2010ம் ஆண்டில் இருந்தே இந்தியாவிற்கு கேட்ட நேரம் போலும் (முக்கியமாக நமக்கும் தான்). வெளி நாட்டில் இருக்கும் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று விட்டு, தன் சொந்த நாட்டில் பல கோடி மக்களை கொல்ல முடியாமல், ஏழை மக்களை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து, நடுத்தர மக்களாக இருக்கும் அனைவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் அளவிற்கு கொண்டு சென்ற, காங்கிரஸ் ஆட்சியாளருக்கு முதலில் ஒரு கண்ணீர் வாழ்த்துக்கள். அது போக தமிழக அரசும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழக மக்களை எவ்வாறு கொல்கிறனர் என்பதன் சுருக்கம்.
- பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவை, பெட்ரோல் நிறுவனத்துக்கே கொடுத்து, அனைத்து பொருட்களின் விலையை மறைமுகமாக கூட்டி அனைத்து ஏழை மக்களையும் மேலும் ஏழை ஆக்கியது தான் காங்கிரஸ் அரசின் முதல் வெற்றி.
- பண புழக்கத்தை கட்டு படுத்துவதாக கூறிக் கொண்டு RBI , 8 முறைக்கு மேல் வட்டி விகிதத்தை மாற்றியது. வீட்டு கடன் கொண்டு வாழும் ஒரு தனி நபரின் வருமானத்தில் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வரை அடி வாங்க வைத்தது.
- சென்ற தமிழக அரசு செய்த நன்மையின் பலனாக, தமிழகத்தில் எந்த ஒரு ஊரிலும் நிலம் வாங்க முடியாத சூழ்நிலை. இதை தவிர தற்போதைய அரசு, நிலத்திர்க்கான மதிப்பை கூட்டி, மேலும் மக்களை வதக்கியது.
- பால் விலை ஏற்றம்
- பேருந்து கட்டண ஏற்றம்
- இரண்டு மற்றும் நான்கு வாகனத்தின் இன்சூரன்ஸ் 45% ஏற்றியது.
- மின் கட்டண ஏற்றம்
- சேவை வரி 2 % ஏற்றம்
- சுங்க வரி 2 % ஏற்றம்
- கலால் வரி 2 % ஏற்றம்
- சமையில் எரிபொருளின் மானிய தொகையை குறைத்தது
- பொறியியல் படிப்பு ஏழை மாணவனுக்கு சொந்தம் இல்லை என்பதை காட்டும் விதமாக, அனைத்து கட்டணத்தையும் ஒரே விதமாக மாற்றியது.
- இந்திய ஏழை நாடு எல்லா என்பதை உலகிற்கு மறைக்கும் நோக்கத்தோடு தினமும் ரூ. 28 செலவு செய்தால், ஏழை என்ற வார்த்தை இல்லை என்ற அறிவு ஜீவிகளின் அறிக்கையை அப்படியே எடுத்து கொண்டது.
- அணு பாதிப்பில் தமிழ்நாடே பூண்டோடு அழிந்தாலும் பரவா இல்லை என்று, இரஷ்ய நாட்டிற்கு அடிமையாக இருக்க விரும்பும் இந்த மானங்கெட்ட மத்திய அரசை இன்னுமும் நம்புகின்றோம்.
- விலை உயர்வின் காரணமாக, சொல்லாமல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் தானாகவே பெரிய தொழில் நிறுவனத்தினர் ஏற்றி விட்டனர். இதில் விசேஷம் என்னவென்றால், பொருட்கள் வாங்கும் போது தான் அதனுடைய விலை ஏற்றத்தை அறிய முடிகிறது. மக்களுக்கும் மற்றும் அரசுக்கும் தெரியாமல் விலை ஏற்றி விடுவது தான் கொடுமை.
- தற்போதைய அரசு செய்து கொண்டு இருக்கும் மற்றொரு மோசமான காரியம், பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது. அதை விட கொடுமையான விஷயம், இந்தியாவின் இயற்கை வளங்களை (எண்ணை மற்றும் நிலக்கரி) தனியாருக்கு வாரி கொடுத்து, இந்திய மக்களுக்கு நாமத்தை போடுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் அறிவுஜீவிகள் இந்தியா முன்னேறுகிறது, ஏன் விலைவாசி ஏறுகின்ற மாதிரி தான் இந்திய மக்களின் சம்பளமும் ஏறுகிறது என்று விவாதத்தை முன் வைக்கின்றனர். இதற்கு முன் நானும் வெளிநாட்டில் (அமெரிக்கா) ஒன்றரை வருடங்கள் இருந்து, அங்கு உள்ள வாழ்வதற நிலையை அறிந்தவன் என்ற கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். இப்போது என்னால் இரண்டு நாடுகளின் வாழ்க்கை நிலை பற்றியும், இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையையும் என்னால் நன்கு வித்தியாசம் காண முடிகிறது. வெளிநாட்டிற்கு செல்லும் முன், இந்தியாவில் வாழ்வது நான் மிக சுலபம் என்று நினைப்பு, அமெரிக்காவில் சென்ற உடன், அங்கு வாழும் வாழ்க்கை முறைக்கு அங்கு கொடுக்க படும் சம்பளம் சரி தான் என்ற தெரிந்தது.ஆனால் மீண்டும் இந்திய வந்த பிறகு, இந்தியாவில் வாழ்வது தான் கஷ்டம் என்ற முடிவுக்கு என்னால் வர முடிந்தது. காரணம் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றங்கள் என்று கூற முடியும். மிக எளிய முறையில் புரியும்படி சொல்வது என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண தோசையின் விலை ரூ.13 . ஆனால் இப்போது அதே தோசையின் விலை ரூ. 30 . சதவீத கணக்கில் 231%. அதே போல் இந்தியாவின் மிக முக்கிய ஆபரணமாக இருக்கும் தங்கத்தின் விலை ஐந்து வருடங்களுக்கு முன் ரூ.842 ஒரு கிராம். ஆனால் இன்று ரூ. 2668. சதவீத அடிப்படையில் 317%.
Item | Initial Price | Current Price | Amount Difference | No of years in difference | Change in % level |
Dosai | 13 | 30 | 17 | 2 | 131% |
Gold Rate | 842 | 2668 | 1826 | 5 | 245% |
Coffee | 12 | 35 | 23 | 3 | 192% |
இதே போல் அனைத்து பொருட்களையும் வைத்து பார்த்தால், நமக்கு கிடைக்கும் சம்பள உயர்வு 8 முதல் 14% எவ்வாறு நமக்கு கட்டுபடி ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். அதே போல் இந்தியாவில் பாதிக்கு பாதி நடுத்தர மக்கள் உள்ள நாடு. ஏழை மக்கள் 30 %. ஒரே போது கூற்றை மக்கள் மத்தியில் வைக்கும் போது, அதை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும். அமெரிக்காவில் இருந்து கொண்டு, இந்திய முன்னேறுகிறது என்பதை எதோ ஒரு ஆங்கில பத்திரிகை படுத்து விட்டு பேச கூடாது. இந்தியாவில் இப்போது அடிப்படை வாழ்க்கை கூட வாழ முடிய சூழ்நிலை என்பதை அறிய இந்தியாவில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.