Monday, January 18, 2010

குட்டி - திரைவிமர்சனம்

தெலுங்கு திரையுலகத்தில் வெளிவந்த "ஆர்யா" திரைப்படத்தின் தழுவல்... முக்கோண காதல் கதை...எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் படம் வந்து உள்ளதே, கண்டிப்பாக ஓரளவு ஆவது இருக்கும் என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன் என்பது உண்மை.

கல்லூரியில் படிக்கும் தனுஷ், அதே கல்லூரியில் படிக்கும் குடும்ப பெண்ணான ஸ்ரேயா (என்ன கொடும சார் இது) மீது காதல் கொள்கிறார். ஆனால் ஸ்ரேயா அதே கல்லூரியில் படிக்கும் இன்னொருவன் மீது காதல்...  தனுஷ் சின்ன சின்ன குறும்புத்தனமான விஷயங்களை செய்து ஸ்ரேயாவின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார். முடிவில் ஸ்ரேயா யாரின் கையை பிடிக்கிறார்... தனுஷின் காதல் என்ன ஆனது என்பதே கதை...


  • பாடல் அனைத்தும் போச்சு...
  • ஸ்ரேயாவை விட தோழியாக வரும் பெண் நல்ல அழகு...(ஸ்ரேயாவோ தனுஷுக்கு அக்கா மாதிரி திரையில் தெரிகிறது).
  • தேவை இல்லாமல் ஆர்த்தி கதாப்பாத்திரம்
  • நகைசுவை என்ற பெயரில் காதுகளில் ரத்தம்..
  • திரைக்கதை எவ்வளவு மோசமாக தெரிகிறதோ, அதே போல் தான் கதையின் ஓட்டம்.

இதையும் தாண்டி நிற்கின்ற விஷயம் தனுஷின் நடிப்பு, அறிமுக நாயகன் சமீர் மற்றும் ராதாரவியின் நடிப்பு... மொத்தத்தில் பெரிதாக சொல்லுகின்ற அளவுக்கு விஷயம் இல்லை.. இதை எழுதி என் நேரத்தை வீணடித்தது தான் மிச்சம்...

No comments: