ஒரு வழியாக அமெரிக்காவில் வாங்கின தொலைக்காட்சி என் வீட்டில். இப்போது நாம் டெக்னிகலாய் சில விஷயங்களை பார்க்கலாம். அமெரிக்காவில் மின்சாதன பொருட்கள் 110V தான் வேலை செய்யும். ஆனால் இந்தியாவில் 220V . வீட்டிற்க்கு வந்த உடன், முதலிலேயே வாங்கி வைத்து இருந்த power convertor வைத்து தொலைகாட்சியை switch on செய்தேன். வெறும் ஒரு வெள்ளை நிறம் மட்டும் வந்து, மீண்டும் கருப்பு நிறம் வருகிறது. இந்த மாதிரியாக தொடரவே, நான் பயந்து தொலைகாட்சியை நிறுத்தி விட்டேன். ஏற்கனவே நண்பர்கள் பலரது பிரச்சனைகளை நான் அறிந்த காரணத்தால், என் தொலைக்காட்சியும், விமானத்தில் எடுத்து வந்த காரணத்தால் உள்ளே உடைந்து போய் விட்டது என்று நினைத்து நானும் உடைந்து போனேன்.
நண்பர் பாலாஜி, இதே போல் ஒரு தொலைக்காட்சியை எடுத்து வந்து போது, ஆட்டோவில் ஏற்றி வந்த காரணமாக தொலைகாட்சி உடைந்து போகவே 35K செலவு செய்து அதை சரி செய்தார். அவர் insurance வைத்து இருக்கவே, உடைந்து போன தொலைகாட்சியை சரி செய்தார். செலவு செய்த பணத்தை insurance நிறுவனமே கொடுத்து விட்டது. ஆனால் என் நிலையில் insurance எனது தொலைகாட்சிக்கு இல்லை. என் நிலைமை நினைத்து, அழுகை வந்து விடும் போல் எனக்கு ஆகி விட்டது. வெளிநாட்டில் இருந்து பல பொருட்களை கொண்டு வந்து இருந்தாலும், எதையுமே காணும் நிலையில் நான் இல்லை.
நண்பர் கிஷோரின் நண்பரை அழைத்து காட்டவே, இது basic power convertor என்று கூறி, நல்ல power convertor குடுத்து விட்டு சென்றார். அவர் தொலைக்காட்சியை switch on செய்து காட்டும் போது தான் என் உயிர் மீண்டும் எனக்கு கிடைத்தது. ஆக மொத்தத்தில் LED,3D,SMART TV என் வீட்டில்.
எத்தனை நாளைக்கு தான், திரைப்படம் மட்டுமே பார்த்து கொண்டு இருப்பது. நம்மூர் லோக்கல் சேனல்கள் எப்போதுதான் பார்ப்பது என்ற எண்ணம் வரவே, அதற்கான முயற்சி எடுத்தேன். எதற்கு அந்த முயற்சி? ஆம் வெளிநாடுகளில் வாங்கும் தொலைகாட்சிகள் இந்தியாவின் உள்ள சிக்னல் சிஸ்டத்தை சப்போர்ட் செய்வது இல்லை. வெளிநாடுகளில் உள்ள நிகழ்சிகள் NTSC என்ற முறையில் ஒளிபரப்ப படுகிறது. ஆனால் இந்தியாவில் PAL என்ற முறையில் ஒளிபரப்ப படுகிறது. இந்த இரண்டு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லோக்கல் கேபிள் முறை இந்த தொலைகாட்சிக்கு ஒத்துவராது என்பதால், நேரடி தொலை நிகழ்ச்சி (DTH) என்ற முறையில் செல்ல எண்ணினேன். சென்னையில் DTH முறையில் இருக்கும் அனைத்து விதமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விளக்கினேன். ஆனால் யாருக்கும் என் நிலைமை புரியாததால், நானே RISK எடுக்க முடிவெடுத்து Airtel DTHயை 2K கொடுத்து எடுத்து விட்டேன். இப்போது தான் அவர்கள் அனைத்து DTH நிறுவனங்களும் செய்யும் தில்லு முள்ளு எனக்கு தெரிந்தது.
வீடு கட்டும் போது கேபிள் எடுத்து செல்ல சுவற்றில் உள்ளேயே எதாவது ஒரு வழிமுறையை செய்து இருப்பார்கள். ஆனால் இந்த DTH நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அந்த வழிகளை உபயோகிக்காமல், அவர்கள் எந்த வழியாக சுலபமாக கேபிள் கொண்டு வர முடியுமோ (சுவற்றை துளைத்து அல்லது ஜன்னலை துளைத்து), கொண்டு வந்து அவர்கள் தன் வேலையை முடிப்பார்கள். இதில் பதிக்க படுவது நாம் தான். ஆம் தேவை இல்லாமல் சுவற்றில் துளை மற்றும் வெளியில் கேபிள்கள் எப்போதும் அசிங்கமாக தொங்கி கொண்டே இருக்கும்.
இன்னொரு விஷயம் என்னவென்றால்....
No comments:
Post a Comment