல் பட வைக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு, இந்த இன்வேர்டோர் சாதனம் வெறும் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் தான் இருந்தது. அதே போல் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் தான் மின் தொடர்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்று எட்டு மணி நேரம் முதல் பதினைந்து மணி நேரம் வரை, மின் இல்லாமல் இருக்கிறோம். அதனால் இந்த இன்வேர்டோரை அனைத்து மக்களும் வாங்க, அதன் விலை பதினாறு முதல் இருவது ஆயிரம் வரை சென்று விட்டது. இப்போது பணம் கொடுத்தல் மட்டும் தான், நான்கு நாட்களுக்கு பிறகு இன்வேர்டோர் கிடைக்கும். சரி இந்த இன்வேர்டோர் போட்டாலும், பிரச்சனை வேறு விதமாக வந்து விட்டது. இந்த இன்வேர்டோர் பயன்பாட்டிற்கு வர குறைந்தது நான்கு மணி நேரம் மின் இணைப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மின் இருப்பதே இல்லை. அதனால் இன்வேர்டோர் சார்ஜ் ஏறாமல் இருக்கிறது. இன்வேர்டோர் இருந்தும் பயன்படாமல் போகின்ற சூழ்நிலை தற்போது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு வலைதளத்தில்  இந்தியாவின் மின் உற்பத்தி பற்றி படிக்கும் போது, கண்டிப்பாக சில வருடங்களுக்கு பிறகு மின் கண்டிப்பாக பற்றாமல், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனை போல பெரியதாக வெடிக்கும் என்றும், அதனை போக்க சூரியமின் சக்தியே கையில் இருக்கும் ஒரே தீர்வு என்று கூறபட்டு இருந்தது. சூரிய மின் சக்தி என்பது அரசு கையில் மட்டுமே இருக்கும் என்று நம்பாமல், நாமே முன் நோக்கி எடுத்து வைக்க வேண்டும் என்றும் இருந்தது. அதனால் அப்போதே, நான் இந்த சூரிய மின் சக்தியை பற்றி விசாரிக்க தொடங்கினேன். இணைய தளத்தில், படித்த வரை வீட்டிற்கு சுமார் இரண்டு லட்சம் வரை செலவு ஆகும் என்றும், வெயில் காலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இன்வேர்டோர் வீட்டின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. தேவை இல்லாமல் பத்தாயிரம் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்து போடாமல் இருக்கும் போது, இரண்டு லட்சம் என்ற உடன், பின் வாங்கி விட்டேன்.

இப்போது என் நண்பர்கள் குழுவில், தீடிர் என்று இந்த சூரிய மின் சக்தியை பற்றி பேச்சுகள் வரவே, மீண்டும் பழைய படி நான் விசாரிக்க தொடங்கினேன். சூரிய சக்தி வீட்டு உபயோகத்திற்கு செய்து தரும் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, கீழ் கண்ட விஷயங்கள் தெரியவந்தன.

  • வீட்டின் பயன்பாட்டிற்கு சூரிய சக்தியை கொடுக்க, 1000w க்கு  நிறுவனம் மூன்று லட்சம் ஆகும் என்று கூறியது.
  • மின் விசிறி, மின் விளக்கு, கணிபொறி மற்றும் தொலை காட்சிக்கு மட்டுமே இந்த 1000w பயன்படும்
  • இதை தவிர வரியை தனியாக கட்ட வேண்டும் என்றும் அதை பொருத்துவதற்கு தனி செலவு என்றும் கூறியது
  • இந்த 1000w அரசு தரும் மானியம் ரூ. 81  ஆயிரம். மானிய பணத்தை முதலில் நாம் கையில் இருந்து போட வேண்டும். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, அப்பணம் நம் கைக்கு திரும்ப வரும்.

கூட்டி மற்றும் கழித்து பார்த்தல், நம் கையில் இருந்து சுமார் 2.5 லட்சத்தை போட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டம் வரும் போது சுமார் ரூபாய் பத்தாயிரம் தான் செலவு ஆனது. அதனால் பாமர மக்கள் எப்படியோ சமாளித்து விட்டனர். ஆனால் இப்போது 2.5 லட்சம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசு தரும் மானியம் கூட்டினாலும், பாமர மக்கள் கண்டிப்பாக இதை நிறுவ மாட்டார்கள் என்பது உறுதியாக சொல்லலாம். இப்போது தமிழக அரசு அறிவித்த விஷயத்தில், எப்படி பாமர மக்கள் இதை பயன் படும் படி செய்ய போகிறார்கள் என்பதை கூறவில்லை. மறுபடியும் இந்த மானியம் மக்களின் உழைப்பை உறுஞ்சும் பெரிய நிறுவனங்களுக்கே சென்று அடையும் நிலைமை.

Tuesday, April 17, 2012

வாழ்வா, சாவா?


2010ம் ஆண்டில் இருந்தே இந்தியாவிற்கு கேட்ட நேரம் போலும் (முக்கியமாக நமக்கும் தான்). வெளி நாட்டில் இருக்கும் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று விட்டு, தன் சொந்த நாட்டில் பல கோடி மக்களை கொல்ல முடியாமல், ஏழை மக்களை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து,  நடுத்தர மக்களாக இருக்கும் அனைவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் அளவிற்கு கொண்டு சென்ற, காங்கிரஸ் ஆட்சியாளருக்கு முதலில் ஒரு கண்ணீர் வாழ்த்துக்கள். அது போக தமிழக அரசும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழக மக்களை எவ்வாறு கொல்கிறனர் என்பதன் சுருக்கம்.

  • பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவை, பெட்ரோல் நிறுவனத்துக்கே கொடுத்து, அனைத்து பொருட்களின் விலையை மறைமுகமாக கூட்டி அனைத்து ஏழை மக்களையும் மேலும் ஏழை ஆக்கியது தான் காங்கிரஸ் அரசின் முதல் வெற்றி.
  • பண புழக்கத்தை கட்டு படுத்துவதாக கூறிக் கொண்டு RBI , 8 முறைக்கு மேல் வட்டி விகிதத்தை மாற்றியது. வீட்டு கடன் கொண்டு வாழும் ஒரு தனி நபரின் வருமானத்தில் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வரை அடி வாங்க வைத்தது.
  • சென்ற தமிழக அரசு செய்த நன்மையின் பலனாக, தமிழகத்தில் எந்த ஒரு ஊரிலும் நிலம் வாங்க முடியாத சூழ்நிலை. இதை தவிர தற்போதைய அரசு, நிலத்திர்க்கான மதிப்பை கூட்டி, மேலும் மக்களை வதக்கியது.
  • பால் விலை ஏற்றம்
  • பேருந்து கட்டண ஏற்றம்
  • இரண்டு மற்றும் நான்கு வாகனத்தின் இன்சூரன்ஸ் 45% ஏற்றியது.
  • மின் கட்டண ஏற்றம்
  • சேவை வரி 2 % ஏற்றம்
  • சுங்க வரி 2 % ஏற்றம்
  • கலால் வரி 2 % ஏற்றம்
  • சமையில் எரிபொருளின் மானிய தொகையை குறைத்தது
  • பொறியியல் படிப்பு ஏழை மாணவனுக்கு சொந்தம் இல்லை என்பதை காட்டும் விதமாக, அனைத்து கட்டணத்தையும் ஒரே விதமாக மாற்றியது.
  • இந்திய ஏழை நாடு எல்லா என்பதை உலகிற்கு மறைக்கும் நோக்கத்தோடு  தினமும் ரூ. 28 செலவு செய்தால், ஏழை என்ற வார்த்தை இல்லை என்ற அறிவு ஜீவிகளின் அறிக்கையை அப்படியே எடுத்து கொண்டது.
  • அணு பாதிப்பில் தமிழ்நாடே பூண்டோடு அழிந்தாலும் பரவா இல்லை என்று, இரஷ்ய நாட்டிற்கு அடிமையாக இருக்க விரும்பும் இந்த மானங்கெட்ட மத்திய அரசை இன்னுமும் நம்புகின்றோம்.
  • விலை உயர்வின் காரணமாக, சொல்லாமல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் தானாகவே பெரிய தொழில் நிறுவனத்தினர் ஏற்றி விட்டனர். இதில் விசேஷம் என்னவென்றால், பொருட்கள் வாங்கும் போது தான் அதனுடைய விலை ஏற்றத்தை அறிய முடிகிறது. மக்களுக்கும் மற்றும் அரசுக்கும் தெரியாமல் விலை ஏற்றி விடுவது தான் கொடுமை.
  • தற்போதைய அரசு செய்து கொண்டு இருக்கும் மற்றொரு மோசமான காரியம், பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது. அதை விட கொடுமையான விஷயம், இந்தியாவின் இயற்கை வளங்களை (எண்ணை மற்றும் நிலக்கரி) தனியாருக்கு வாரி கொடுத்து, இந்திய மக்களுக்கு நாமத்தை போடுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் அறிவுஜீவிகள் இந்தியா முன்னேறுகிறது, ஏன் விலைவாசி ஏறுகின்ற மாதிரி தான்  இந்திய மக்களின் சம்பளமும் ஏறுகிறது என்று விவாதத்தை முன் வைக்கின்றனர். இதற்கு முன் நானும் வெளிநாட்டில் (அமெரிக்கா) ஒன்றரை வருடங்கள் இருந்து, அங்கு உள்ள வாழ்வதற நிலையை அறிந்தவன் என்ற கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். இப்போது என்னால் இரண்டு நாடுகளின் வாழ்க்கை நிலை பற்றியும், இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையையும் என்னால் நன்கு வித்தியாசம் காண முடிகிறது. வெளிநாட்டிற்கு செல்லும் முன், இந்தியாவில் வாழ்வது நான் மிக சுலபம் என்று நினைப்பு, அமெரிக்காவில் சென்ற உடன், அங்கு வாழும் வாழ்க்கை முறைக்கு அங்கு கொடுக்க படும் சம்பளம் சரி தான் என்ற தெரிந்தது.ஆனால் மீண்டும் இந்திய வந்த பிறகு, இந்தியாவில் வாழ்வது தான் கஷ்டம் என்ற முடிவுக்கு என்னால் வர முடிந்தது. காரணம் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றங்கள் என்று கூற முடியும்.  மிக எளிய முறையில் புரியும்படி சொல்வது என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண தோசையின் விலை ரூ.13 . ஆனால் இப்போது அதே தோசையின் விலை ரூ. 30 . சதவீத கணக்கில் 231%. அதே போல் இந்தியாவின் மிக முக்கிய ஆபரணமாக இருக்கும் தங்கத்தின் விலை ஐந்து வருடங்களுக்கு முன் ரூ.842 ஒரு கிராம். ஆனால் இன்று ரூ. 2668. சதவீத அடிப்படையில் 317%.

Item
Initial Price
Current Price
Amount Difference
No of years in difference
Change in % level
Dosai
13
30
17
2
131%
Gold Rate
842
2668
1826
5
245%
Coffee
12
35
23
3
192%

இதே போல் அனைத்து பொருட்களையும் வைத்து பார்த்தால், நமக்கு கிடைக்கும் சம்பள உயர்வு 8 முதல் 14% எவ்வாறு நமக்கு கட்டுபடி ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.  அதே போல் இந்தியாவில் பாதிக்கு பாதி நடுத்தர மக்கள் உள்ள நாடு. ஏழை மக்கள் 30 %.  ஒரே போது கூற்றை மக்கள் மத்தியில் வைக்கும் போது, அதை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்.  அமெரிக்காவில் இருந்து கொண்டு, இந்திய முன்னேறுகிறது என்பதை எதோ ஒரு ஆங்கில பத்திரிகை படுத்து விட்டு பேச கூடாது. இந்தியாவில் இப்போது அடிப்படை வாழ்க்கை கூட வாழ முடிய சூழ்நிலை என்பதை அறிய இந்தியாவில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.