Saturday, December 26, 2009

வேட்டைக்காரன்: திரைவிமர்சனம்

வலைதளத்தில் இப்படத்தை பற்றி பலபேர் விமர்சனங்கள் எழுதி ஆகிவிட்டது.... அதனால் நான் இங்கு அதிகமாக எழுதபோவதில்லை..

"
சாமி முன்னாடி மட்டும் தான் சந்தமா பேசுவேன்.. சாக்கட முன்னாடி இல்ல" போன்ற வசனங்கள் இருக்கும் போதே யோசித்து இருக்க வேண்டும்.. விதி யாரை விட்டது.. வெள்ளி கிழமை அன்று மதுரை தங்கரீகளில் இரவு காட்சி....முடியலேப்பா..
கதை அனைவருக்கும் தெரிந்ததே/அறிந்ததே....படிப்புக்கு மற்றும் வேலை தேடி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் கதாநாயகன், சென்னையில் உள்ள தாத்தாவிடம் மோதி அவனை வெற்றி கொள்ளும் ஆதிகாலத்து கதை...

நடுவில் ரசிகர்களை குஷி படுத்த முதிர் கன்னி ஆனா அனுஷ்கா என்ற நாயகி வேறு... நாயகனுக்கும் நாயகிக்கும் ஜோடி பொருத்தமே இல்லை..வடிவேலு அல்லது விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களையாவது போட்டு இருந்தால் எதோ படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வரும்... விஜய் என்ற நகைச்சுவை நடிகர் இருக்கும் போது வேறு நடிகர் எதற்கு என்று விட்டு விட்டனர் என்று நினைக்கின்றேன்... விஜய்க்கு இப்படமும் போனி ஆகவில்லை என்பது தான் நிஜம்.

"இப்படம் மிகப்பெரிய வெற்றி... குருவி, வில்லு படத்தில் விட்ட இடத்தை விஜய் இப்படத்தில் பிடித்து விட்டார்"... என்று விஜய் ரசிகர்கள் கூறிக் கொள்கின்றனர்.. ஆனால் உண்மை நிலை என்ன? (நன்றி தட்ஸ்தமிழ்)
=====================================
இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள்.

முதல் மூன்று தினங்கள் படத்துக்கு ஓப்பனிங் சிறப்பாக வந்திருந்தாலும், திங்கள்கிழமையே டிராப் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட் ஆசிரியரும், பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை சேகரித்து வருபவருமான ராமானுஜம்.

அவர் கூறுகையில், 'இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லி தவறான ட்ரெண்டுக்கு வழிகாட்டவும் கூடாது. விஜய் நடித்த வேட்டைக்காரன் வெற்றி என்றால், ஒரிஜினல் வெற்றிப் படங்களை என்னவென்று சொல்வது...

மதுரை, சேலம் பகுதிகளில் 50 சதவீத்துக்கு மேல் 'அடி' விழுந்திருக்கிறது இந்தப் படத்துக்கு. திருச்சி, திருநெல்வேலியில் மட்டும் தப்பித்திருக்கிறது' என்றார்.

சென்னையைப் பொறுத்த வரை, விஜய் தன் வெற்றியின் அளவுகோலாகக் கருதும் கமலா தியேட்டரிலும் கூட 30 சதவீதத்துக்கும் மேல் ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யம் போன்ற திரையரங்குகளில் இப்போது கெளன்டரிலேயே டிக்கெட்டுகள் கிடைப்பதாக சத்யம் இணையத் தளம் தெரிவிக்கிறது.

வேட்டைக்காரனின் ஒரு நகர வினியோக உரிமையை ரூ 3.5 கோடி கொடுத்துப் பெற்றுள்ள பிரபல வினியோகஸ்தருக்கு மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பொங்கல் சீஸனில் இந்தப் படம் தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் என்பதால், இந்தத் தொகையை அவரால் மீண்டும் பெற முடியாத நிலை.

மதுரையில் 50 சதவீதத்துக்கும் அடி என்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், நஷ்டத்தை கூட இவர்களால் வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை. மறைமுகமாக அல்லது தெரிந்த நபர்களிடம் சொல்லி தங்கள் குமுறலைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

"
விஜய்க்கு இந்தப் படம் தோல்வியாக அமைய வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. நிச்சயம் அவரைப் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது. காரணம் ரஜினிக்கு அடுத்து அல்லது இணையான மாஸ் ஹீரோ விஜய்தான்.

ஆனால் இன்று உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழும் விஜய், தனது சராசரிக்கும் குறைவான ஒரு படத்தை, வெற்றிப் படம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களைச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத, வேட்டைக்காரன் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் ஒருவர்.

இனிமேல் கதை அம்சம் இல்லாவிட்டால் யாருடைய படமாக இருந்தாலும் தப்பாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்கிறார் அவர்.


பின்குறிப்பு: இப்படத்தை வெற்றி என்றும் சொல்லும் போது கூட என்னால் தாங்கி கொள்ள முடிகிறது... ஆனால் அவதார் (ஆங்கிலம்) படத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது தான் என்னால் தாங்க முடியவில்லை...ஒப்பிட்டு பார்ப்பவர்களுக்கு மனசாட்சி இல்லை என்பது தான் நிதர்சன உண்மை...

1 comment:

BadhriNath said...

uppittavargalai ada cha
oppitavargalai ullalavum ninai :)