எனது பொறியியல் கல்லூரி நண்பர் அய்யப்பதாஸ் அவர்களின் திருமணம் இன்று பரிபல்லியில்(கேரளா) நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த வரை, கேரளாவில் நண்பர் வீட்டிற்கு சென்றேன் என்றால் அது இவரின் வீடு தான். திருவனந்தபுறத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் வீடு வந்துவிடும். கேரளா மாநிலத்திற்கு உரித்தான அழகு, அந்த வீட்டில் காண முடிந்தது என்றால் ஆச்சிரிய படுவதற்கு ஒன்றும் இல்லை. சாலையில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால், எங்கு பார்த்தாலும் மரம். காடு போன்ற உணர்வு தான். இந்த காட்டிற்கு நடுவில் ஒரு பங்களா உள்ள அவரின் வீடு. முதல் முதலில் அவரின் பெற்றோர் மற்றும் சொந்தங்கள் என்னுடன் அவர்கள் மொழியில் பேச, நான் திரு திருவென முழிக்க, நல்ல அனுபவம் தான்.
No comments:
Post a Comment