Monday, September 21, 2009

உ. த. மா?

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு 1995ல் தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார்


ஹிட்லரை செய்த படுகொலைகளை விட ஈழ தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு செய்த, செய்துக் கொண்டு இருக்கின்ற வன்முறைகள், படுகொலைகள், மற்றும் பறிக்க படுகின்ற குறைந்த பட்ச மனித உரிமைகள் என்று இருக்கும் வேளையில், தமிழ் நாட்டில் தூக்கத்தை கடைபிடிக்க வேண்டிய வேளையில்.. பதவிக்காக, குடும்பத்துக்காக மட்டும் உழைக்கும் இன்றைய ... , ஈழ தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் இன்றைய ... என்னவென்று சொல்ல.

இன்றைய ... நினைத்து இருந்தால் கண்டிப்பாக ஈழ போரை நிறைவுக்கு கொண்டு வந்து இருக்கும். ஆனால் பதவி மோகம் பிடித்து அலையும் இந்த ...கண்டிப்பாக பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஈழ மக்களின் பிணங்கள் எரிந்து முடியாமல் இருக்கும் தருவாயில் தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை.

கண்ணீருடன் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்வி: ஈழத்தில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள், தமிழ் மொழியை பேசுவதை தவிர என்ன பாவம் செய்தார்கள்?

தவறாக ஏதாவது இந்த பதிவில் இருந்தால் மன்னிக்க :(

குறிப்பு: மகாபாரதத்தில் பதவி மோகம் பிடித்து அலைந்த திருதுரஷ்டன் என்ற மன்னனுக்கு கிருஷ்ணன் என்ற அவதாரம் பாடம் புகட்டியது போல்... இன்று கிருஷ்ணன் இல்லையா?

No comments: