Thursday, April 14, 2011

கலவைகள்


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
*************************************************

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய அரசு கண்டிப்பாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. தென் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக கருதுவது விலைவாசி ஏற்றம் மற்றும் மின்வெட்டு. அதை தவிர மக்கள் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. 2G, இலங்கை தமிழர் பிரச்சனை, மற்றும் ஊழல் என்று எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை. மே 13ம் தேதி தமிழ் மக்களின் தலை எழுத்து தெரிந்து விடும்.
*************************************************
இந்த வருடத்தையும் சேர்த்து ஐந்தாவது வருடமாக, சித்திரை திருவிழாவை காண முடியவில்லை. விழா ஆரம்பம் ஆகி ஆறு நாட்கள் முடிந்து விட்டது. மதுரையை விட்டு வெளியே வேலை செய்யும் மக்கள் அனைவருக்கும் இருக்கின்ற, ஒரே எண்ணம் தான் தற்போது இதுதான். சொர்கத்துக்கும் ஈடாகத மதுரை முழுவதும், மக்கள் வெள்ளம். புதூரில் அல்லது அண்ணாநகரிலோ அழகரை பார்த்து திரும்பும் போது கிடைக்கும் நிம்மதி, எங்கு போனாலும் கிடைக்காது என்பது நிஜம். அழகரை காண கீழே உள்ள பாடலை பாருங்கள். இசை அமைப்பாளர் தேவா அவர்கள் செய்த நல்ல காரியங்களில் மிக முக்கியமாக நான் கருதுவது, இந்த பாட்டிற்கு இசை அமைத்தது தான்.



**************************************************************************
சமீபகாலமாக என் மீது எனக்கு படுபயங்கர கோபம். எனது சொந்த வேலைகளுக்குகாக செலவிடும் நேரத்தில் புத்தகம் படிப்பதை மறந்தேன், ருசியான சமையல் செய்வதை மறந்தேன், படம் பார்ப்பதும் குறைந்து போனது, சீக்கிரம் தூங்கும் நேரத்தை மறந்தேன். இத்தனைக்கும் காரணம் facebook தளம். பல விஷயங்கள் அறிந்து கொண்டாலும், நேரத்தை கொள்கிறது என்பதே நிதர்சனம். அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் முழுவதும் பார்க்காமல், அடுத்த நாளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறேன். முடியலே

**************************************************************************
கீழே உள்ள படத்தை பாருங்கள். இது என் வீட்டிற்கு அருகில் இருக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை. இந்த சாலைகளுக்கும் இடையில் குறைந்தது ஆறு லாரிகள் நிறுத்தலாம். சென்ற சனிக்கிழமை, ஒரு புறத்தில் இரண்டு கார்கள் சென்று கொண்டு இருந்தன. முதல் காரில் ஒரு வயதான அமெரிக்கா வெள்ளை நபர். இரண்டாவது காரில் ஒரு அமெரிக்கா வெள்ளை பெண்மணி.  முதல் கார் செய்த தவறால், இரண்டாவது கார் முதல் காரில் பின்னால் இடிக்க, முதல் கார் நிலை இழந்து,  ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலை சென்று அங்கு வந்துக் கொண்டு இருந்த ஒரு காரை இடித்தது. எந்த வித தவறும் செய்யாமல் மூன்றவதாக விபத்தில் சிக்கிய காரில் இருந்த நபர், அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். முதல் மற்றும் இரண்டாம் காரில் உள்ள நபர்கள் பிழைத்துக் கொண்டார்கள். இதில் கொடுமையான விஷயம், மூன்றாவது காரில் உயிர் இழந்த நபர் ஒரு இந்தியன். அதுவும் 26 வயது ஒரு வாலிபன். என் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாரம். இப்போது தான் அடுத்த வேலை கிடைத்து, அந்த ஊருக்கு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தாரம்என் அலுவலகத்தில் முழுநேர தொழிலாளியாக பணிபுரிந்தால் எதோ ஒரு சில சலுகைகள் கிடைக்கும். அந்த நபரோ H1-B consultant. மற்ற வேலைகள் இப்போது எப்படி என்று என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு என்னுடைய அனுதாபங்கள்.



No comments: