Tuesday, February 01, 2011

சமீபத்தில் ரசித்தது - முன்தினம் பார்த்தேனே

தமிழகத்தை பொறுத்த வரை (குறிப்பாக தென் தமிழகம்), நித்திரை தொடங்கும் போது இளையராஜா பாடல்கள் தான் அனைத்து ரேடியோக்களிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும். வேறு எத்தனையோ இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் அவர்களின் பாடல்கள் இனிமையாக இருந்தாலும் இரவு ஆரம்பித்தவுடன் அதை நிறுத்தி விடுவார்கள். இந்த அனுபவம் நான் சென்னையிலும், மதுரையிலும் கண்டது. ஆம் மனதை வருட இளையராஜா மட்டுமே முடியும் என்பது என் கருத்து. அதே போல் ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதமாக அமைப்பது இளையராஜாவின் தனித்திறமை. இதுவும் என் தனிப்பட்ட கருத்து தான்.

கடந்த ஆண்டில் வெளிவந்த ஒரு படத்திலும் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படி இல்லையா என்று நினைத்து பல படங்களை ஆராய்ந்த போது ஆறு பாடல்களும் இளமை துள்ளல்கள் உடன், எப்போதும் ரசிக்கும் படி இருந்தது "முன்தினம் பார்த்தேனே" என்ற திரைப்படம். இப்படத்தின் இசை அமைப்பாளர் பாய்ஸ் தமன். இப்படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஆனால் இசை முழுவதும் நெஞ்சை தொடும் ரகம். வரிகள் முழுவதும் மனதில் காதலை ஏங்க வைக்கும் ரகம். எப்படி இந்த பாடல்கள் வெளியில் தெரியாமல் போனது என்றே தெரியவில்லை. என்னை பொறுத்த வரை 2010ல் வெளிவந்த சிறந்த பாடல்கள் இது தான் என்பேன்.



ஏற்கனவே இப்படத்தை பார்த்து படு மோசம் என்று தெரிந்தாலும், இப்பாடலுக்காகவே மீண்டும் படத்தை பார்த்தேன்.

இசைஅமைப்பாளர்  தமனுக்கு பெரிய எதிர்க்காலம் உண்டு என்பதை இப்பாடல்களை கேட்டாலே தெரியும். என்னை ரசிக்க வைத்த தமனுக்கு வாழ்த்துக்கள்.

No comments: