Friday, January 18, 2013

திருமண வாழ்த்துக்கள் - சிவா பிரகாஷ்

பத்தாம் வகுப்பு படிக்கும் வரை, நட்பு என்பது அனுபவரீதியாக நான் அறிந்து கொண்டதில்லை. முதல் முதலில் தொழில் நூட்ப கல்லூரி சேர்க்கை காரணமாக நேர்முக தேர்வுக்கு சென்னைக்கு பயணம் ஆனேன். என் அறிவுக்கு எட்டிய வரையில் அது தான் நான் மேற்கொண்ட முதல் பயணம் அதுவும் வைகையை கடந்து. அங்கு தான் இந்த நண்பர் அறிமுக ஆனார். அதன் பின், கல்லூரி ஆரம்பம் ஆன  முதல் அன்று பேருந்தில் இணைந்து பயணம் ஆனோம். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது, நான் கீழே விழுந்து அடிபட்டு இருக்கும் நேரத்தில், அவரின் நட்பு பற்றி அறிய முடிந்தது. நண்பனுக்கு ஒன்று என்றால் எதையும் தங்கும் நபர். கல்லூரியில் மூன்று ஆண்டு, கல்லூரி முடித்து பனிரெண்டு வருடங்கள் இருந்தாலும், இன்னும் நட்பு தொடரும் நண்பனுக்கு இன்று மதுரையில் திருமணம். என் நண்பர் சிவா பிரகாஷ் அவர்களின் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 


No comments: