Tuesday, January 19, 2010

சரியான முடிவெடுக்க – ராபர்ட் E.குந்தர்


The truth about Making Smart Decisionஎன்ற புத்தகத்தின் தமிழாக்கம். திரு. லட்சுமி விஸ்வநாதன் அருமையாக தமிழாக்கம் கொடுத்து உள்ளார்.

"
விரைவாக சிந்திக்க வேண்டும்...
சாமர்த்தியமாக கணக்கு போடா வேண்டும்...
உடனே, உடனே முடிவெடுக்க வேண்டும்...
மிக சரியான முடிவைகளை மிக சரியான நேரத்தில் எடுப்பது ஒரு கலை"

ஒரு தனி மனிதன் தன்னை பற்றி முடிவெடுக்கும் போதோ அல்லது சுற்றி உள்ளவர்களின் முடிவை பற்றி முடிவெடுக்கும் போதோ அதனால் ஏற்பட கூடிய தற்போதைய நன்மை/தீமை, நீண்ட கால விளைவுகள், மன உளைச்சல்கள், வரவு/செலவு ஆரோக்கியம் என்று பல காரணிகளை மனதில் கொண்டு சாமர்த்தியமாக எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை உதாரணத்தோடு கொடுக்க பட்டு உள்ளது... கண்டிப்பாக அனைத்து வகையான பிரிவினரும் படித்து தெரிந்து கொள்ள பட வேண்டிய விஷயம்..


குறைகளே இல்லையா? என்ன தான் தமிழாக்கமாக இருந்தாலும், இந்த மாதிரியான புத்தகத்தை படிக்க பொறுமை வேண்டும் என்பதை இதன் மூலமாக அறிந்து கொண்டேன் (ரொம்ப கஷ்டம்).  எடுத்துக்காட்டாக அமைக்கபட்டு உள்ள மக்கள், தொழில் அமைப்புகள், அதிபர்கள் மற்ற அனைத்தும் வெளிநாட்டவர்களை சார்ந்தவை. இந்த வயசில படிக்கிற புத்தகமா என்ற கேள்வி மனதில் இருந்து கொண்ட தான் இருந்தது

No comments: