அமெரிக்காவில் இருக்கும் பல இயக்குனர்கள் அதி புத்திசாலிகள். நான் இன்னும் Inception, Matrix, Shutter Island போன்ற படங்களை வியந்து கொண்டு இருக்கின்றேன். படம் பார்க்கும் போது ஒரு மனிதனின் மூளை சலவை செய்ய முடியும் என்பதை நீருபித்த படங்கள் இவை. சலவை செய்யவில்லை என்றால், படம் பார்த்தும் பயன் இல்லை. அந்த விதத்தில் மீண்டும் ஒரு கதை. கண்டிப்பாக யோசிக்காமல் இந்த கதையை புரிந்து கொள்ள முடியாது.
கதைக்கு வருவோம்: "கால்டர் ஸ்டீவென்ஸ் அமெரிக்கா இராணுவத்தில் பணிபுரியும் நபர். ஆனால் தீடிர் என்று சிகாகோவில் பயணித்து கொண்டு இருக்கும் உள்ளூர் பயண இரயில் தூக்கத்தில் இருந்து விளிக்கின்றார். சிறிது நேரத்தில், அவர் அடுத்த நபரின் மனித உடலில் இருப்பத்தை கண்டுபிடித்து பிடித்து கொள்கிறார். எட்டு நிமிடத்திற்கு பிறகு அந்த இரயில் வெடித்து விட, ஒரு இருண்ட அறையில் விழித்துக் கொள்கிறார். அங்கு ஒரு குட்வின் என்ற பெண்ணிடம் பேச, அவள் மீண்டும் அவனை அதே இரயிலுக்கு அனுப்பி, வெடிகுண்டு வைத்து, இரயிலை தகர்த்திய ஆளை கண்டுபிடிக்க சொல்கிறாள். இப்படியே இவனை பலமுறை அதே நிகழ்வுக்கு அனுப்பி, வெடிகுண்டு வைத்தவனை கண்டுபிடிக்க அனுப்ப, அவனால் முடியாமல் திரும்ப அதே இருண்ட அறைக்கு வருகிறான். இப்போது ஸ்டீவென், நான் எங்கு இருக்கிறேன் என்று குட்வின் மற்றும் ரூட்லேது (ஆய்வாளர்) இடம் கேட்க, அவர்கள் இவனிடம் "ஒரு ஆய்வில் நீயும் ஒரு நபர் என்றும், இறந்து போன ஒரு மனிதனின் கடைசி எட்டு நிமிடத்தில், அவனுக்கு பதில் உன்னை அனுப்பி இருப்பதாகவும் கூறி, வெடிகுண்டை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்". மீண்டும் மீண்டும் ஸ்டீவென் கண்டு பிடிக்காமல் வர, அதே நேரத்தில் தான் எங்கு இருக்கின்றேன் மற்றும் எப்படி இங்கு வந்தேன் என்று அந்த எட்டு நிமிடத்தில் கண்ட பிடிக்க முயல, அப்போது ஸ்டீவென் கூட இறந்து போன நபர் என்று அறிய வர" இப்படி பல குழப்பங்கள்.
முழு படத்தையும் இங்கு நான் சொல்லவில்லை. காரணம் கதையை பார்த்து மட்டுமே வியக்கக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. அதை நீங்கள் பார்த்தல் மட்டுமே நன்றாக இருக்கும். படத்தில் பல முக்கிய அம்சங்கள் உண்டு. இக்கதை கொடுத்த விதம் கடந்த காலத்திற்கு சென்று ஒரு நிகழ்ச்சியை ஆராய்ந்து அதை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக கொடுத்து இருப்பார். ஒளிபதிவு செய்யப்பட்ட விதம் சிகாகோவின் அழகை நம் மனதில் கொள்ளை போகும் அளவிற்கு கொண்டு சென்று, நம்மை கட்டிபோட்டது.
முடிவு: கடந்த காலத்திற்கு சென்று, நடந்து முடிந்த நிகழ்வை, நடக்காமல் தடுத்து, இன்றைய காலத்தில் அதனுடைய தாக்கம் இல்லாமல் கொண்டு வர முடியும். அது தான் Source Code. கண்டிப்பாக காண வேண்டிய படங்களில் ஒன்று.
No comments:
Post a Comment