நம்முடைய தொழில், இன்பம், துன்பம், சொந்தம் மற்றும் நட்பு என்று அமைவது கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்முடன் இருக்கும் சொந்தங்கள் மற்றும் நட்புகள் மூலமாக தான் இருக்கும். தற்போது மனதில் இருக்கும் உறவுகள் மற்றும் பழக்கங்கள் வைத்து எல்லாமே அமைகிறது. பதினோரு வருடங்களுக்கு முன்பு என்னுடன் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் படித்தாலும், தற்போது நட்புடன் பழக்கத்தில் இருப்பது சிலரே. இது தான் வாழ்க்கை. இருந்தாலும் சில சமயங்களில் பழைய உறவுகள் நினைவில் வைத்து மதிக்க படுகிறது. பனிரெண்டு வருடத்துக்கு முன்னால் நானும், நண்பர் நாவஷும் படித்த ஒரு கணிப்பொறி கற்று தரும் நிலையத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு அருகில் படித்தோம். எங்களுக்கு கற்று கொடுத்த ஒரு நபருடன் நல்ல பழக்கம். அங்கு படித்த பிறகு, மூன்று வருடங்களுக்கு மேல் அவருடன் பழக்கம் இல்லை. வேலை தேடும் நேரத்தில் ஒரே ஒரு முறை, மின் அஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு உதவி புரியுமாறு கேட்டு இருக்கிறேன். அதன் பின் எட்டு வருடங்கள் மேல் ஓடி விட்டது. எனக்கு உண்மையாக நினைவில் அவர் பற்றி நினைப்பே இல்லை. ஆனால் எனது முதல் மின் அஞ்சலில், அவருடைய மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை சென்ற மாதம் வந்து இருந்தது. நான் இப்போது தான் அதை திறந்து பார்த்தேன். என்னை நினைவில் வைத்து, அழைப்பிதழை அனுப்பியதற்கு மிகவும் நன்றி. கடந்த கால உறவுகளை மற்றும் நினைவுகளை மதிக்கும் சில பேர் இன்னும் இருக்கின்றனர் என்னும் போது, அந்த உறவுகளை நான் மதிக்கிறேன்.
அவருடைய மகளுக்கு என்னுடைய திருமண நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment