Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Sunday, March 04, 2012

அரவான் - திரைவிமர்சனம்


 நாவல்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வெளிநாடுகளில் மட்டுமே எடுக்க படும். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், நாவல்களில் உள்ள கதைக்கு உயிர் தரும் வேலையில் தமிழ் திரையுலகத்திற்கு உயிர் மூச்சான மசாலாவை எடுத்து கொண்டு வர இயலாது. அதே போல, திரைப்படத்தின் வேக தன்மை, தீடிர் திருப்பங்கள் என்பதையும் கொண்டு வர இயலாது. இதனால் தமிழ் நாட்டில் பல நாவல் ஆசிரியர்கள் இருந்தும், இன்னும் தமிழ் திரையுலகில் கதை தேடும் சூழ்நிலை உள்ளது. உதாரணமாக 1980ல் எடுத்த திரைப்படத்தை மீண்டும் இப்போது எடுக்கும் நிலையை சொல்லலாம். இந்த விதியை மாற்றி, நாவலை அடிப்படையாக கொண்ட கதை எடுத்த இயக்குனர் வசந்த பாலன் அவர்களுக்கு முதல் பூங்கொத்து.

அரவான்... படம் பார்த்து கொண்டு இருக்கும் போது, நண்பர் ஒருவர் அதற்க்கான பொருளை கேட்டார். எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்படத்திலேயே அதற்க்கான காரணம் சொல்லபட்டு இருந்தாலும், இப்படத்திக்கு முன்னால் நான் எங்கேயோ படித்த நியாபகம் என்று மட்டும் தெரிந்தது. கடைசியாக பார்க்கும் போது, என் வலை தளத்திலேயே 2009ம் ஆண்டு அரவானை பற்றி பதிவு செய்து உள்ளேன். இதோ அந்த பதிவு "அரவான் - மகாபாரதம்".


18ம் நூற்றாண்டில் திருட்டை தொழிலாக கொண்ட ஒரு ஊரில் வசிக்கும் நபர் பசுபதி மற்றும் உறவினர்கள். அவ்வூரின் பெயரை மட்டும் பயன்படுத்தி திருடும் அனாதையான ஆதி,ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகின்றனர். ஒரு சமயத்தில், பசுபதியின் உயிரை ஆதி காப்பாற்ற, மேலும் அவர்கள் நட்பு கூடுகிறது. ஊரின் மானபிரச்சனை உடன்,பசுபதி உயிருக்கு ஆபத்து வரும் போது, அனாதையான ஆதி தான் யார் என்பதை கூறுகிறார். இதனால் ஆதிக்கு மேலும் பிரச்சனை இறுகுகிறது. அப்பிரச்சனையில் இருந்து யார் தப்பித்தனர், முடிவு என்ன என்பதே கதை.


இங்கே கதாநாயகன் என்பதை விட, கதையின் நாயகனாக இருக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல நடிகரான பசுபதியை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. முதல் பாதி முழுவதும் பசுபதியின் ஆளுமை தான்.  இந்த இரண்டு பேருக்கும் போட்டி நடிகன் கரிகாலன். அருமையான நடிப்பு. கதாநாயகிகளாக தன்ஷிக மற்றும் அர்சன கவி. அவர்கள் தன் வேலையை சரியாக செய்து இருக்கின்றனர்.  வெயில் படத்தின் நன்றி கடனாக பரத்தும், அங்காடி தெரு நன்றி கடனாக அஞ்சலியும் இரண்டு காட்சிகள். அனைத்து கதாபத்திரங்களையும், மீறி இரண்டு பேர் தனியாக நிற்கின்றனர் என்றால் அது ஒளிபதிவாளர் சித்தார்த் மற்றும் ஆர்ட் இருக்குனர் விஜய். இப்படம் திருட்டு தொழிலை மையமாக கொண்டதால், பல இரவு காட்சிகள். இரவு என்பதை மறக்க வைத்து, நம்மை கதைக்குள்ளே அழைத்து சென்றது ஒளிபதிவளரின் வெற்றி எனலாம். அவருக்கு இரண்டு பூங்கொத்து. இதே போல் 18ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக எடுத்து, அக்காலத்தை நம் முன்னால் கொண்டு வந்ததற்கு ஆர்ட் இயக்குனருக்கு  மூன்றாவது பூங்கொத்து.  இத்திரைப்படத்தின் இன்னொரு முக்கிய நபர் கதை ஆசிரியர் மற்றும் வசன ஆசிரியர் வெங்கடேசன். மக்களின் வாழ்க்கை முறை திரையில் எவ்வளவு காட்டினாலும், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வார்த்தைகள் தான் மிக முக்கியம். வெங்கடேசன் தன் வார்த்தைகள் மூலம், அவர் 18ம் நூற்றாண்டை உணர வைத்து இருப்பார். இதற்காக அவருக்கு நான்காவது பூங்கொத்து.



இத்தனை பெரிய வெற்றி இருந்தும், முடிவில் ஒரு நெருடல். திரைப்படத்தின் முடிவில், "18ம் நூற்றாண்டிற்கு பிறகு பிரிட்ஷ் காலத்தில் மரண தண்டனை நிறுத்த பட்டது. இன்னும் உலகில் நாடுகள் மட்டுமே மரண தண்டனையை வைத்து உள்ளது. மரண தண்டனை ஒழிப்போம்". இப்படம் மரண தண்டனை பற்றி சொல்கிறது என்பதை, கடைசி வரை நம்மால் உணர முடிய வில்லை. கதை களத்தின் படி, பலி இடுவதற்கும் மரண தண்டனைக்கும் என்ன தொடர்பு என்பதை யோசிக்க வைக்கிறது. இந்த சின்ன விஷயத்தை ஒதுக்கி வைத்து பார்த்தால், வசந்த பாலன் மீண்டும் நீருபித்து இருக்கிறார் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.

Thursday, August 26, 2010

பெண்ணிடம் இரகசியம் - மகாபாரதம்

நம்ம தான் பொழுது போகலன்ன மகாபாரதம் பாக்குற ஆளாச்சே. இப்படிஅப்படின்னு ஒரு பகுதி பாத்துகிட்டு இருக்கும் போது ஒரு சின்ன வசனம் கேட்டப்ப சிரிப்பு வந்துருச்சு. ஆனா யோசிக்கவும் வச்சது அது உண்மையா அல்லது பொய்யா என்னு

அர்ஜுனன் கர்ணனை கொன்ற இரவு பொழுதில், குந்தி மாதா கர்ணனின் சடலத்தை தன் தொடையில் வைத்து அழுது கொண்டு இருப்பதை கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் தர்மராஜன் பார்க்க, இரண்டு பேர் ஆச்சிரியம் அடைகின்றனர். தர்மராஜன் தன் தாயிடம் ஏன் இவனுக்காக கண்ணீர் சிந்துகிறிர்கள் என்று காரணம் கேட்க, குந்தியும் அவர்களிடம் கர்ணன் தன் மகன் என்று கூறி விஷயத்தை விளக்குகிறாள். ஆனால் தர்மராஜன் இந்த விஷயத்தை ஏற்று கொள்ளவில்லை. எப்படி ஒரு தாய் தன் மக்களிடம் ஒரு விஷயத்தை மறைக்கலாம் என்று கோபப்பட்டு, ஒரு சாபத்தை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கிறார். அச்சாபம் என்னவென்றால் "இனிமேல் எப்பெண்களாலும் எந்த இரகசியத்தையும் அவர்கள் மனதில் வைத்து கொள்ள முடியாது"

மகாபாரத்தின் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இச்சாபம் உண்மையில் தர்மராஜன் கொடுத்தாரே இல்லையோ, இயக்குனரின் கற்பனை திறனை பாராட்டே ஆக வேண்டும். இக்காட்சியின் எப்படி ஒரு வசனத்தை வைக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் உலக உண்மைகளை (??) இதில் பொருந்தும் அளவுக்கு வைத்த அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Saturday, October 17, 2009

அரவான் - மகாபாரதம்

மகாபாரத்தில் பல கதாபாத்திரங்கள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன. அதில் முக்கிய கதாபாத்திரம் அரவான். அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்த போது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியை கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனால் பிறந்த மகனானதால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்த அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைங்கன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்று பேச்சு வந்த போது, "இதோ நான் இருக்கிறேன். என்னை களபலியாக கொடுங்கள்" என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாத படியால் தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று. இப்படிப் பட்ட மகாவீரனை நினைந்து பாண்டவர்கள் சொர்கத்தில் இடம் வாங்கி கொடுத்தனர்.

சோழ வாரிசுகள்

சேர, சோழ மற்றும்  பாண்டிய  மன்னர்கள் தான் தென்இந்திய நாட்டை ஆண்டார்கள். ஆனால் சேர மற்றும் பாண்டிய மன்னர்களை பார்க்கும் போது வளமுடன், அதிக படையுடன் செல்வ செழிப்பு மற்றும் அதிகாரத்துடன் இருந்தது சோழ மன்னர்கள் தான் என்று கல்கியின் பொன்னியின் செல்வன் கூறுகிறது. பரகேசரி விஐயாலயன் தான் முதல் மாமன்னர். அவருக்கு பிறகு ராஜகேசரி ஆதித்த சோழன். அதற்கு பின் பரகேசரி பராந்தகன் சக்கரவர்த்தி. இவருக்கு மூன்று புதல்வர்கள் (அவர்களின் புதல்வர்கள் அவர்களுக்கு கீழே).  ராஜகேசரி கண்டராதித்த தேவர் ஆட்சி செய்தாலும், ஆட்சியை நடத்துபவர் ராஜகேசரி அரிஞ்சயன்.  ராஜகேசரி கண்டராதித்த தேவர் இறை பக்தியால்
ராஜகேசரி அரிஞ்சயன் அரியணை ஏறுகிறார். அரியணை ஏறிய பின் ராஜகேசரி கண்டராதித்த தேவருக்கு மதுராந்தகன் பிறக்கிறான். ராஜகேசரி கண்டராதித்த தேவர் மதுராந்தகனையும் இறை பக்தியில் வழி நடத்துகிறார். ராஜகேசரி அரிஞ்சயன் பிறகு ஆட்சி அவருடைய மகன் ஆதித்த கரிகாலனுக்கு என்று அறிவிக்க படுகிறது. ஆனால் ராஜகேசரி கண்டராதித்த தேவர் அவர்களின் பாதுகாவலர்கள் மதுராந்தகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சதியில் ஈடுபடுகின்றார். 

1) இராஜாதித்யன்
2) ராஜகேசரி கண்டராதித்த தேவர்.
                    $) மதுராந்தகன்
3) ராஜகேசரி அரிஞ்சயன்
                    #) ஆதித்த கரிகாலன்
                    #) அருள்மொழிவர்
                    #) குடந்தை பிராட்டி

இப்படிப் பட்ட சோழ மன்னர்களின் வாரிசு பகைமைகளை பார்த்தல், மகாபாரத போர் தான் நினைவுக்கு வருகிறது. யாருக்கு வெற்றி என்று வரலாற்றை தான் பார்க்க வேண்டும். ஏன் என்று காரணம் அறிய மகாபாரதத்தை புரட்டுங்கள்...

Monday, October 05, 2009

அம்பை – பீஷ்மர் - மகாபாரதம்

மகாபாரதத்தில் அனைத்து கதாபத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். மிக சிறந்த அரசியல், சிக்கலான விஷயங்கள் என்று பல இருக்கும். அதே போல் அனைத்தும் ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக குருசேத்திரத்தில் தொடர்பு இருக்கும். சிக்கலான நிகழ்வுகளில் முக்கியமாக எனக்கு சமீபத்தில் பட்டது அம்பையின் குறிப்பு தான். மகாபாரதத்தில் இவளது பத்திரம் சிறிது எனறாலும் கனமானது என்று தான் கூற வேண்டும். தேவவிரதன் மற்றும் கங்கை மைத்தர் ஆன பீஷ்மரை குருசேத்திரத்தில் இருந்து அகற்ற காரணமாக இருக்கும் அம்பையை பற்றி நினைத்து பர்ர்த்த போது மனதில் சில கேள்விகள்... அதற்கு முன்னர் அம்பை யார்? அவளுக்கும் பீஷ்மருக்கும் என்ன தொடர்பு.

காசி நாட்டு இளவரசிகள் தான் அஷ்தினபுரத்து ராணிகளாக வருது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக காசி நாட்டு மன்னன், அப்போதைய மூன்று இளவரசிகளுக்கும் சுயம்வரம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அம்பை அம்மூன்று இளவரசிகள் ஒருத்தி. இதை அறிந்த பீஷ்மர் இளவரசிகளை அபகரித்து செல்ல அஷ்தினபுரத்து பிரதிநிதியாக வந்து சுயம்வரத்தில் இருக்கும் அனைத்து மன்னர்களையும் தோற்கடித்து மூவரையும் கூட்டி செல்கின்றார். சுயம்வரத்தில் கண்ட சால்வ அரசனை தனது மனதில் அம்பை வைத்து இருந்தால். கூட்டி செல்லும் வழியில் வரும் பீஷ்மருடன் போருக்கு வரும் சால்வ அரசனும் தோற்று போகிறான். இதனால் சால்வ அரசனுக்கு அவமானம் ஏற்படுகிறது. அஷ்தினபுரத்து அரண்மனையில் குந்தி மாதா மூவரையும் வாழ்த்தும் போது அம்பை தனது ஆசையை சொல்கிறாள். இதை அறிந்த பீஷ்மர் அம்பையை சால்வ அரசன் மாளிகைக்கு அனுப்பி வைக்கிறார். தனது அவமனத்து காரணமாக இருந்த பீஷ்மர் அனுப்பி வைத்த அம்பையை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் அம்பை காசி நாட்டுக்கும் செல்ல இயலாமல் அஷ்தினபுரத்துக்கும் செல்ல இயலாமல் அவமான படுகிறாள். இந்த அவமானத்துக்கு பீஷ்மர் தான் காரணம் என்று நினைத்து, அவமானத்தை போக்க பீஷ்மர் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று அஷ்தினபுரத்து அவையில் முறை இடுகிறாள். தனது பிரம்மசாரி சபதத்தை மேற்கொள் காட்டி அம்பையை மறுத்து விட, அம்பை பீஷ்மரின் மரணத்துக்கு கண்டிப்பாக காரணம் ஆவேன் என்று கூறி வெளியே செல்கிறாள். தனது அவமானத்துக்கு பதில் தேடி பீஷ்மரின் குருவான பரசுராமிடம் முறையிடுகிறாள். பரசுராமர் அம்பையை மணக்க சொல்லியும் பீஷ்மர் மறுத்து விட இருவரும் மோதிக் கொள்கின்றனர். அப்போட்டியில் பரசுராமர் தோற்று போகிறார். இதைப் பார்த்த அம்பை தவம் தான் சிறந்த வழி என்று நினைத்து பீஷ்மரை பலி வாங்க தவம் செய்து கடைசியில் அடுத்த ஜென்மத்தில் குருசேத்திர போரில் அர்ஜுனுடன் சிகண்டியாக சென்று பீஷ்மரை கொல்கிறாள்.

மேற்சொன்ன கதையின் படி பீஷ்மரின் தவறு என்ன? அதே போல் அம்பை செய்தது சரியா?

எனக்கு தெரிந்த வரை பீஷ்மர் செய்த ஒரே ஒரு தவறு,  அபகரித்து செல்லும் போது அம்பையிடம் மனதில் உள்ள ஆசையை கேட்காதது தான். ஆனால் அம்பை பீஷ்மரிடம் கூறி இருக்கலாம். இதனால் பீஷ்மர் எப்படி அம்பையின் அவமானத்திற்கு பொறுப்பு ஏற்க முடியம். கடைசியில் பீஷ்மரின் சாவுக்கு காணரமாக இருந்த அம்பை செய்து தான் தவறு என்பது என் வாதம்.

Sunday, October 04, 2009

இன்றைய சிந்தனை



சினம் கொண்ட சிங்கதுடனும், அவமானம் பட்ட பெண்ணுடனும் மோத கூடாது.
                                 - அம்பை (மகாபாரதம்)



Monday, September 21, 2009

உ. த. மா?

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு 1995ல் தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார்


ஹிட்லரை செய்த படுகொலைகளை விட ஈழ தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு செய்த, செய்துக் கொண்டு இருக்கின்ற வன்முறைகள், படுகொலைகள், மற்றும் பறிக்க படுகின்ற குறைந்த பட்ச மனித உரிமைகள் என்று இருக்கும் வேளையில், தமிழ் நாட்டில் தூக்கத்தை கடைபிடிக்க வேண்டிய வேளையில்.. பதவிக்காக, குடும்பத்துக்காக மட்டும் உழைக்கும் இன்றைய ... , ஈழ தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் இன்றைய ... என்னவென்று சொல்ல.

இன்றைய ... நினைத்து இருந்தால் கண்டிப்பாக ஈழ போரை நிறைவுக்கு கொண்டு வந்து இருக்கும். ஆனால் பதவி மோகம் பிடித்து அலையும் இந்த ...கண்டிப்பாக பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஈழ மக்களின் பிணங்கள் எரிந்து முடியாமல் இருக்கும் தருவாயில் தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை.

கண்ணீருடன் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்வி: ஈழத்தில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள், தமிழ் மொழியை பேசுவதை தவிர என்ன பாவம் செய்தார்கள்?

தவறாக ஏதாவது இந்த பதிவில் இருந்தால் மன்னிக்க :(

குறிப்பு: மகாபாரதத்தில் பதவி மோகம் பிடித்து அலைந்த திருதுரஷ்டன் என்ற மன்னனுக்கு கிருஷ்ணன் என்ற அவதாரம் பாடம் புகட்டியது போல்... இன்று கிருஷ்ணன் இல்லையா?

Saturday, September 12, 2009

முன்னோருக்கு முன்னோர்கள்


ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், அரசன் எவ்வாறு ஆள வேண்டும், எது அதர்மம் எது தர்மம் என்பதை சொல்ல பல அறநெறிகள் இருந்தாலும், முக்கியமாக நான் கருதுவது வரலாறு/காவியம் ஆன ஒன்றே ஒன்று "மகாபாரதம்" மட்டும் தான். இராமாயணம், திருக்குறள் என்று பல இருந்தாலும் 4 முதல் 5 தலைமுறைகள், அரசியல், பண்பாடு, நாகரீகம், குரு மரியாதை, படிக்கும் முறை, வாழ்க்கை, கோவில் வழிபாடு முறைகள், யுத்த முறைகள், 64 கலைகள்  என அனைத்தும் அடங்கிய ஒரே பொக்கிஷம் இந்த மகாபாரதம்.


உலக அளவில் இந்த வகையான வரலாறு/காவியங்களைப் பற்றி பார்த்தால், கிடைப்பது கிரேக்கர்களின் 'இலியத்'. இதை பற்றி எனக்கு தெரிந்திர விட்டாலும் போற்றப்பட  வேண்டியது என்பது என் செவிஅறிவு. ஆனால் இப்போது ஒரு ஆச்சிரியப்பட்ட விஷயம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் இலியத் போன்ற வரலாறு/காவியங்களுக்கு எல்லாம் கொள்ளுத்தாத்தாவாக  ஒரு காப்பியம்  இருப்பதாக படித்தது. அக்காவியத்தின் பெயர் 'கில்கெமெஷ்' காப்பியம். பாபிலோனியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு (குறிப்பாக கி.மு.2700 ) வாழ்ந்த நிஜ கதாபாத்திரம் கில்கெமெஷ் என்பது உண்மையான ஆச்சிரியம். இந்த காப்பியத்திலும் மக்களை காப்பாற்ற கடவுள் தனிபிறவிகளை படைத்தது, மங்கையை வைத்து ஞானத்தை அழிப்பது, யுத்த தந்திரம் என அனைத்தும் அடங்கிய ஒரு காப்பியம். இதைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றை புரட்டுங்கள்..