எனது பழைய அலுவலக நண்பர் திரு. மௌரீஸ் அவர்களுக்கு இன்று 27 ம் தேதி பாண்டிச்சேரியில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்..
Friday, August 27, 2010
திருமண வாழ்த்துக்கள் - மௌரீஸ்
ஹரி பிரவுன் – Harry Brown – 2009 - ஆங்கிலம் - திரைவிமர்சனம்
முதுமையான காலத்தில் தனியே வாழும் மைக்கேல் கினே, உடம்பு சரியல்லதா நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியை போய் கவனித்து கொள்வது தான் அவருடைய வேலை. மாலை பொழுதில் தன் நண்பர் டேவிட் பிராட்லி உடன் பாரில் அமர்ந்து செஸ் விளையாடுவது பொழுதுபோக்கு. மனைவி இறந்து போக, மேலும் தனிமை படுத்த படுகிறார். இந்த நிலையில் நண்பர் தற்காப்புக்காக ஒரு கத்தியை வைத்து இருப்பதை காட்டி, அவர் இருக்கும் ஏரியாவில் இளவயது மக்களால் தனக்கு என்று படும் பிரச்சனையை கூறுகிறார். அங்கு இருக்கும் இளம்வயதினர் துப்பாக்கி வைத்து இருப்பதையும், போதை பொருள் அடிமைகளாக இருப்பதையும் மற்றும் கொலைகள் கூட அங்கே சாதாரணமாக நடப்பதை கூறுகிறார். அந்த இடத்தை தாண்டும் போது பல பிரச்சனைகள் தனக்கு ஏற்படுவதாகவும், அதனால் கத்தியை தற்காப்புக்காக வைத்து இருப்பதை கூறுகிறார். ஆனால் இதை காவல் துறையிடம் கூறலாம் என்று கூறி சென்று விடுகிறார்.
அடுத்த நாள் காலையில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் வந்து நண்பர் இறந்து விட்டதாகவும், அவரை பற்றி விசாரித்தும் வருகின்றார். ஆனால் மைக்கேல் மனம் உடைந்து போகிறார். காவல் துறை அதிகாரிகளின் விசாரணை ஆரம்பிக்கிறது. ஆனால் விசாரணை முடிவில் என்ன நடந்தது மற்றும் மைக்கேல் என்ன செய்தார் என்பதை திரையில் காணலாம்.
முதுமை காலத்தில் உள்ள தனிமையை இங்கே பார்க்கும் போது மனதில் ஒரு வலி ஏற்பட தான் செய்கிறது. எப்படி இந்த வயதிலும் மைக்கேல் நடிக்கிறார் மற்றும் ஓடிகிறார் என்றே தெரியவில்லை. பழிக்கு பழி வாங்கும் கதைகள் பல இருந்தாலும், உண்மையான முதுமை காலத்தில் பழி வாங்குதல் என்பது கடினம் தான். திரைகதை மிக மெதுவாக சென்றாலும், முடிவில் ஓகே என்றே தோன்றும்.
இப்படம் இருப்பதே நமக்கு தெரியாது. நம்ம சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிக்குமார் இதே படத்தை "நகரம்" என்ற பெயரில் நம்மூர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சில மாறுதல்களை செய்து இயக்குவதாக கேள்வி பட்டதால் இந்த படத்தை தேடி கண்டுபிடித்து பார்த்தேன். இது உண்மையா என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படம் ஓகே தான்
Thursday, August 26, 2010
பெண்ணிடம் இரகசியம் - மகாபாரதம்
நம்ம தான் பொழுது போகலன்ன மகாபாரதம் பாக்குற ஆளாச்சே. இப்படிஅப்படின்னு ஒரு பகுதி பாத்துகிட்டு இருக்கும் போது ஒரு சின்ன வசனம் கேட்டப்ப சிரிப்பு வந்துருச்சு. ஆனா யோசிக்கவும் வச்சது அது உண்மையா அல்லது பொய்யா என்னு
அர்ஜுனன் கர்ணனை கொன்ற இரவு பொழுதில், குந்தி மாதா கர்ணனின் சடலத்தை தன் தொடையில் வைத்து அழுது கொண்டு இருப்பதை கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் தர்மராஜன் பார்க்க, இரண்டு பேர் ஆச்சிரியம் அடைகின்றனர். தர்மராஜன் தன் தாயிடம் ஏன் இவனுக்காக கண்ணீர் சிந்துகிறிர்கள் என்று காரணம் கேட்க, குந்தியும் அவர்களிடம் கர்ணன் தன் மகன் என்று கூறி விஷயத்தை விளக்குகிறாள். ஆனால் தர்மராஜன் இந்த விஷயத்தை ஏற்று கொள்ளவில்லை. எப்படி ஒரு தாய் தன் மக்களிடம் ஒரு விஷயத்தை மறைக்கலாம் என்று கோபப்பட்டு, ஒரு சாபத்தை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கிறார். அச்சாபம் என்னவென்றால் "இனிமேல் எப்பெண்களாலும் எந்த இரகசியத்தையும் அவர்கள் மனதில் வைத்து கொள்ள முடியாது"
மகாபாரத்தின் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இச்சாபம் உண்மையில் தர்மராஜன் கொடுத்தாரே இல்லையோ, இயக்குனரின் கற்பனை திறனை பாராட்டே ஆக வேண்டும். இக்காட்சியின் எப்படி ஒரு வசனத்தை வைக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் உலக உண்மைகளை (??) இதில் பொருந்தும் அளவுக்கு வைத்த அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
Wednesday, August 25, 2010
Identity – 2003 – ஆங்கிலம் - திரைவிமர்சனம்
திரில்லர் மற்றும் சஸ்பன்ஸ் படங்களை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டதே, எந்த படத்தை பார்க்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது இந்த படம் பார்க்க நேர்ந்தது. படத்தை இரண்டு முறை பார்த்து தான் பல வசனங்களை மற்றும் காட்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. கதை என்று பார்த்தல் எப்போதும் போல தான்: இரவில் அதுவும் பேய் மழை பெய்யும் நேரத்தில் 11 பேர் எதிர் பாராமல் சந்தித்து ஒரே ஹோட்டேலில் தங்கும் நிலை ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் வேறுபட்ட கதை மற்றும் சூழல். அனைவருக்கும் ஒவ்வொரு அறையும் கொடுக்கபடுகிறது. நேரம் ஆக ஆக அனைவரும் ஒவ்வொருவராக கொலை செய்ய படுகிறார்கள். கொலைகள் நடக்கும் இடத்தில் வரிசையாக அறையின் பூட்டு எண்கள் கிடைக்கிறது. பத்தில் இருந்து ஆரம்பித்து வரிசையாக ஒன்பது, எட்டு என்று செல்கிறது. கொலைகள் செய்து யார் என்பது திரையில் காணலாம்.
இதிலும் கொலையாளி, தான் மனதால் வேறுநபராக இருந்து கொலைகளை செய்வது. நம்ம கருப்ப சாமி மர்ம தேசம் நாடகத்தில் வந்த விஷயத்தை தான் இங்கு படமாக கொடுத்து உள்ளனர். இதில் யோசிக்க பட விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு கதாபத்திரத்தின் பேரும் ஒவ்வொரு ஊரை சார்ந்தது. பத்து பேரின் பிறந்த நாளும் மே மாதம் பத்து. அது போக பல வசனங்களில் பத்து பத்து என்று கேட்கும். சஸ்பன்ஸ் மற்றும் திரில்லர் கதையை விரும்பும் நண்பர்களுக்கு நல்ல விருந்து..ஆனால் கண்டிப்பாக இப்படம் சிறுவர்களுக்கு இல்லை.
Tuesday, August 24, 2010
மோசமான வாரம்
இந்த வாரம் என்னாச்சு தெரியலே, மோசமான படமா பாத்து தலைவலி வந்துதது தான் மிச்சம். இந்த மாதிரியான படங்களை வேறு மாநில மக்களோ அல்லது வெளிநாட்டினரோ பார்த்தால் தமிழ் சினிமாவ பத்தி என்ன நினைப்பாங்க.
ஆதவன்
குரு சிஷியன்
சிங்கம் (இது பரவாவில்லை)
தெய்வமே, மோசமான இயக்குனர்கள் இடம் இருந்து நம்ம தமிழ் திரையுலகை காப்பாத்துப்ப...
Subscribe to:
Posts (Atom)





