Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts

Thursday, January 14, 2010

சென்னை புத்தக கண்காட்சி - 2010

இந்த கண்காட்சி 33வது இருந்தாலும், நான் சென்னை அடைந்து தவறாமல் ஒவ்வொரு வருடமும் பதிவு தரும் படி பார்த்தால் இது 5 வது வருடம்...எந்த ஒரு ஆண்டும் இல்லாமல் இந்த வருடம் எதிர் பார்த்ததை விட அதிக கடைகள் மற்றும் அதிக புத்தகங்கள்....ஒரு நிமிடம் பிரம்மித்து போனது உண்மை...புத்தக புழுக்களுக்கு இந்த வருடம் திருவிழா தான். மொத்தம் எழு பகுதிக்கு மேல். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கூட நிமிர்ந்து பார்த்தல், கடந்தது மூன்று பகுதிகள் தான்... அதுவும் முடியும் தருவாயில் சென்றதால், மக்கள் கூட்டம் மிக மிக அதிகம்.. ஒரு விற்பனை நிலையத்திற்கு சென்று மெதுவாக பார்க்க முடியவில்லை...எதோ வலைபதிவாளர்கள் பரிந்துரை படி சில புத்தகங்கள் வாங்கினேன்...
 
  • சிவகாமியின் சபதம்
  • ராஜீவ் கொலை
  • இந்தியா வரலாறு (காந்திக்கு பிறகு)
  • 2 ஸ்டேட்ஸ்
  • அடேங்கப்பா அமெரிக்கா
  • வித்தியாசமான உலகம்

 
நான் கண்காட்சி காண சென்ற நேரத்தில் தான் வலைபதிவாளர்கள் சந்திப்பு கிழக்கு பதிப்பகம் அருகில் நடைப்பெற்று கொண்டு இருந்ததாம். எனக்கு விஷயம் தெரியாமல் போனதால், அங்கு இருந்தும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.