உலகவரலாற்றில் விரல் விட்டு என்ன கூடிய கொலை வழக்குகளில் முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கும் ஒன்று.. இதை வழக்கை கையாண்ட திரு.ரகோத்தமன் அவர்களின் ”ராஜீவ் கொலை வழக்கு”, மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகம் வசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏதோ "கிரைம்நாவல்" படிக்கும் அனுபவம்... கையை விட்டு புத்தகத்தை முடிக்காமல் வைக்க முடியவில்லை என்பது உண்மை.
என்னால் இந்த புத்தகத்தை பற்றி முழுமையாக விமர்சனம் செய்ய முடியுமா என்ற கேள்வி என் மனதில்.. அதனால் இந்த புத்தகத்தை பற்றி தெளிவாக விமர்சனம் செய்து உள்ள ஒரு பதிவை இங்கே வைக்கிறேன். இந்த பதிவு இட்லிவடை வலை தளத்தில் இருந்து எடுக்க பட்டது... அவருக்கு யுதிராஜ் என்ற நண்பர் கொடுத்து இருக்கிறார்.

சில நாட்கள் முன்பு ராஜிவ் காந்தி புத்தகம் பற்றி விமர்சனம் எழுத போவதாக யதிராஜ் சாட்டினார். ஏற்கனவே பா.ராகவன் நிறைய விளம்பரம் செய்துவிட்டார் ( செய்துக்கொண்டு இருக்கார்) இப்ப நீங்க வேற ... சரி செய்யுங்க என்றேன்.
ஆனால் நீங்க விமர்சனம் எழுதும் போது கார்த்திகேயன் புத்தகத்தையும் ஒரு முறை படித்துவிடுங்கள் என்றேன். இரண்டு புத்தகத்தையும் படித்து இந்த விமர்சனத்தை எழுதி எனக்கு அனுப்பினார்.
நான் ஜெயின் கமிஷன் அறிக்கையை படித்துவிட்டீர்களா என்று அவருக்கு அனுப்பினேன். அதையும் கொஞ்சம் படித்து திரும்ப எழுதி அனுப்பினார்.....
”ராஜீவ் கொலை வழக்கு”, மர்மம் விலகும் நேரம், ராஜிவ் படுகொலை - புலனாய்வு என ஒரே விஷயத்தைப் பற்றியதான இரு நூல்கள், இரு வேறு ஆசிரியர்களால் அளிக்கப்பட்டு சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் இவ்விருத்தகங்களுக்குமிடையிலான அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகளென்னென்ன என்பதை எனதறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். நிச்சயமாக, எனக்கும், கிழக்கு மற்றும் ராஜராஜன் பதிப்பகத்தாருக்குமிடையே எந்த வர்த்தகத் தொடர்போ அல்லது வேறு எவ்வித உறவோ இல்லை. இது ஒரு மார்கெட்டிங் உத்தியும் கிடையாது. இவ்விரு புத்தகங்களையும் படித்த பின்னர் எழும் கேள்விகளையும், குழப்பங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு எண்ணத்தின் வெளிப்பாடுதான்.
புத்தகாசிரியர்கள் இருவருமே, இப்புத்தகங்களை, ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய, உயர்ந்த விருவிருப்பான நடையில் இறுதிவரை கொண்டு சென்றுள்ளனர். ஏதோ ராஜேஷ்குமாரின் கிரைம்நாவல் படிப்பது போன்றதான உணர்வுதான் மேலிட்டது. நிச்சயம் எடிட்டர்களின் 'கைவண்ணம்' இருப்பது தெரிகிறது. அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள்.

ஆனால் திரு.ரகோத்தமன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னர், திரு.கே.டி.கார்த்திகேயன் எழுதிய, ”ராஜீவ் படுகொலை” புலனாய்வு புத்தகத்தை முழுமையாக வாசிக்க வேண்டும். இத்தனைக்கும் ரகோத்தமன் அவர்களும், கார்த்திகேயன் அவர்களும் ஒரே வழக்கை ஒரே குழுவாக இருந்து கையாண்டவர்கள். எனவே, இருவரும் எதற்காக தனித்தனியே ஒரே விஷயத்தைப் பற்றிய புத்தகம் எழுதியிருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். எனக்கும் எழுந்தது. ஆனால் இரண்டையும் படித்தபின்னர், ஒன்றிலிருந்து ஒன்று எவ்வாறு ஒரு முக்கிய விஷயத்தில், அதுவும் வழக்கின் போக்கையே மாற்றியமைத்திருக்க்க் கூடிய வித்த்தில் வேறுபடுகிறது என்பது புரியும்.
இலங்கையில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமிடையேயான அடிப்படைப் பிரச்சனை, அவற்றில் புலிகளின் பங்கு, விடுதலைப் புலிகள் அல்லாத மற்ற தமிழ் இயக்கங்கள், இந்திய இலங்கைக்கிடையிலான ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம், அவற்றில் புலிகளின் அதிருப்தி, அமைதிப்படை, புலிகளின் தமிழகத் தொடர்புகள் (அரசியல் தொடர்புகள் நீங்கலாக), இலங்கையில் தான் மேற்கொண்ட கள ஆய்வு என திரு. கே.டி.கார்த்திகேயன் சற்று ஆழமாகவே தனது புத்தகத்தில் அலசுகிறார். இலங்கைப் பிரச்சனை பற்றி ஏதும் தெரியாதவர்கள் இவருடைய புத்தகத்தின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அடிப்படையை நன்கு புரிந்து கொள்ள முடியும். எவ்வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
திரு.ரகோத்தமன் அவர்களும் இதே விஷயங்களைத் தனது புத்தகத்தில் அலசியிருக்கிறார்கள். ஒரே வழக்கில் பணியாற்றியவர்கள் என்ற காரணத்தால், வழக்கின் புலனாய்வு தொடர்பான விஷயங்களில் அதிக முரண்பாடில்லாமல் இவ்விரு புத்தகங்களும் செல்கின்றன. ஆனாலும், கார்த்திகேயன் தனது புத்தகத்தில் குறிப்பிடாத சில பல விஷயங்களை, ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யமான அதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. நிச்சயமாக கார்த்திகேயன் எழுதாமல் விட்டிருப்பது சாதாரண விஷயங்களோ, அல்லது தொகுக்கும்போது நேர்ந்த கவனப் பிழைகள் என்றோ சொல்ல முடியாது. அவையனைத்தையும் இங்கு குறிப்பிட்டு விட்டால், புத்தகத்தைப் படிக்க்கும் ஆர்வம் குறைந்து விடுமென்பதால் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
உதாரணமாக, பத்மநாபாவைக் கொலை செய்து விட்டு, சிவராசன் குழுவினர் தப்பிச் செல்லும் போது, கார்த்திகேயன் இவ்வாறு எழுதுகிறார்.
“ஒரு அம்பாசிடர் காரில் தப்பித்துச் சென்று கொண்டிருந்த புலிகளை, செங்கல்பட்டு அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதைச் சட்டை செய்யாமல் இரவு ஒண்ணரை மணியளவில் விழுப்புரம் சென்றடைந்தனர். அங்கே, அம்பாசிடர் காரை விட்டுவிட்டு, ஒரு மாருதி காரை மடக்கி அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த காரில் திருச்சி நோக்கி விரைந்தனர். மாலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டு, வங்க்க் கரையை ஒட்டிய மல்லிப்பட்டினம் என்ற ஊரில், ஒரு தென்ன்ந்தோப்பில் இரவைக் கழித்தனர்.......
இச்சம்பவத்தை ரகோத்தமன் விவரிக்கும் போது....
”செங்கல்பட்டு தாண்டும் போதே இரண்டு போலீஸ்காரர்கள் வழிமறித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தேகமெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கமான நெடுஞ்சாலை பரிசோதனைதான்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எதற்கோ இறங்கியிருந்தவர்களை நெருங்கிய அந்த இரண்டு போலீசாரும் வண்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள்.
வண்டி நிறையவே ஆயுதங்கள் இருந்தன. ஏகே ரகத் துப்பாக்கிகள். கையெறி குண்டுகள் இன்னும் பல்.
“டிக்கியைத் திறந்து காட்டுங்கள்!”
இரண்டு காவலர்களில் ஒருவர் வயதானவர். ஒருவர் இளைஞர். கேட்ட்து இளைஞர்தான். வயதான காவலருக்கு அவர்களைப் பார்த்த்தும் பிரயோஜனமில்லாதவர்கள் என்று தோன்றிவிட்டிருக்கிறது. இளைஞருக்கு ஒரு முயற்சி செய்து பார்க்கும் ஆசை.....
அந்த இளம் காவலர் விடாமல் வண்டியைத் துரத்தப் பார்க்க, அவர் கையை இழுத்துப் பிடித்தபடியே சிறிது தூரம் வண்டியை ஓட்டி, ஓரிட்த்தில் கையை விட்டார் சிவராசன். அடி. பலத்த அடி...............
அவர்கள் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து மல்லிப்பட்டினம் போய், இரவு வரை காத்திருந்து படகு ஏறிச் செல்லும்வரை ஒரு நடவடிக்கையும் கிடையாது.
போகிறவர்களைப் பிடிக்க வேண்டாம் என்று மேலிடத்து வாய்மொழி உத்தரவுகள் இருந்த்தாகப் பின்னால் சொல்லப்பட்ட்து”
“இந்த வழக்கை யாரும் கேட்டுக் கொள்ளாமலேயே சி.பி.ஐ எடுத்துக் கொண்டிருக்கலாம். அதற்கான அதிகாரங்கள் எங்களுக்கு இருந்தன. தவிர ராஜிவ் படுகொலையுடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கு அது. ஆனால் மாநில போலீஸ் மெத்தனம் காட்டுவதைக் கண்டு அதிமுக தலைவர் ஜெயல்லிதா, தமிழக முதல்வராக இருந்தபோது, இதனை சிபிஐக்கு மாற்றச் சொல்லி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றச் சொல்லி மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிய பிறகும் ஏனோ ராஜிவ் கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான கார்த்திகேயன் அப்போது அதில் ஆர்வம் செலுத்தவில்லை. வழக்கை இறுதி வரை கையில் எடுக்கவும் இல்லை. தமிழ்நாடு போலீசே விசாரிக்கட்டும் என்று சொல்லி விட்டார்.
இதற்கான காரணம் எனக்குப் புரியவே இல்லை.”

இந்த ஒரே விஷயத்தைப் பற்றி இவ்விருவரும் விவரிப்பதில், வித்யாசம் உங்களுக்கே தெரியும். மேலிட உத்தரவு பற்றி கார்த்திகேயன் குறிப்பிடவே இல்லை. இதுமட்டுமல்லாமல், கார்த்திகேயன் எழுதிய 340 பக்க புத்தகத்தில், ராஜிவ் படுகொலை பற்றி விசாரிக்கப்படவேண்டியவர்களாக ஜெயின் கமிஷனால் கூறப்பட்ட ஒரு அரசியல்வாதியின் பெயர் கூட இடம்பெறாதது மிகப்பெரிய ஆச்சரியம். இதற்கான காரணம் என்னவென்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
மேலும் இது போன்ற சில விஷயங்களில் கார்த்திகேயன் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏனென்று புரியவில்லை என்பதாக ரகோத்தமன் குறிப்பிடுகிறார். இன்னொரு உதாரணம், சென்னையில் கரையொதுங்கிய விடுதலைப் புலிகளின் கப்பல் பற்றி தமிழக காவலர்களே விசாரித்துக் கொள்ளட்டும் என்று கார்த்திகேயன் அதிக ஆர்வம் காட்டாமல் விட்டுவிட்டார் என ரகோத்தமன் தெரிவிக்கிறார்.
தவிர, ராஜிவைப் படுகொலை புரியும் நோக்கோடு இந்திய மண்ணில் காலடியெடுத்து வைத்த முதல் பெண் தற்கொலைப்படை மனித வெடிகுணடு ஆதிரை. இவர் மூலம் ராஜிவை தில்லியிலேயே படுகொலை செய்ய முதலில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. பிறகு நடைமுறைச் சிக்கல்களால் அத்திட்டம் கைவிடப்பட்டு, தணு மூலம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்குமுன், தில்லியில் ஆதிரை மற்றும் அவருக்கு உதவியாக கனகசபாபதி என்னும் முதியவர் ஆகிய இருவரும் தங்குவதற்கான உதவிகளை, தில்லியில் தியாகராஜன் என்பவர் செய்திருக்கிறார். இந்த தியாகராஜன், வைகோவின் நெருங்கிய நண்பர். தவிர வைகோவின் உறவினரான ரவிச்சந்திரன் என்பவரும், இத்திட்ட்த்தில் தொடர்புடையவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சில உதவிகளைச் செய்துள்ளார். இதுபற்றிய எந்த தகவலும் கார்த்திகேயன் எழுதிய புத்தகத்தில் இல்லை. அது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது.
பிறகு, ராஜிவ் படுகொலை நிகழ்த்தப்பட்ட அதே தினத்தில், ராஜிவ் கூட்டத்திற்கு இரண்டு மணிகளுக்கு முன்னர், கலைஞர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. பிறகு அக்கூட்டம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் படுகொலை குறித்த தகவல்கள் முன்னரே அவர்களுக்குத் தெரியுமா என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால் இது போன்ற சந்தேகங்களைக் கார்த்திகேயன் தனது புத்தகத்தில் எழுப்பவில்லை. இதெல்லாவற்றையும் விட ஆச்சரியமான விஷயம் ஒன்று இருக்கிறது. ராஜிவின் கூட்டம் 8 மணிக்கு. ஆனால் அவர் புறப்பட வேண்டிய விமானம் கோளாறினால் தாமதப்பட்டு, இரண்டு மணிநேரம் தாமதமாகத்தான் கிளம்பியிருக்கிறார். அவ்விஷயம் காவல் பணியில் இருந்த காவலதுறை அதிகாரிகளுக்கும், உளவுத் துறையினருக்குமே தெரியாதாம். ஆனால் இவ்விஷயத்தை ஸ்தலத்திலிருந்த சிவராசன் தனது டைரியில் குறித்து வைத்திருந்திருக்கிறார். அவருக்கு தகவல் கொடுத்த்து யார்? இது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. கார்த்திகேயன் இது போன்ற கேள்வியையே எழுப்பவில்லை.
இன்னும், ராஜிவ் படுகொலை ஹரிபாபு என்ற விடுதலைப் புலி அபிமானியால் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களுள் அவரும் ஒருவர். வீடியோகிராபர்களுக்கான மின்சார சப்ளை சரிவர இல்லாத காரணத்தால் படுகொலை நடப்பதற்கு முன்பு, ராஜிவை சரியாக பதிவு செய்ய முடியாத காரணத்தால், வீடியோ கிராபர்கள் கேமராவை ஆப் செய்து விட்ட்தாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில், படுகொலைச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், அதனை ஆய்வு செய்து அறிக்கைகள் அளிப்போம் என்றும் உளவுத் துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்மா கமிஷனின் விசாரணை முடிவடையும் வரை, உளவுத் துறை அவ்வாறான ஒரு வீடியோ கேசட்டை வெளியிடவே இல்லை என ரகோத்தமன் கூறுகிறார். புகைப்படத்தைத் தவிர வேறு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் அவ்வீடியோ ஆதாரம் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கும் எனத் தெரிவிக்கிறார். ஆனால் வீடியோ கேசட் கடைசிவரை வெளியிடப்படவில்லை. அப்படியானால் வீடியோ எடுக்கப்பட்டதா இல்லையா? இல்லை என கார்த்திகேயன் தெரிவிக்கிறார், எம்.கே.நாராயணன் வீடியோ ஆதாரம் உளவுத் துறை வசம் இருக்கிறது என்கிறார். அப்படியென்றால் எது உண்மை? இருப்பது உண்மையெனில் கடைசி வரை ஏன் அதனை வெளியிடவே இல்லை?
ராஜிவ் படுகொலையில் கோட்டை விட்ட உளவுத்துறை அதிகாரிகளை விசாரிக்கும் பொருட்டு சிபிஐ ஒரு விசாரணை மேற்கொண்டதாம். ஆனால் யாரை விசாரித்தார்கள், என்ன விசாரித்தார்கள்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்ட்து? என்பன போன்ற ஒரு தகவலுமே இல்லை என்கிறார் ரகோத்தமன். மேலும் கேஸ் டயரி இருக்கிறதா இல்லையா என்றே சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். உளவுத் துறையையும், எம்.கே.நாராயணனையும் காப்பாற்றுவதற்காகவே அவதரித்ததாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை (கார்த்திகேயன்) நடந்து கொண்ட்தாக ரகோத்தமன் தெரிவிக்கிறார். ஏன் காப்பாற்ற முனைய வேண்டும்?
பல விஷயங்களில் தமிழக அரசியல்வாதிகளின் கசப்பிற்கு ஆளாக்க் கூடாது என்ற நோக்கில் பட்டும் படாமலும், கார்த்திகேயன் நடந்து கொண்ட்தாக அழுத்தமாகவே கூறியுள்ளார் ரகோத்தமன். குறிப்பாக, வர்மா கமிஷனுக்குப் பிறகு அமைக்கப்பட்ட, ஜெயின் கமிஷனுக்கு விசாரணை பற்றிய முழுமையான விவரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு அளிக்கவே இல்லையாம். தவிர, வைகோ போன்ற அரசியல்வாதிகளை முறையாக விசாரிக்க ரகோத்தமன் அனுமதி கோரிய போதும் மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன பின்னணி?
புத்தகத்தின் இறுதிக் கட்ட்த்தில் கார்த்திகேயன் இவ்வாறு கூறுகிறார்.
”......தங்களுடைய பதவி மூலமாக சொந்த நலன் கருதி, அரசியல் செல்வாக்கிற்கும் பலவந்தத்திற்கும் ஆளாகி நாட்டின் நலனுக்கும், விசாரணையின் நேர்மைக்கும் பாதகமான செயல்களில் இறங்கிவரும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருந்தத் தக்கதுதான்.”
இவ்வாறு கார்த்திகேயனே எழுதியுள்ள நிலையில், அவர் ஏன் சில விஷயங்களில் மெத்தனப் போக்குடன் அலட்சியமாக நடந்து கொண்டார் என்பது சந்தேகமளிக்கிறது. தவிர வழக்கை எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே, எந்த அரசியல் தலையீடும் இருக்க்க் கூடாது என நிபந்தனை விதித்து அது ஏற்றுக் கொள்ளப்பட்ட்தற்குப் பிறகே விசாரணையைத் துவங்கியதாக கார்த்திகேயன் குறிப்பிடுகிறார். இந்த முரண்பாடு புரியாத விஷயமாக இருக்கிறது.
ரகோத்தமன் குறிப்பிடும்போது...
”சின்ன சாந்தன் பிடிபட்ட பிறகுதான் அந்த வழக்கின் முழு வடிவம் வெளிச்சத்திற்கு வந்த்து. கொலை நடந்த சமயம் அதை தமிழ் நாடு போலீஸ் “விசாரித்து முடித்து” அதைக் கிட்ட்த்தட்ட ஓரம் கட்டிவிட்டிருந்தார்கள். சின்ன சாந்தன் அளித்த தகவல்களின் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்டு துப்பு துலக்கியிருக்குமானால் இன்னும் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.
ஆனால் அந்த வழக்கைத் தமிழ்நாடு போலீசே பார்த்துக் கொள்ளட்டும் என்று கார்த்திகேயன் சொல்லிவிட்டார். ஒரே காரணம், வழக்கை சிபிஐ எடுத்தால் அன்றைய உள்துறைச் செயலர் நாகராஜன் தொடங்கி, திமுக தலைவர் கருணாநிதி வரை விசாரிக்க வேண்டியிருந்திருக்கும். பொதுமக்கள் எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வந்திருக்கும். நமக்கெதற்கு வம்பு? விட்டுவிடலாம். தமிழ்நாடு போலீசே பார்த்துக் கொள்ளட்டும்!
.......அப்படியிருந்தும் அவர் பல வழக்குகளில் பட்டும் படாமலும் நடந்து கொண்ட்து, சிபிஐ எடுத்திருக்க வேண்டிய வழக்குகளை வேண்டுமென்றே தவிர்த்த்து, தமிழக அரசியல்வாதிகளின் கசப்பிற்கு ஆளாகாதிருப்பதே முக்கியம் என்று நினைத்த்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஆனால் இந்தியா டுடே வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தமிழக உள்துறைச் செயலர் நாகராஜன் விசாரிக்கப்பட்டு, வாக்குமூலமும் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர வேறொரு அதிர்ச்சியூட்டும் செய்தியையும் வெளியிட்டுள்ளது.
"chief minister also told Natesan that killing of Padmanabha was a necessity and so also of Vardaraja Perumal and that Natesan should ensure that he (Karunanidhi) was taken into confidence before such acts are committed". The commission has also recorded the evidence of former state home secretary R. Nagarajan, which further indicts Karunanidhi: "Nagarajan has deposed that the DGP informed him that the chief minister has asked him (DGP) that the police need not evince keen interest to trace out the culprits in the Padmanabha massacre till his arrival the next day for further instructions from him."
ரகோத்தமன் குறிப்பிடும்போது, நாகராஜன் தொடங்கி, கருணாநிதி வரை விசாரிக்க வேண்டியிருந்திருக்கும் என்றுதான் தெரிவிக்கிறார். ஆனால் நாகராஜன் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவரும் விசாரிக்கப்பட்டிருக்கிறார் என்றே அறிகிறோம் (தமிழக காவல்துறையால் விசாரிக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது யூகம்). அவர் அளித்த வாக்குமூலத்தின் மீதான நடவடிக்கைகள் என்னவென்பது தெரியவில்லை. ரகோத்தமனாவது வாய்மொழி உத்தரவு, மேலிட உத்தரவு, மற்றும் தமிழக அரசியல் தலைகள் பலருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியில் பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறார். ஆனால் கார்த்திகேயன் தமிழக அரசியல் தலைவர்களின் பெயர்களையே உபயோகப்படுத்தவில்லை. இதிலிருந்து ரகோத்தமனின் குற்றச்சாட்டு உண்மைதானோ என்று சந்தேகிக்கத் தூண்டுகிறது.
கடைசியாக ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த, பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மன் ஆகிய இருவருமே இறந்து விட்ட்தாக இலங்கை அரசு தெரிவித்த்தால்தான், இப்புத்தகத்தையே எழுத முனைந்த்தாக ரகோத்தமன் தெரிவிக்கிறார். (ஏன் அவர்கள் மரணம் வரை காத்திருந்தார் ? ) ரகோத்தமன் இன்னும் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் அழுத்தமாகவே எழுப்பியிருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் இங்கேயே தொகுக்க இயலாது. மர்ம்ம் விலகும் நேரம் எனத் தலைப்பிட்டிருந்தாலும், இன்னும் விலகாத மர்மங்கள்தான் விலகிய மர்மங்களை விட அதிகம். இனியும் அவை விலகுமா என்பதும் கேள்விக்குறி ??
விடுதலைப் புலிகளின் திட்டமிடுதலும், புத்திக் கூர்மையும் வியக்க வைக்கிறது. அதே சமயத்தில் அவர்களது படுகொலையை நிறைவேற்றிய விதமும், அவர்களது மற்ற தனிமனிதப் படுகொலைகளும் ரத்தத்தையே உறைய வைக்கிறது. இவ்வளவு ஈவிரக்கமற்ற தன்மையுடைய ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு இன்றளவும் வெளிப்படையாக லாலி பாடும் அரசியல் கட்சிகளையும், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க முயலாத அரசு இயந்திரங்களையும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவ்வளவு தெளிவாகவும், அணு அணுவாகவும் இப்புலனாய்வு விளக்கப்பட்ட பிறகும் கூட, இக்கொலையைச் செய்தது அமெரிக்காவின் CIA என திருமாவளவன் போன்றோர் கூறுவதுதான் வேடிக்கையின் உச்சம். இவர்கள் தான் நமக்கு பெரிய மர்மம்!
நன்றி இட்லிவடை, யுதிராஜ்
No comments:
Post a Comment