Monday, January 04, 2010

30 வினாடி - சிறுகதை

நம்ம கண்ணன் சொல்லுகின்ற அளவிற்கு அழகு இல்லை என்றாலும், பார்க்கின்ற அளவுக்கு இருப்பான். எப்போதுமே அவன் பைக்குல "அலைபாயுதே மாதவன்" மாதிரி சுத்திகிட்டு இருக்கும் அவனுக்கு அன்று பார்த்து உடல் நிலை சரியில்லை. அதுவும் காலை நேரம், பல்லாயிரக்கணக்கான மக்கள் அலுவலகம் செல்லும் வேளையில் கண்ணன் மெதுவாக பைக்கை ஒட்டி சென்று உணவகத்தில் தேவையான உணவை வாங்கி கொண்டான். அப்போது தான் மருந்து வாங்கும் அளவிற்கு தேவையான பணம் கையில் இல்லை என்று தெரிந்தது. உணவு பார்சலை கையில் வாங்கி கொண்டு, நேரே தானியங்கி பண இயந்திரம் உள்ள இடத்திற்கு சென்றான்.

எப்போதுமே அங்கு கூட்டம் நிரம்பி வழியும் என்பதை அறிந்த அவன், நேராக பைக்கை வாசலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, பார்சலை பைக்கிலேயே வைத்து விட்டு, வரிசையில் வேகமாக போய் நின்று விட்டான். பைக்கை சுற்றி மூன்று ஆட்டோக்கள், பேருந்தை பிடிக்க வேகமாக ஓடும் பயணிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் என்று பரபரப்பாக அந்த இடமே இருந்தது. வரிசையில் நிற்கும் போது காலை நேரம் 9 மணி  3 நிமிடம். பண இயந்திரம் இருக்கும் அறையில், இருவர் எவ்வாறு பணத்தை எடுப்பது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்கையில், இயந்திர பாதுக்கப்பாளர் போய் உதவி செய்து கொண்டு இருந்தார். கண்ணன் மறுபடியும் தன் பைக்கை பார்க்கும் போது 9 மணி  4 நிமிடம். எரிச்சலுடன் கைத்தொலைபேசியில் குறும்சேதி எதாவது உள்ளதா என்று பார்த்து மறுபடியும் பைக்கை பார்க்கும் போது 9 மணி  4 நிமிடம் 30 வினாடி . ஆனால் ஒரு சிறு வித்தியாசம். இப்போது பைக்கில் வைத்து இருந்த பார்சலை காணவில்லை. கண்ணன் வேகமாக யார் எடுத்து இருப்பார்கள் என்று யோசித்து கொண்டே தன் கண்களை சுழற்றி  பார்த்தால் மீண்டும் அதே மூன்று ஆட்டோக்கள், பேருந்தை பிடிக்க வேகமாக ஓடும் பயணிகள் மற்றும் பிச்சைக்காரர்கள். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது தான் அவன் நினைவுக்கு வருகிறது... நிற்பது மோசமான சென்னையில் என்று... மீண்டும் அவன் மனதில் மகிழ்ச்சி, பைக் அங்கேயே நின்றது தான்...போனது பார்சலுடன் போய் விட்டது..

No comments: