கல்லூரியில் படிக்கும் போது எத்தனை பேர் நம்முடன் படித்தாலும், கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு சிலருடன் மட்டும் தான் தொடர்பு இருக்கும் என்பது நிதர்சனம். நான் தொழில்நூட்ப கல்லூரியில் படித்து சுமார் பதினோரு ஆண்டுகள் கழிந்தாலும், ஐந்து பேரின் தொடர்பு/நட்பு மட்டும் இன்னும் இருக்கிறது என்பதில் பேரின்பம். அந்த ஐவரில், முதலாவது நண்பர் தான் பாலசுப்ரமணியன். சைதை பெரியவர் என்று எங்களால் செல்லமாக அழைக்கபடும் நண்பர். சில அல்ல, பல நேரத்தில் உற்ற துணையாக நின்று எனக்கு உதவி செய்தவர். சில மனிதர்களை பார்க்கும் போது, அரிது என்று தோன்றும். அந்த இடத்தில் இருக்கும் நபர்.
அவரின் திருமணம் இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைப்பெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Monday, December 05, 2011
திருமண வாழ்த்துக்கள் - பாலசுப்ரமணியன்
Labels:
திருமணம்,
மதுரை,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Friday, December 02, 2011
திருமண வாழ்த்துக்கள் - கமலேஷ்குமார்
எனது பொறியியல் கல்லூரி நண்பர் கமலேஷ்குமார் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
1.5 ஆண்டுகளுக்கு பிறகு, நான் கலந்து கொள்ளும் பொறியியல் நண்பரின் திருமணம் என்பதால், இந்த விழாவில் பல நண்பர்களை காண முடியும் என்பதால், ஒரு எதிர்பார்ப்பு என்னிடத்தில் இருக்கிறது.
1.5 ஆண்டுகளுக்கு பிறகு, நான் கலந்து கொள்ளும் பொறியியல் நண்பரின் திருமணம் என்பதால், இந்த விழாவில் பல நண்பர்களை காண முடியும் என்பதால், ஒரு எதிர்பார்ப்பு என்னிடத்தில் இருக்கிறது.
Labels:
திருமணம்,
மதுரை,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Thursday, December 01, 2011
மீண்டும்...மீண்டும்...II
சென்னையில் நடந்த ஒரு வீபரீதத்தை பார்க்கும் முன், நான் டாலர் தேசத்தில் தங்கி இருந்த கிராமத்துக்கு அருகில் ஒரு விமான நிலையம் உள்ளது. மொத்தமே சில விமானங்கள் தான் வந்து செல்லும் இடம். அது போலேவே சிறியவகை விமானங்களே மட்டுமே கையாளும் நிலையம். மதுரையில் இருந்து எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அங்கு வரவே, அவரை வரவேற்க நான் சென்று இருந்தேன். அவர் சென்னை விமான நிலையத்தில் கொடுத்து இருந்த அவருடைய கை பெட்டிகள் மட்டும் அவருடன் வந்து சேர வில்லை. உடனடியாக அங்கு உள்ள அதிகாரியை தொடர்பு கொண்ட போது, மிக பொறுமையாக பெட்டிகளின் எண்ணை எடுத்து, கணிப்பொறியில் இருந்து பெட்டிகளின் நிலையை என்னவென்று கூறினார். அந்த பெட்டிகள் இப்போது எங்கு உள்ளது மற்றும் எப்போது இந்த விமான நிலையத்திற்கு வந்து அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று பொறுமையாக எடுத்து கூறினார். நண்பர் டாலர் தேசத்திற்கு புதியவர் என்பதால், தொடர்பு கொள்ள என்னுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் கொடுத்தேன். இரவு எட்டு மணிக்குள் அனைத்து காட்சிகளும் நடைபெறுகிறது.
அதே தினத்தில் நடுஇரவு தொடங்கும் முன் தொலைபேசி அடித்தது. ஒரு வெள்ளைகார மனிதர் பேசினார். உங்களது முகவரியை தேடி கொண்டு இருக்கிறேன். அருகாமையில் உள்ள இடத்தை கூறவும் என்றார். நான் நீங்கள் யார் என்று கேட்டும் போது தான், அவர் எனது நண்பர் வந்து இறங்கிய விமானத்தை சேர்ந்தவர் என்றும், தொலைந்து போன பெட்டிகள் கொண்டு வந்து இருப்பதாவும் கூற, எனக்கு மகிழ்ச்சி. இது தான் விமானத்தில் பயணம் செய்யும் சந்ததர்களை மதிக்கும் விமானத்தை நடத்துவோரின் பண்பு. சுமார் 55 வயது உள்ள மனிதர். அவரே 23 கி.லோ எடை உள்ள பெட்டியை இரண்டாவது மாடிக்கு கொண்டு வருவதை பார்த்து, நானும் உதவி செய்தேன். ஆக மொத்தம் தொலைந்து போன போட்டிகள் வீடு தேடி வந்த கதை.
இப்போது சென்னையில்...
9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் வந்து இறங்கிய உடன், நானும் எனது பெட்டிகளுக்காக காத்து இருந்தேன். கடைசியாக எனது பெட்டிகள் தொலைந்து போனது தெரிந்தது. ஆம் தொலைந்து போனது எனது இரண்டு பெட்டிகள் மற்றும் நான் டாலர் தேசத்தில் வாங்கிய பெரிய தொலைக்காட்சி பெட்டி. தொலைந்து போன இரண்டு பெட்டிகளுக்கு கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் தொலைகாட்சி பெட்டி காணமல் போனது தான் என்னை பயமுரித்தியது. ஏற்கனவே நான் தொலைகாட்சி பெட்டி உடைந்து போய் வந்து இருக்குமோ என்ற பயத்தில் இருந்த நான், காணமல் போனது என்னை மேலும் பலவீனம் ஆக்கியது. நானும் இதே மாதிரியான பிரச்சனை எனது நண்பர்களுக்கு பார்த்து உள்ளத்தால், சிறிது தைரியம் இருந்தது. நானும் அமெரிக்காவில் இருப்பது போல், பெட்டிகளின் என்னை கொடுத்தால், அவர்கள் பெட்டிகள் எங்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், நான் வந்து இறங்கிய விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்ட போது தான் எனக்கு மயக்கம் மற்றும் பயமும் வந்தது. ஆம் அவர்கள் ஒரு வெள்ளை தாளை எடுத்து கொடுத்து, அதில் பிரச்சனையை எழுத கூறினார். நான் இருக்கும் இடத்தை மீண்டும் நினைவு படுத்தி பார்த்தேன். ஆம் நான் நிற்கும் இடம் சென்னையில் உள்ள வெளிநாட்டு பயணிகள் வந்து சேரும் இடம் தான். அங்கேயே வெள்ளை தாள் என்றால், இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களின் நிலைமை??? டாலர் தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விமான நிலையத்தில் தொலைந்து போன பெட்டிகளை கண்டு பிடிக்கும் போது, மிக பெரிய விமான நிலையமான சென்னையில் பெட்டிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. எனது பிரச்சனையை வாங்கி கொண்டு, அவர்கள் கூறிய பதில், நாளை காலை உங்களுக்கு தொலைபேசி மூலம் விஷயத்தை விளக்குவார்கள் என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர்.
பெட்டிகள் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் இந்த பளைபோன சென்னை விமான நிலையத்தை விட்டு போகும் போது, அடுத்து நடக்க இருக்கும் ஒரு விளையாட்டு தெரியாமல்....தொடரும்
Tuesday, November 29, 2011
மீண்டும்... மீண்டும்... – I
நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் என் வலை பதிவில். நான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இரண்டு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவில் கடைசி மூன்று மாதத்தில், மனதில் ஒரு தடுமாற்றம். ஏதோ ஒரு சிந்தனை. யோசிக்க முடியாமல் ஒருவித எண்ணம். எடுத்த, எடுக்கின்ற மற்றும் எடுக்க போகும் முடிவுகள் சரியா என்ற என்ன ஓட்டம். இந்த மன ஓட்டங்கள், என்னை தொழில் வழியாகவோ அல்லது தனிபட்ட முறையிலோ என்னை கொல்லாமல் இருந்தாலும், பாதிக்கபட்டதாக நான் நினைத்து இந்த வலை பதிவு தான். என்னால் இந்த பகுதியே வர இயலாமல் போனது. மீண்டும் நம்பிக்கையுடன் கடந்த சில மாதத்தில் நடந்த என் அனுபவங்கள் இங்கே.
இந்தியா கிளம்புவதற்கு நான் தயாரான போது தான், இரண்டு விஷயங்கள் என் கண் வந்து ஓடின. அமெரிக்காவில் பல பகுதிகளுக்கு நான் சென்று இருந்தாலும், நயாகரா நீர்வீழ்ச்சி போகவில்லை என்ற மனக்குறையும், சென்னைக்கு செல்லும் போது எந்த பொருளை வாங்கி செல்ல வேண்டும் என்ற குழப்ப நிலையம் தான் அதிகமாக இருந்தது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நான் பார்த்த வரையில் மின்சாதன சந்தையில் எந்த விதமான மாற்றம் இல்லை (இரண்டு/மூன்று பொருட்களை தவிர). 2 மாதத்தில் அனைத்து பொருட்களையும் அலசி, கடைசியாக தொலைகாட்சி தான் எடுத்து செல்ல சரியான பொருள் என்று அறிந்து, முடிவு செய்யலாம் என்ற நேரத்தில் தான், எப்படி அதை இந்திய வரை கொண்டு செல்வது என்ற கேள்வி என் முன் வந்தது. நான் திரும்ப வருவதற்கு என் கம்பெனி பயணசீட்டு வழங்குவதால், என் இடத்தில் இருந்து கிளம்பும் அனைத்து விமான கம்பெனியிலும் கேட்டு, அது போக யார் யார் இதுவரை தொலைகாட்சியை இந்தியாவிற்கு கொண்டு சென்று உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அனைவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு, அதேபோல் எனது நண்பர்கள் மூலமாக இந்த பெட்டி இந்தியாவில் பிரச்சனை இல்லாமல் ஓடுமா என்ற விடைக்கு பதில் கிடைத்தபிறகு, ஒருவழியாக தொலைகாட்சியை வாங்கி விட்டேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் இல்லாததை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பெரிய தொலைகாட்சியை வாங்கினேன். சுமார் ஒரு மாதகாலமாக அதை உபயோகபடுத்தி, பிறகு தான் இந்த பெட்டி இந்தியாவிற்கு சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. விமான நிலையத்தில் கூறியவாறு, தொலைகாட்சியை பெட்டியில் பத்திரபடுத்தி, விமான நிலையம் சென்று கொடுத்தேன். அவர்கள் "உடையும் பொருள்" என்ற வாசகத்தை அதில் ஒட்டி, சாதாரணமாக எடுத்து சென்று விட்டனர். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், தொலைகாட்சியை விமானத்தில் எடுத்து கொண்டுவர தனியாக பணம் கொடுக்க தேவையில்லை. விமான நிலையத்தினர் தொலைகாட்சியை கூட சாதாரண பெட்டி போல் கருதி, எடுத்து கொள்கின்றனர். ஆனால் விமானத்தில் எத்தனை பெட்டிகளை எடுத்து செல்வது என்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறை இதற்கும் அடங்கும்.
அமெரிக்காவில் நடந்ததை விட சென்னையில் தான்... தொடரும்

Friday, August 19, 2011
சமீபத்தில் என்னை கவர்ந்த உரை
தமிழ்நாட்டில் இருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்போது இப்படி பேசுவார்கள்... இந்த கனவு, பகல் கனவு மட்டுமே
Subscribe to:
Posts (Atom)