Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Friday, January 18, 2013

திருமண வாழ்த்துக்கள் - சிவா பிரகாஷ்

பத்தாம் வகுப்பு படிக்கும் வரை, நட்பு என்பது அனுபவரீதியாக நான் அறிந்து கொண்டதில்லை. முதல் முதலில் தொழில் நூட்ப கல்லூரி சேர்க்கை காரணமாக நேர்முக தேர்வுக்கு சென்னைக்கு பயணம் ஆனேன். என் அறிவுக்கு எட்டிய வரையில் அது தான் நான் மேற்கொண்ட முதல் பயணம் அதுவும் வைகையை கடந்து. அங்கு தான் இந்த நண்பர் அறிமுக ஆனார். அதன் பின், கல்லூரி ஆரம்பம் ஆன  முதல் அன்று பேருந்தில் இணைந்து பயணம் ஆனோம். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது, நான் கீழே விழுந்து அடிபட்டு இருக்கும் நேரத்தில், அவரின் நட்பு பற்றி அறிய முடிந்தது. நண்பனுக்கு ஒன்று என்றால் எதையும் தங்கும் நபர். கல்லூரியில் மூன்று ஆண்டு, கல்லூரி முடித்து பனிரெண்டு வருடங்கள் இருந்தாலும், இன்னும் நட்பு தொடரும் நண்பனுக்கு இன்று மதுரையில் திருமணம். என் நண்பர் சிவா பிரகாஷ் அவர்களின் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 


Tuesday, November 13, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2012



அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Happy Diwali 2012


தீபாவளி என்றாலே கோவில் நகரத்தில், கோவிலை சுற்றி தான். இரவு பதினோரு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை தொடர்ச்சியாக நகரத்தை வலம் வரும் இன்பமே தனி தான். அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு வெடி அணுகுண்டு வைத்து விட்டு தூக்கம் இருக்கே, பல லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் முதல் முறையாக நான் வைகையை நகரத்தில் இல்லாமல், அமெரிக்காவில் அதுவும் சாதாரண நாளாக. அதோடு இல்லாமல் எப்போதும் போல், அலுவகம் செல்ல வேண்டும்.  என்ன வாழ்க்கட...

Monday, November 12, 2012

உறவுகள் மதிக்கப்படுகின்றன



நம்முடைய தொழில், இன்பம், துன்பம், சொந்தம் மற்றும் நட்பு என்று அமைவது கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்முடன் இருக்கும் சொந்தங்கள் மற்றும் நட்புகள் மூலமாக தான் இருக்கும். தற்போது மனதில் இருக்கும் உறவுகள் மற்றும் பழக்கங்கள்  வைத்து எல்லாமே அமைகிறது. பதினோரு வருடங்களுக்கு முன்பு என்னுடன் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் படித்தாலும், தற்போது நட்புடன் பழக்கத்தில் இருப்பது சிலரே. இது தான் வாழ்க்கை. இருந்தாலும் சில சமயங்களில் பழைய உறவுகள் நினைவில் வைத்து மதிக்க படுகிறது. பனிரெண்டு வருடத்துக்கு முன்னால் நானும், நண்பர் நாவஷும் படித்த ஒரு கணிப்பொறி கற்று தரும் நிலையத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு அருகில் படித்தோம். எங்களுக்கு கற்று கொடுத்த ஒரு நபருடன் நல்ல பழக்கம். அங்கு படித்த பிறகு, மூன்று வருடங்களுக்கு மேல் அவருடன் பழக்கம் இல்லை. வேலை தேடும் நேரத்தில் ஒரே ஒரு முறை, மின் அஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு உதவி புரியுமாறு கேட்டு இருக்கிறேன். அதன் பின் எட்டு வருடங்கள் மேல் ஓடி விட்டது. எனக்கு உண்மையாக நினைவில் அவர் பற்றி நினைப்பே இல்லை.  ஆனால் எனது முதல் மின் அஞ்சலில், அவருடைய மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை சென்ற மாதம் வந்து இருந்தது. நான் இப்போது தான் அதை திறந்து பார்த்தேன். என்னை நினைவில் வைத்து, அழைப்பிதழை அனுப்பியதற்கு மிகவும் நன்றி. கடந்த கால உறவுகளை மற்றும் நினைவுகளை மதிக்கும் சில பேர் இன்னும் இருக்கின்றனர் என்னும் போது, அந்த உறவுகளை நான் மதிக்கிறேன்.

அவருடைய மகளுக்கு என்னுடைய திருமண நல்வாழ்த்துக்கள்

மதுரகார பயலுக, பழக்கத்துக்கு உசிரேயே கொடுப்கங்கே - மீண்டும் நிருப்பிக்கபடுகிறது