Thursday, January 21, 2010

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - கோபிநாத்

இந்த புத்தகத்தை வாங்க வேண்டுமா என்ற எண்ணம் இருந்தது.. அதே போல் நான் விசாரித்த போது கூட அந்த அளவு இல்லை என்று கேட்ட முடிந்தது. ஆனால் புத்தகக் கடையில் சென்ற போது, மனதில் ஒரு எண்ணம். எவ்வளவே செலவு செய்றோம், இந்த புத்தகத்தை வாங்கின என்ன என்ற எண்ணத்தில் வாங்கியது. அதற்கு கோபி அவர்களின் விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" என்ற நிகழ்ச்சியும் ஒரு உள்காரணம்.

எனக்கு தெரிந்தவரை கோபி அவர்கள் ஒரு சாதாரண மனிதனின் எண்ணத்தை நன்கு அறிந்தவர் என்று கூற வேண்டும். இல்லையென்றால் இந்த புத்தகத்தை இவ்வளவு தெளிவாக அதுவும் சுவராஸ்யமாக எழுத முடியாது. நான் தனியாக இருக்கும் போது, மனதில் பல கேள்விகளும், குழப்பங்களும் மனதை/மூளையும் பிடித்து ஆட்டிவிடும்.


  • வாழ்க்கையில் சுவாரஷ்யம் இல்லாமல் இருக்குதே?
  • பக்கத்து வீட்டுகாரன் அல்லது எதிர்க்கட்சிக்காரன் பார்த்த என்ன நினைப்பான்
  • மனசு என்னமோ மாதிரி இருக்கு
  • எல்லாமே எனக்கு எதிராவே நடக்குது.
  • பழையதை நினைத்து "போச்சே" என்று புலம்புவது..

மேல சொன்ன சில விஷயங்கள் அனைத்தும், ஏதாவது ஒரு நிமிடத்தில் கண்டிப்பாக நினைத்து இருப்போம்.  இந்த மாதிரியான நினைப்பை. எடுத்துக்காட்டு உடன் விவரித்து, இதற்குக்கான காரணம் என்ன, எப்படி இதில் இருந்து வெளியே வருவது என்று தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் பல இடங்களில் என்னை பார்க்கின்றேன் என்று தான் கூற வேண்டும்..

மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாங்கி பொறுமையாக அனுபவித்து படிக்கலாம்...

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழரே...

Vasanth R said...

Nanum itha padichu irukaen...aana book fulla mathavanga sonnatha than merkol kaati irukaarae thavira avara ethum sonna mathiri theriyalae .....