Thursday, December 01, 2011

மீண்டும்...மீண்டும்...II



சென்னையில் நடந்த ஒரு வீபரீதத்தை பார்க்கும் முன், நான் டாலர் தேசத்தில் தங்கி இருந்த கிராமத்துக்கு அருகில் ஒரு விமான நிலையம் உள்ளது. மொத்தமே சில விமானங்கள் தான் வந்து செல்லும் இடம். அது போலேவே சிறியவகை விமானங்களே மட்டுமே கையாளும் நிலையம். மதுரையில் இருந்து எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அங்கு வரவே, அவரை வரவேற்க நான் சென்று இருந்தேன். அவர் சென்னை விமான நிலையத்தில் கொடுத்து இருந்த அவருடைய கை பெட்டிகள் மட்டும் அவருடன் வந்து சேர வில்லை. உடனடியாக அங்கு உள்ள அதிகாரியை தொடர்பு கொண்ட போது, மிக பொறுமையாக பெட்டிகளின் எண்ணை எடுத்து, கணிப்பொறியில் இருந்து பெட்டிகளின் நிலையை என்னவென்று கூறினார். அந்த பெட்டிகள் இப்போது எங்கு உள்ளது மற்றும் எப்போது இந்த விமான நிலையத்திற்கு வந்து அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று பொறுமையாக எடுத்து கூறினார். நண்பர் டாலர் தேசத்திற்கு புதியவர் என்பதால், தொடர்பு கொள்ள என்னுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் கொடுத்தேன். இரவு எட்டு மணிக்குள் அனைத்து காட்சிகளும் நடைபெறுகிறது.

அதே தினத்தில் நடுஇரவு தொடங்கும் முன் தொலைபேசி அடித்தது. ஒரு வெள்ளைகார மனிதர் பேசினார். உங்களது முகவரியை தேடி கொண்டு இருக்கிறேன். அருகாமையில் உள்ள இடத்தை கூறவும் என்றார். நான் நீங்கள் யார் என்று கேட்டும் போது தான், அவர் எனது நண்பர் வந்து இறங்கிய விமானத்தை சேர்ந்தவர் என்றும், தொலைந்து போன பெட்டிகள் கொண்டு வந்து இருப்பதாவும் கூற, எனக்கு மகிழ்ச்சி. இது தான் விமானத்தில் பயணம் செய்யும் சந்ததர்களை மதிக்கும் விமானத்தை நடத்துவோரின் பண்பு. சுமார் 55 வயது உள்ள மனிதர். அவரே 23 கி.லோ எடை உள்ள பெட்டியை இரண்டாவது மாடிக்கு கொண்டு வருவதை பார்த்து, நானும் உதவி செய்தேன். ஆக மொத்தம் தொலைந்து போன போட்டிகள் வீடு தேடி வந்த கதை.

இப்போது சென்னையில்...


9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் வந்து இறங்கிய உடன், நானும் எனது பெட்டிகளுக்காக காத்து இருந்தேன். கடைசியாக எனது பெட்டிகள் தொலைந்து போனது தெரிந்தது. ஆம் தொலைந்து போனது எனது இரண்டு பெட்டிகள் மற்றும் நான் டாலர் தேசத்தில் வாங்கிய பெரிய தொலைக்காட்சி பெட்டி. தொலைந்து போன இரண்டு பெட்டிகளுக்கு கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் தொலைகாட்சி பெட்டி காணமல் போனது தான் என்னை பயமுரித்தியது. ஏற்கனவே நான் தொலைகாட்சி பெட்டி உடைந்து போய் வந்து இருக்குமோ என்ற பயத்தில் இருந்த நான், காணமல் போனது என்னை மேலும் பலவீனம் ஆக்கியது. நானும் இதே மாதிரியான பிரச்சனை எனது நண்பர்களுக்கு பார்த்து உள்ளத்தால், சிறிது தைரியம் இருந்தது. நானும் அமெரிக்காவில் இருப்பது போல், பெட்டிகளின் என்னை கொடுத்தால், அவர்கள் பெட்டிகள் எங்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், நான் வந்து இறங்கிய விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்ட போது தான் எனக்கு மயக்கம் மற்றும் பயமும் வந்தது. ஆம் அவர்கள் ஒரு வெள்ளை தாளை எடுத்து கொடுத்து, அதில் பிரச்சனையை எழுத கூறினார். நான் இருக்கும் இடத்தை மீண்டும் நினைவு படுத்தி பார்த்தேன். ஆம் நான் நிற்கும் இடம் சென்னையில் உள்ள வெளிநாட்டு பயணிகள் வந்து சேரும் இடம் தான். அங்கேயே வெள்ளை தாள் என்றால், இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களின் நிலைமை??? டாலர் தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விமான நிலையத்தில் தொலைந்து போன பெட்டிகளை கண்டு பிடிக்கும் போது, மிக பெரிய விமான நிலையமான சென்னையில் பெட்டிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. எனது பிரச்சனையை வாங்கி கொண்டு, அவர்கள் கூறிய பதில், நாளை காலை உங்களுக்கு தொலைபேசி மூலம் விஷயத்தை விளக்குவார்கள் என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

பெட்டிகள் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் இந்த பளைபோன சென்னை விமான நிலையத்தை விட்டு போகும் போது, அடுத்து நடக்க இருக்கும் ஒரு விளையாட்டு தெரியாமல்....தொடரும்

No comments: