என்னுடைய முன்னால் அர்கன்சாஸ் தோழர் அங்கூர் தேசாய் அவர்களின் திருமணம் இன்று அகமதாபாத், குஜராத்தில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பழகிய முதல் மேற்கு இந்தியா நபர். காரம் என்றாலே என்னவென்று தெரியாத நபர்/மக்கள். வடஇந்திய மக்களின் வாழ்க்கை முறையை கேள்வி தான் பட்டு இருக்கிறேன். ஆனால் கண் கூடாக பார்த்தது இவரை வைத்து தான். வித்தியாசமான பல எண்ணங்களை காண முடிந்தது. நான் ஒரு
இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதில் ஒரு மகிழ்ச்சி அவருக்கு.
தீடிர் என்று நான்கு அல்லது ஐந்து பேர் வருவார்கள். என்னை அறிமுக படுத்திய நிமிடத்தில் இருந்து, அனைவரும் என்னுடன் இருவது வருடம் பழகியது போல் பேச்சு. அதுவும் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல். இரவு மூன்று வரை ஆட்டம் மற்றும் விளையாட்டு. ஒரு முழுவருடம் நான் டெல்லியில் இருந்ததாக ஒரு நினைப்பு. என்னால் மறக்க முடியாத நண்பர்கள். நான் கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது முடியாவிட்டாலும், கண்டிப்பாக ஒரு நாள் மற்றொரு வடஇந்திய திருமணத்தை காண்பேன் என்பது உறுதி.
No comments:
Post a Comment