என்னுடைய முன்னால் அலுவக நண்பர் திரு பார்த்தசாரதியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts
Monday, November 19, 2012
திருமண வாழ்த்துக்கள் - பார்த்தசாரதி
என்னுடைய முன்னால் அலுவக நண்பர் திரு பார்த்தசாரதியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Labels:
2012,
சென்னை,
திருமணம்,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Wednesday, May 02, 2012
Amazon.com: USA 2 India: Is it worth?
இந்தியா என்பது ஒரு வியாபார தளம். எல்லாவிதமான பொருட்களையும் இங்கு விற்க முடியும். எவ்வளவு விலை கூட்டி விற்றாலும், இங்கு கேட்ட ஆட்கள்/சட்டங்கள் கிடையாது. சட்டங்கள் இருந்தாலும், அதை செயல் படுத்தும் அதிகாரிகள் தான் அரசு. அதிகாரிகளுக்கு கேட்டதை கொடுப்பதன் மூலம், நிறுவனங்கள் என்ன என்ன தில்லு முள்ளு செய்ய முடியுமோ அதை செய்து அவர்களுடைய பொருட்களை விற்கின்றனர். காரணம் லஞ்சம் மற்றும் ஊழல். அதனால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் கூட இந்தியாவை குறி வைத்து தான் பொருட்களை விற்க ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற ஊர்களை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும், சென்னை படு மோசம் தான். எல்லாவற்றுக்கும் மக்கள் தொகை தான் காரணமாக வந்து நிற்கிறது. சென்னையில் எந்த பொருளையும் விற்கலாம். விற்பனை செய்பவர் வைத்தது தான் சட்டம். அவர் சொல்லும் விலை, அப்பொருளின் விலை. பாரிஸ் முதல் தாம்பரம், ஆவடி முதல் எழும்பூர் வரை, விற்பனை செய்பவர் வைத்தது தான் சட்டம் போல் இருக்கிறது. விலையை குறைத்து கேட்டால், தர முடியாது என்று நேரடியாக கூறுகின்றனர். ஏனென்றால், அதே பொருளை, நமக்கு பின்னல் நிற்கும் நபர் அதை விட அதிக விலைக்கே வாங்கி செல்வார். இது தான் தற்போதைய சென்னையின் நிலை. தக்காளி முதல் பெரிய மின்னணு சாதனங்கள் வரை ஒரே சூழ்நிலை தான் நிலவுகிறது. யார் தான் கேள்வி கேட்க முடியும். இந்த சூழ்நிலையில் தான் இணையதள வர்த்தகம் கண்கள் முன்னால் வந்து நிற்கிறது. இணையத்தில் விற்பதால் சில வலை தளத்தில் வரி இல்லை. அதுவும் கணினி, சகலவசதியுடன் கூடிய கைதொலைபேசி என்ற போன்ற வளர்ச்சியின் காரணமாக, இணையதள வர்த்தகம் முதல் இடத்தில் வந்து விடுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், இணையத்தில் பொருட்களை வாங்குவது என்பது சாதாரணம். அதே போல் இப்போது இந்தியாவில் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக போன்ற இணைய தளங்கள்.
flipkart.com
homeshop18.com
ebay.in
junglee.com
indiatimes.com
rediff.com
futurebazzar.com
indiaplaza.com
fashionandyou.com
tradus.in
மின்னணு பொருட்களை பொறுத்த வரையில், அமெரிக்காவை அடித்துக் கொள்ள முடியாது. அனைத்து பொருட்களும் பாதிக்கு மேல் விலை குறைவு. ஏன் என்று காரணம் சரியாக தெரியவில்லை. மக்கள் தொகை இந்தியாவில் அதிகம் என்றாலும், விற்க கூடிய பொருட்கள் இந்தியாவில் அதிகம் என்றாலும், விலை இந்தியாவில் தான் விற்கும் விலை அதிகம். இதற்கு வரிகள் தான் காரணமா?
இது ஒரு புறம் இருக்க, இணையத்தில் வியாபார ராஜாவாக இருக்கும் amazon.com சென்ற வருடம் உலகில் பலராலும் எதிர் பார்க்கப்பட்ட ஒரு புதிய வழிமுறையை கொண்டுவந்தது. அது உலகில் உள்ள குறிப்பிட்ட நாடுகள் அமெரிக்காவில் கிடைக்கும் பொருட்களை amazon.com ல் வாங்க முடியும். அப்பொருளை amazon.com அந்த நபருக்கு/அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கும். இவ்விஷயம் உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது நிதர்சனம்.
மற்ற நாடுகள் பற்றி தெரியவில்லை என்றாலும், இந்தியாவை பொறுத்த வரை, பார்சல்கள் என்பது மிக சாதாரண விஷயம். பார்சல்களை கையாளும் விதம் மிக மிக மோசமாக தான் இருக்கும். பன்னாட்டு நிறுவனமான amazon.com வருவதால் இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். பொருட்களை கையாளும் விதம், வடிவமைப்பு, கட்டமைப்பு என்று சகலமும் மாறும் என்பதை ஒத்து கொள்ள வேண்டும். உலக அளவில் பொருட்களை அனுப்பும் போது பல வித சிக்கல்கள் இருக்க செய்யும். அதை amazon.com சிறப்பாக கையாண்டு வருவதே அதன் ஓராண்டு வெற்றி என்று கூறலாம். சில முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
பொருட்கள் அனுப்பப்படும் இடங்கள்: ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள், ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் மற்றும் கரிப்பியன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, இஸ்ரேல, ஜப்பான், தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்.
பொருளின் விலையை தவிர இரண்டு விதமான கட்டணம் வசூலிக்க படுகிறது.
முதலாவது கட்டணம் பொருளை பத்திரமாக வேறு நாட்டிற்கு அனுப்ப. ஒவ்வொரு நாட்டிற்கும் கட்டணம் மாறுபடும்.
இரண்டாவது கட்டணம் வரி கட்டணம். ஒரு பொருள் வெளிநாட்டில் இருந்து வருகிறது என்றால், அதற்க்காக ஒரு வரி தனியாக உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும், அவ்வரி மாறுபடும். இக்கட்டணம் சில நாடுகளில் இல்லாமலும் இருக்கும். ஆனாலும் முதலிலே amazon.com ஒரு கட்டணத்தை வசூலித்து விடுகிறது. இப்பொருள் அனுப்பிய நபருக்கு கிடைத்த உடன், வரி வசூல் கட்டணம், கூடுதலாக வசூலிக்க பட்டு இருந்தால், மீண்டும் மீதம் உள்ள தொகை திரும்ப தரபடுகிறது. இல்லை வரி வசூல் கட்டணம், வசூலித்ததை விட அதிகமாக கொடுக்க பட்டு இருந்தால், அப்பணம் நம்மிடம் இருந்து வசூலிக்க படுகிறது.
அமெரிக்காவில் உள்ளது போல் இங்கும் பொருட்கள் அனுப்பபட்ட உடன், பொருள் எங்கு உள்ளது என்பதை அறிய தொழில்நுட்பம். இந்தியாவில் எந்த நிறுவனத்தை அது தேர்ந்து எடுத்து உள்ளது என்பதை பொறுத்து நாம் பெற முடியும்.
இதை தெரிந்து கொள்ள நான் ஒரு மின்னணு 5.1 ஓலி கருவியை எடுத்து கொண்டேன். இதனுடைய விலை இந்தியாவில் ரூ.16000 முதல் 18000 வரை. ஆனால் இதே பொருளின் விலை அமெரிக்காவில் டாலர் 182.96 மட்டுமே (ஒரு டாலர் என்பது ரூ.50 கணக்கில்). அதாவது பாதிக்கு பாதி. இத்தனைக்கும் பெரும்பாலான பொருட்கள், சீனாவில் இருந்தே தயாரிக்க பட்டு, ஏற்றுமதி செய்யபடுகிறது. ஆனால் விலையின் வித்தியாசத்தை காணுங்கள் இப்போது இந்த ஒலி கருவியை, நான் amazon.com ல் உலக அளவில் ஏற்றுமதி ஆகும் வரைமுறை படி வாங்கினால், அதனுடைய விலை கீழ்கண்டவாறு மாறிவிடுகிறது.
பொருளின் விலை | $182.96 | ரூ 9,148.00 |
இப்பொருளை இந்தியாவிற்கு அனுப்ப | $63.79 | ரூ 3,189.50 |
சுங்க வரி | $64.62 | ரூ 3,231.00 |
மொத்தம் | ரூ 15,568.50 | |
அதாவது, கிட்டத்தட்ட இந்தியாவின் கிடைக்கும் பொருளின் விலைக்கு வந்துவிடுகிறது. இப்போது இரண்டு முக்கிய விஷயங்கள், கவனிக்க வேண்டும். முதலாவது விஷயம்: சுங்க வரி என்பது பொருளின் விலையை பொறுத்து மாறும். நாம் அதிகமாகவும் கொடுத்து இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் நேரத்தில், அதிகமாக எடுத்த பணம், நம்மிடம் திரும்ப கொடுக்க படுகிறது. அதே நேரத்தில், சுங்க வரி அதிகமாகும் போது, மீண்டும் பணம் நம்மிடம் இருந்து வசூலிக்கபடுகிறது. ஆக மொத்தித்தில், பொருளின் முடிவான விலை சில நாட்கள் கழித்தே நமக்கு தெரியும்.
இரண்டாவது விஷயம்: amazon.com ல் வாங்கிய பொருட்களுக்கு வாரண்டி என்ற விஷயம் என்பது வருமா என்பது கேள்வி. எனக்கு தெரிந்தவரை, உலக அளவில் வாரண்டி என்பது பல பொருட்களுக்கு கிடையாது. அதனால் வாங்கும் போது, உலக வாரண்டி உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
நானும் பல முறை யோசித்து, தளத்தில் வாங்குவது வீண் என்ற முடிவிற்கு வந்து விட்டேன். இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும், நான் கண்ட அனுபவம் என்ற முறையில் பதிவு செய்து விடுகிறேன்.
Thursday, March 29, 2012
கலவைகள் - மார்ச் 2012
கடந்த சில மாதங்களாகவே வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள் இல்லாமலும், எந்தவித உப்பு மற்றும் இனிப்பு செய்தி இல்லாமலும், எங்கும் செல்லாத காரணத்தாலும், பதிவு உலகில் வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நண்பர்களின் சுப காரியங்கள் கூட ஏதும் நடக்கவில்லை. இருந்தாலும், வாரத்தில் பத்து முதல் பதினைந்து பேர் வரை எந்தன் வலை தளத்தை பார்க்கிறர்கள் என்றால் என்னால் கூட நம்ம முடியவில்லை. வலை தளத்தை பார்த்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பதிவு போட கூடிய விஷயங்கள் சில நடக்க இருப்பதால் தான் இந்த முன்னுரை.
சென்னைக்கு வந்த பிறகு, நான் செல்ல நினைத்த இடங்களில் முதலில் இருந்தது அதிகாலையில் கடற்கரையில் நடப்பது. இரண்டு வாரத்திற்கு முன்பு தான் அந்த எண்ணம் அரைகுறையாக நிறைவேறியது. ஆம் நானும் நண்பர் ஒருவரும் அதிகாலை செல்ல திட்டமிட்ட இந்த நடை, அதிகாலை தூக்கத்தினால், ஒரு மணிநேரம் தடையானது. அதனால் இளம் வெயிலில் நடக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அதிகாலையில் கடற்கரையில் நடப்பது ஒரு சுகம் தான். அந்த சுகத்தை மீண்டும் ஒரு வாரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
இன்னொரு இடம் எக்ஸ்பிரஸ் அவன்யு. அங்கு சென்ற பிறகு தான் இனி மேல் அந்த இடத்திக்கு செல்ல கூடாது என்ற முடிவு எடுக்க முடிந்தது. ஆம் இரண்டு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரம் நிறுத்த ரூ. 20 கட்ட வேண்டி உள்ளது. ஒரு திரைப்படம் பார்க்க போனாலே, குறைந்தது ரூ. 60 கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். செலவு எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருக்கும் மக்கள் மட்டுமே, அங்கு செல்ல முடியும் என்பது என் எண்ணம் ஆகி விட்டது. அதே போல் தாம்பரத்தில் இருந்து அங்கு சென்று படம் பார்க்கும் நிலைமை இல்லை. அதனால் இனிமேல் எக்ஸ்பிரஸ் அவன்யுக்கு என் வாழ்வில் இடம் இல்லை.
சமீபத்தில் ரசித்தது/படித்தது
உன்னை யாரும் காதலிகவில்லை
என்று கவலைபடாதே அது
உன் வருங்கால மனைவியன்
வேண்டுதலாக கூட இருக்கலாம்.
என்று கவலைபடாதே அது
உன் வருங்கால மனைவியன்
வேண்டுதலாக கூட இருக்கலாம்.
மதுரையில் இருக்கும் மில்லேனியும் மால் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. மதுரையில் இருக்கும் வடபழனி ராகத் பிலாசா என்று கூறலாம். மதுரை மக்களுக்கு இந்த மால் நிச்சயமாக ஒரு புது அனுபவம் தான். நான் சென்று பார்க்கும் போது கூட, வடநாட்டில் இருந்து மதுரையில் இருக்கும் மக்கள் தான், பொருட்களை வாங்கி செல்கிறார்கள் என்ற நிலைமையை பார்க்க முடிந்தது. கண்டிப்பாக மதுரை மக்கள் அனைவரும் ஒரு முறை சென்று பார்க்க வேண்டிய விஷயம்.
சொல்லப்பட வேண்டிய முக்கிய விஷயம், iPhoneனை பற்றியது. நான் வைத்து இருக்கும் இந்த கை தொலைபேசி, அமெரிக்காவில் ஒரு ஒப்பந்தம் போட்டு வாங்கியது. அதனால் இந்தியாவில் பயன்படுத்த முடியாத சூழ்நிலை. நண்பர் ஒருவர் இந்த iPhone விஷயத்தில் புலி போல் இருந்தாலும், எனக்கு வந்த பிரச்சனையை அவரால் சரி செய்ய முடியவில்லை. அவரும் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்து பார்த்தார். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. சென்னையில் iPhone வைத்து இருக்கும் நண்பர் இடம் கேட்கும் போது அவரும் இதே போல, பிரச்சனைகளை சந்தித்ததாகவும், ஒரு கடைக்கு சென்ற போது அவர்கள் சரி செய்து விட்டதாகவும் கூற, நானும் அதே கடைக்கு சென்றேன். என் தொலைபேசியை பார்த்த பின்னர், ரூ. 500 செலவு ஆகும் என்றும் கூற, நான் சம்மதித்தேன். ஒரு மணி நேரத்தில் என்னுடைய கைதொலைபேசி சரி செய்து கொடுக்க பட்டது. ஆச்சிரியமான விஷயம் தான். இதே போல், வலை தளத்தில் பார்த்து எனக்கு உதவி செய்த நண்பருக்கும், இரண்டு வாரத்தில் அவருடைய தொலைபேசியில் பிரச்சனை ஏற்பட்டது. அவரும் நான் சென்ற கடைக்கே சென்று பிரச்சனையை கூறினார். அவருடையதும் 30 நிமிடத்தில் சரி செய்ய பட்டது. இந்த பிரச்சனையை பற்றி வலை தளத்தில் இரண்டு வாரங்களாக தேடியும் கிடைக்காத தீர்வு, சென்னையில் உள்ள ஒரு சாதாரண கடையில் கிடைக்கிறது. நண்பர் அந்த கடை நபரிடம் எங்கு இதை பற்றி பழகுகிர்கள் என்ற கேட்டதற்கு, இதற்காகவே தனியாக பயிற்சி அளிக்க படுகிறதாம். நான் iPhone வைத்து பார்த்த வரை, உலக அளவில் பல தீராத பிரச்சனைக்கு, எளிய முறையில் இங்கு தீர்வு கிடைக்கிறது. கடை விவரங்களை பற்றி அறிய என்னை தொடர்பு கொள்ளலாம்.
Thursday, December 15, 2011
மீண்டும்... மீண்டும்...V (NTSC/ PAL Signals)
இன்னொரு விஷயம் என்னவென்றால், DTH நிறுவனத்தினர் போடும் கேபிளின் அளவு 12மீ மட்டுமே. அதற்கு மேல் மீட்டருக்கு ரூ.ஆறு. எந்த வீட்டிற்கும் 12மீ கேபிள் பத்தவே பத்தாது. அதை தெரிந்து கொண்டு, அவர்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் இவ்வாறு கொள்ள அடிக்கின்றனர். கேட்டால் இது தான் அந்த நிறுவனத்தின் சட்டம் என்கிறார்கள். அதற்கு மேல், எல்லா நிறுவனங்களும் இதே சட்டத்தை தான் அமல் படுத்தி உள்ளனர் என்று கூறி பணத்தை பிடுங்கி கொள்கின்றனர். இதற்காகவே நான், கேபிளை தவிர, மற்ற விஷயங்களுக்காக (சுவற்றில் துளை இடாமல் எடுத்து செல்லவது) அனைத்து நிறுவனத்தையும் கேட்டேன் (சன், டிஷ், டாட்டா மற்றும் வீடியோகான்). அவர்கள் கூறிய பதில்கள் எல்லாம் கேட்டும் போது, அனைவரும் மக்களை திருட தான் செய்கிறார்கள் என்று புரிந்தது. இதுவெல்லாம் பொது பிரச்சனை.
இப்போது என் பிரச்சனைக்கு வரும் போது, AIRTEL DTH சுவற்றில் துளை இடமால், வேறு விதமாக உள்ளே எடுத்து கொண்டு போனேன். ஒரு வழியாக கேபிளை தொலைக்காட்சியுடன் கொடுக்கும் போது தான் NTSC /PAL விஷயம் வெளியே வருகிறது. ஆம் இந்தியாவில் வரும் சிக்னல் சிஸ்டம் PAL . தொலைகாட்சி 80 % மட்டுமே தெரிகிறது, அதுவும் புள்ளி புள்ளியாக. எந்த DTH போட்டாலும் கிடைக்கக் கூடிய சிக்னல் PAL தான் என்பது அப்போது தான் புரிந்தது. என்னடா போட்ட பணம் அவ்வளவு தான? என்ற கேள்வியுடன் பல வலைதளங்களில் தேடியும் எதுவும் புலப்படவில்லை. வேறு எந்த DTHல் தொலைகாட்சி தெரியும் என்று சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அலசி ஆராய்ந்து, பலன் இல்லாமல் போனது தான் மிச்சம். அனைத்து விஷயத்தையும் பார்க்கும் போது தான், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வித்தியாசங்கள் புரிந்து கொள்ள முடிகிறது. நான் யோசிக்காமல் போன விஷயம் (இன்னுமும் கூட), ஏற்கனவே வெளிநாட்டு நண்பர்கள் இந்தியாவிற்கு எடுத்து வந்த வெளிநாட்டு தொலைகாட்சிகள் எப்படி அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கேட்கவே இல்லை. அது கேட்டு இருந்தாலும் ஒரு அளவாவது விஷயம் தெரிந்து இருக்கும். AIRTEL DTH உடன் சண்டை போட்டு, பணத்தை மீண்டும் வாங்கி விட்டேன். இதுவே சன் DTH என்றால் வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சன் DTH மக்களை மதிக்கவே மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும். என் நண்பர்கள் கூட சொன்ன விஷயம் "AIRTEL DTH என்பதால் பணம் திரும்ப கிடைத்தது. சன் DTH என்பது கேடானது" .
ஏற்கனவே AIRTEL DTH எடுத்து செய்த தவறை மீண்டும் செய்யாமல், எந்த DTH எடுத்தால் என் தொலைகாட்சியில் உள்ளூர் சேனலை காணலாம் என்ற எண்ணம் ஓட தொடங்கியது. இப்படியே வலை தளங்களில் தேடிக் கொண்டே மற்றும் நண்பர்கள் உடன் தேடி கொண்டே சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்டது. தீடிர் என்று ஒரு யோசனை. நண்பர் ராஜேந்திரன் தன்னுடைய கணிப்பொறியில் தான் உள்ளூர் சேனலை பார்த்துக் கொண்டு இருந்தார். அது எவ்வாறு என்று கேட்டு கொண்டு, அதே போல் என் தொலைகாட்சியில் அந்த முறை பொருந்துமா என்று பலருடன் கேட்டு, கடைசியாக PAL சிக்னல் முறையில் இருந்து VGA முறைக்கு மற்றும் convertor யை வாங்கி, சோதனை செயலாம் என்று முடிவெடுத்து, அதை தேட தொடங்கினேன். இந்த convertor கூட எனது பிரச்சனையை முடிக்குமா என்று தெரியாது. நான் கேள்வி பட்ட வரை 99 % பிரச்சனை முடியலாம் என்ற காரணத்திற்காக மட்டுமே தேட தொடங்கினேன். ஆம் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அதை பொருத்தி பார்க்கும் போது, உள்ளூர் சேனல் எனது தொலைகாட்சியில் தெரிந்தது. அதன் விலை ரூ. 1400 . இதில் என்ன பிரச்சனை என்றால், இது உள்ளூர் கேபிளை எடுத்து கொடுத்து இருந்தேன். மாதத்திற்கு என்னவோ ரூ. 100 மட்டுமே.ஆனால் இந்த தொலைகாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு, இதுவே தேவலாம் என்ற நிலையில் இருந்தேன். இருந்தாலும் என்னுடைய தொலைகாட்சிக்கு இந்த முறை போதாது என்று, எனக்கு தெரியாமல் நான் NTSC /PAL பற்றி தேடி கொண்டு தான் இருந்தேன்.
VGA convertor பிரச்சனை என்னவென்றால், ஒலி தனியாகவும், ஒளி தனியாகவும் பிரித்து கொடுக்கும். அதனால் என்னவோ படம் ஒழுங்காக தெரிந்தாலும், சத்தம் கேட்கும் போது ஒரு வித இரைச்சல் இருந்து கொண்டே தான் இருந்தது. மேலும் ஒளியின் அளவு, சுமாராக தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் தான், உள்ளூர் கேபிளால் வரும் பிரச்சனை வந்தது. அனைத்து சேனல்களும் புள்ளி புள்ளியாக தெரிய, கேபிள் டிவி ஆப்பிரேட்டரை கொண்டு வந்து காட்ட, இந்த பெரிய தொலைகாட்சியில் இவ்வளவு தான் சேனல்கள் தெரியும். இது என் பிரச்சனை அல்ல. அதே கேபிளை அரசு தொலைகாட்சியில் கொடுத்தால், நன்றாக தெரியும் என்று கூறி, இந்த பிரச்சனை முடிவாக ஏன் சுமங்கலி setup பாக்ஸ் வாங்க கூடாது என்று கேட்டார். நான் AIRTEL DTH ல் நடந்த அனைத்து விஷயத்தையும் கூறி, நீங்கள் DEMO கொடுங்கள், நன்றாக DIGITAL முறையில் தெரிந்தால் நான் வாங்கி கொள்கின்றேன் என்று கூற, உள்ளூர் கேபிள் ஆள் ஒத்து கொண்டார். ஒரு வாரத்திற்கு பிறகு அவர் setup பாக்ஸ் கொண்டு வந்து உபயோகபடுத்தி பார்த்தார். முதலில் நான் AIRTEL DTH பார்த்த பிரச்சனை இங்கும் வந்தது. அனைத்து DTH சும், கை விட்ட நிலையில் சுமங்கலி setup என்ன உதவ போகிறதா என்ற நினைத்து இருந்த நிலையில், setup பாக்ஸ்ன் உள்ளே சென்று அதனுடைய configuration யை பார்க்கும் போது, வீடியோ செட்டிங் க்குள் NTSC / PAL முறை என்று இரண்டு இருந்தது. அதை பார்த்த உடன் என்னுள் ஒரு சிறு நம்பிக்கை. ஆம் அந்த configuration மாற்றி அமைத்த உடன் என் வெளிநாட்டில் வாங்கி வந்த தொலைகாட்சியில் DIGITAL முறையில் நம்மூர் சேனலை பார்க்க முடிந்தது. அதுவும் மிக துல்லியத்துடன். ஆனால் நான் வாங்கிய அந்த VGA convertor ? இப்போது தேவையில்லை. பணம் போனது தான் மிச்சம். இன்னொரு விஷயம், இந்த சுமங்கலி setup பாக்ஸ் சென்னையில் மட்டுமே கிடைக்கும். சென்னை தவிர மற்ற (தமிழ்நாடு) நகரங்களில் உபயோகபடுத்த முடியாது. அவர்கள் DEMO கொடுக்கும் போது எடுத்த வந்த setup பாக்ஸ் பழையது. சென்னையில் சுமங்கலியை நிலைநிறுத்தி கொள்ள சன் நிறுவனம் இப்போது இலவச setup பாக்ஸ்யை தருகிறது. ஆனால் இந்த setup பாக்ஸ்ல் NTSC / PAL என்ற இரண்டு முறை இல்லை. இந்திய தொலைகாட்சிக்கு மட்டும் ஒத்துழைக்கும் PAL என்ற முறை மட்டுமே உள்ளது. அதனால் தான் நான் வாங்கும் போது கூட, என் தொலைகாட்சிக்கு எதுவாக பழைய setup பாக்ஸ்யை வாங்கி கொண்டேன். சுமங்கலி என்பது சன் நிறுவனத்தின் ஒரு பகுதி. சுமங்கலி setup பாக்ஸ்ல் NTSC / PAL முறை இருக்கும் போது, என் நினைப்பு படி SUN DTH ல்லும் இந்த முறை இருந்தாக வேண்டும். நான் என் தொலைக்காட்சிக்கு ஆராயும் போது, SUN DTH புதிதாக ஒரு setup பாக்ஸ் கொடுத்து உள்ளதாகவும், அதை பற்றி ஆராய வேண்டும் என்று கேள்வி பட்டேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. சென்னையில் உள்ள மக்கள் சன் DTH வாங்கி கொண்டு ஏமாந்து போவதற்கு பதிலாக, சுமங்கலியை வாங்கி கொண்டு போகலாம்.
நான் எனது பிரச்சனையை தீர்க்க தேடும் போது, விளக்கமாக ஒரு வலை தளத்திலும், இணைய தளத்திலும் இல்லை. அதனால் தான் இங்கு என்னுடைய அனுபவத்தை கொடுத்து உள்ளேன். படிக்கும் நபர் எந்த NTSC / PAL தொடர்ப என்ன கேள்விகள் இருந்தாலும், எனக்கு தெரிய படுத்துங்கள். என்னால் முடிந்த வரை உதவி செய்ய முயலுகிறேன்
Labels:
அமெரிக்கா,
இந்தியா,
சென்னை,
தொலைகாட்சி,
மதுரை
Monday, December 12, 2011
மீண்டும்... மீண்டும்...IV
ஒரு வழியாக அமெரிக்காவில் வாங்கின தொலைக்காட்சி என் வீட்டில். இப்போது நாம் டெக்னிகலாய் சில விஷயங்களை பார்க்கலாம். அமெரிக்காவில் மின்சாதன பொருட்கள் 110V தான் வேலை செய்யும். ஆனால் இந்தியாவில் 220V . வீட்டிற்க்கு வந்த உடன், முதலிலேயே வாங்கி வைத்து இருந்த power convertor வைத்து தொலைகாட்சியை switch on செய்தேன். வெறும் ஒரு வெள்ளை நிறம் மட்டும் வந்து, மீண்டும் கருப்பு நிறம் வருகிறது. இந்த மாதிரியாக தொடரவே, நான் பயந்து தொலைகாட்சியை நிறுத்தி விட்டேன். ஏற்கனவே நண்பர்கள் பலரது பிரச்சனைகளை நான் அறிந்த காரணத்தால், என் தொலைக்காட்சியும், விமானத்தில் எடுத்து வந்த காரணத்தால் உள்ளே உடைந்து போய் விட்டது என்று நினைத்து நானும் உடைந்து போனேன்.
நண்பர் பாலாஜி, இதே போல் ஒரு தொலைக்காட்சியை எடுத்து வந்து போது, ஆட்டோவில் ஏற்றி வந்த காரணமாக தொலைகாட்சி உடைந்து போகவே 35K செலவு செய்து அதை சரி செய்தார். அவர் insurance வைத்து இருக்கவே, உடைந்து போன தொலைகாட்சியை சரி செய்தார். செலவு செய்த பணத்தை insurance நிறுவனமே கொடுத்து விட்டது. ஆனால் என் நிலையில் insurance எனது தொலைகாட்சிக்கு இல்லை. என் நிலைமை நினைத்து, அழுகை வந்து விடும் போல் எனக்கு ஆகி விட்டது. வெளிநாட்டில் இருந்து பல பொருட்களை கொண்டு வந்து இருந்தாலும், எதையுமே காணும் நிலையில் நான் இல்லை.
நண்பர் கிஷோரின் நண்பரை அழைத்து காட்டவே, இது basic power convertor என்று கூறி, நல்ல power convertor குடுத்து விட்டு சென்றார். அவர் தொலைக்காட்சியை switch on செய்து காட்டும் போது தான் என் உயிர் மீண்டும் எனக்கு கிடைத்தது. ஆக மொத்தத்தில் LED,3D,SMART TV என் வீட்டில்.
எத்தனை நாளைக்கு தான், திரைப்படம் மட்டுமே பார்த்து கொண்டு இருப்பது. நம்மூர் லோக்கல் சேனல்கள் எப்போதுதான் பார்ப்பது என்ற எண்ணம் வரவே, அதற்கான முயற்சி எடுத்தேன். எதற்கு அந்த முயற்சி? ஆம் வெளிநாடுகளில் வாங்கும் தொலைகாட்சிகள் இந்தியாவின் உள்ள சிக்னல் சிஸ்டத்தை சப்போர்ட் செய்வது இல்லை. வெளிநாடுகளில் உள்ள நிகழ்சிகள் NTSC என்ற முறையில் ஒளிபரப்ப படுகிறது. ஆனால் இந்தியாவில் PAL என்ற முறையில் ஒளிபரப்ப படுகிறது. இந்த இரண்டு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லோக்கல் கேபிள் முறை இந்த தொலைகாட்சிக்கு ஒத்துவராது என்பதால், நேரடி தொலை நிகழ்ச்சி (DTH) என்ற முறையில் செல்ல எண்ணினேன். சென்னையில் DTH முறையில் இருக்கும் அனைத்து விதமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விளக்கினேன். ஆனால் யாருக்கும் என் நிலைமை புரியாததால், நானே RISK எடுக்க முடிவெடுத்து Airtel DTHயை 2K கொடுத்து எடுத்து விட்டேன். இப்போது தான் அவர்கள் அனைத்து DTH நிறுவனங்களும் செய்யும் தில்லு முள்ளு எனக்கு தெரிந்தது.
வீடு கட்டும் போது கேபிள் எடுத்து செல்ல சுவற்றில் உள்ளேயே எதாவது ஒரு வழிமுறையை செய்து இருப்பார்கள். ஆனால் இந்த DTH நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அந்த வழிகளை உபயோகிக்காமல், அவர்கள் எந்த வழியாக சுலபமாக கேபிள் கொண்டு வர முடியுமோ (சுவற்றை துளைத்து அல்லது ஜன்னலை துளைத்து), கொண்டு வந்து அவர்கள் தன் வேலையை முடிப்பார்கள். இதில் பதிக்க படுவது நாம் தான். ஆம் தேவை இல்லாமல் சுவற்றில் துளை மற்றும் வெளியில் கேபிள்கள் எப்போதும் அசிங்கமாக தொங்கி கொண்டே இருக்கும்.
இன்னொரு விஷயம் என்னவென்றால்....
Labels:
அமெரிக்கா,
இந்தியா,
சென்னை,
தொலைகாட்சி
Subscribe to:
Posts (Atom)





