Sunday, March 04, 2012

அரவான் - திரைவிமர்சனம்


 நாவல்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வெளிநாடுகளில் மட்டுமே எடுக்க படும். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், நாவல்களில் உள்ள கதைக்கு உயிர் தரும் வேலையில் தமிழ் திரையுலகத்திற்கு உயிர் மூச்சான மசாலாவை எடுத்து கொண்டு வர இயலாது. அதே போல, திரைப்படத்தின் வேக தன்மை, தீடிர் திருப்பங்கள் என்பதையும் கொண்டு வர இயலாது. இதனால் தமிழ் நாட்டில் பல நாவல் ஆசிரியர்கள் இருந்தும், இன்னும் தமிழ் திரையுலகில் கதை தேடும் சூழ்நிலை உள்ளது. உதாரணமாக 1980ல் எடுத்த திரைப்படத்தை மீண்டும் இப்போது எடுக்கும் நிலையை சொல்லலாம். இந்த விதியை மாற்றி, நாவலை அடிப்படையாக கொண்ட கதை எடுத்த இயக்குனர் வசந்த பாலன் அவர்களுக்கு முதல் பூங்கொத்து.

அரவான்... படம் பார்த்து கொண்டு இருக்கும் போது, நண்பர் ஒருவர் அதற்க்கான பொருளை கேட்டார். எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்படத்திலேயே அதற்க்கான காரணம் சொல்லபட்டு இருந்தாலும், இப்படத்திக்கு முன்னால் நான் எங்கேயோ படித்த நியாபகம் என்று மட்டும் தெரிந்தது. கடைசியாக பார்க்கும் போது, என் வலை தளத்திலேயே 2009ம் ஆண்டு அரவானை பற்றி பதிவு செய்து உள்ளேன். இதோ அந்த பதிவு "அரவான் - மகாபாரதம்".


18ம் நூற்றாண்டில் திருட்டை தொழிலாக கொண்ட ஒரு ஊரில் வசிக்கும் நபர் பசுபதி மற்றும் உறவினர்கள். அவ்வூரின் பெயரை மட்டும் பயன்படுத்தி திருடும் அனாதையான ஆதி,ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகின்றனர். ஒரு சமயத்தில், பசுபதியின் உயிரை ஆதி காப்பாற்ற, மேலும் அவர்கள் நட்பு கூடுகிறது. ஊரின் மானபிரச்சனை உடன்,பசுபதி உயிருக்கு ஆபத்து வரும் போது, அனாதையான ஆதி தான் யார் என்பதை கூறுகிறார். இதனால் ஆதிக்கு மேலும் பிரச்சனை இறுகுகிறது. அப்பிரச்சனையில் இருந்து யார் தப்பித்தனர், முடிவு என்ன என்பதே கதை.


இங்கே கதாநாயகன் என்பதை விட, கதையின் நாயகனாக இருக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல நடிகரான பசுபதியை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. முதல் பாதி முழுவதும் பசுபதியின் ஆளுமை தான்.  இந்த இரண்டு பேருக்கும் போட்டி நடிகன் கரிகாலன். அருமையான நடிப்பு. கதாநாயகிகளாக தன்ஷிக மற்றும் அர்சன கவி. அவர்கள் தன் வேலையை சரியாக செய்து இருக்கின்றனர்.  வெயில் படத்தின் நன்றி கடனாக பரத்தும், அங்காடி தெரு நன்றி கடனாக அஞ்சலியும் இரண்டு காட்சிகள். அனைத்து கதாபத்திரங்களையும், மீறி இரண்டு பேர் தனியாக நிற்கின்றனர் என்றால் அது ஒளிபதிவாளர் சித்தார்த் மற்றும் ஆர்ட் இருக்குனர் விஜய். இப்படம் திருட்டு தொழிலை மையமாக கொண்டதால், பல இரவு காட்சிகள். இரவு என்பதை மறக்க வைத்து, நம்மை கதைக்குள்ளே அழைத்து சென்றது ஒளிபதிவளரின் வெற்றி எனலாம். அவருக்கு இரண்டு பூங்கொத்து. இதே போல் 18ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக எடுத்து, அக்காலத்தை நம் முன்னால் கொண்டு வந்ததற்கு ஆர்ட் இயக்குனருக்கு  மூன்றாவது பூங்கொத்து.  இத்திரைப்படத்தின் இன்னொரு முக்கிய நபர் கதை ஆசிரியர் மற்றும் வசன ஆசிரியர் வெங்கடேசன். மக்களின் வாழ்க்கை முறை திரையில் எவ்வளவு காட்டினாலும், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வார்த்தைகள் தான் மிக முக்கியம். வெங்கடேசன் தன் வார்த்தைகள் மூலம், அவர் 18ம் நூற்றாண்டை உணர வைத்து இருப்பார். இதற்காக அவருக்கு நான்காவது பூங்கொத்து.



இத்தனை பெரிய வெற்றி இருந்தும், முடிவில் ஒரு நெருடல். திரைப்படத்தின் முடிவில், "18ம் நூற்றாண்டிற்கு பிறகு பிரிட்ஷ் காலத்தில் மரண தண்டனை நிறுத்த பட்டது. இன்னும் உலகில் நாடுகள் மட்டுமே மரண தண்டனையை வைத்து உள்ளது. மரண தண்டனை ஒழிப்போம்". இப்படம் மரண தண்டனை பற்றி சொல்கிறது என்பதை, கடைசி வரை நம்மால் உணர முடிய வில்லை. கதை களத்தின் படி, பலி இடுவதற்கும் மரண தண்டனைக்கும் என்ன தொடர்பு என்பதை யோசிக்க வைக்கிறது. இந்த சின்ன விஷயத்தை ஒதுக்கி வைத்து பார்த்தால், வசந்த பாலன் மீண்டும் நீருபித்து இருக்கிறார் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.

1 comment:

Kumaran said...

ஆழமான விமர்சனம்..அழகான எளிமையாக சுவையாக ஒவ்வொரு வரிகளையும் எழுதியுள்ளீர்கள்..மிக்க நன்றி சகோ..

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)