இன்னொரு விஷயம் என்னவென்றால், DTH நிறுவனத்தினர் போடும் கேபிளின் அளவு 12மீ மட்டுமே. அதற்கு மேல் மீட்டருக்கு ரூ.ஆறு. எந்த வீட்டிற்கும் 12மீ கேபிள் பத்தவே பத்தாது. அதை தெரிந்து கொண்டு, அவர்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் இவ்வாறு கொள்ள அடிக்கின்றனர். கேட்டால் இது தான் அந்த நிறுவனத்தின் சட்டம் என்கிறார்கள். அதற்கு மேல், எல்லா நிறுவனங்களும் இதே சட்டத்தை தான் அமல் படுத்தி உள்ளனர் என்று கூறி பணத்தை பிடுங்கி கொள்கின்றனர். இதற்காகவே நான், கேபிளை தவிர, மற்ற விஷயங்களுக்காக (சுவற்றில் துளை இடாமல் எடுத்து செல்லவது) அனைத்து நிறுவனத்தையும் கேட்டேன் (சன், டிஷ், டாட்டா மற்றும் வீடியோகான்). அவர்கள் கூறிய பதில்கள் எல்லாம் கேட்டும் போது, அனைவரும் மக்களை திருட தான் செய்கிறார்கள் என்று புரிந்தது. இதுவெல்லாம் பொது பிரச்சனை.
இப்போது என் பிரச்சனைக்கு வரும் போது, AIRTEL DTH சுவற்றில் துளை இடமால், வேறு விதமாக உள்ளே எடுத்து கொண்டு போனேன். ஒரு வழியாக கேபிளை தொலைக்காட்சியுடன் கொடுக்கும் போது தான் NTSC /PAL விஷயம் வெளியே வருகிறது. ஆம் இந்தியாவில் வரும் சிக்னல் சிஸ்டம் PAL . தொலைகாட்சி 80 % மட்டுமே தெரிகிறது, அதுவும் புள்ளி புள்ளியாக. எந்த DTH போட்டாலும் கிடைக்கக் கூடிய சிக்னல் PAL தான் என்பது அப்போது தான் புரிந்தது. என்னடா போட்ட பணம் அவ்வளவு தான? என்ற கேள்வியுடன் பல வலைதளங்களில் தேடியும் எதுவும் புலப்படவில்லை. வேறு எந்த DTHல் தொலைகாட்சி தெரியும் என்று சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அலசி ஆராய்ந்து, பலன் இல்லாமல் போனது தான் மிச்சம். அனைத்து விஷயத்தையும் பார்க்கும் போது தான், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வித்தியாசங்கள் புரிந்து கொள்ள முடிகிறது. நான் யோசிக்காமல் போன விஷயம் (இன்னுமும் கூட), ஏற்கனவே வெளிநாட்டு நண்பர்கள் இந்தியாவிற்கு எடுத்து வந்த வெளிநாட்டு தொலைகாட்சிகள் எப்படி அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கேட்கவே இல்லை. அது கேட்டு இருந்தாலும் ஒரு அளவாவது விஷயம் தெரிந்து இருக்கும். AIRTEL DTH உடன் சண்டை போட்டு, பணத்தை மீண்டும் வாங்கி விட்டேன். இதுவே சன் DTH என்றால் வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சன் DTH மக்களை மதிக்கவே மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும். என் நண்பர்கள் கூட சொன்ன விஷயம் "AIRTEL DTH என்பதால் பணம் திரும்ப கிடைத்தது. சன் DTH என்பது கேடானது" .
ஏற்கனவே AIRTEL DTH எடுத்து செய்த தவறை மீண்டும் செய்யாமல், எந்த DTH எடுத்தால் என் தொலைகாட்சியில் உள்ளூர் சேனலை காணலாம் என்ற எண்ணம் ஓட தொடங்கியது. இப்படியே வலை தளங்களில் தேடிக் கொண்டே மற்றும் நண்பர்கள் உடன் தேடி கொண்டே சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்டது. தீடிர் என்று ஒரு யோசனை. நண்பர் ராஜேந்திரன் தன்னுடைய கணிப்பொறியில் தான் உள்ளூர் சேனலை பார்த்துக் கொண்டு இருந்தார். அது எவ்வாறு என்று கேட்டு கொண்டு, அதே போல் என் தொலைகாட்சியில் அந்த முறை பொருந்துமா என்று பலருடன் கேட்டு, கடைசியாக PAL சிக்னல் முறையில் இருந்து VGA முறைக்கு மற்றும் convertor யை வாங்கி, சோதனை செயலாம் என்று முடிவெடுத்து, அதை தேட தொடங்கினேன். இந்த convertor கூட எனது பிரச்சனையை முடிக்குமா என்று தெரியாது. நான் கேள்வி பட்ட வரை 99 % பிரச்சனை முடியலாம் என்ற காரணத்திற்காக மட்டுமே தேட தொடங்கினேன். ஆம் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அதை பொருத்தி பார்க்கும் போது, உள்ளூர் சேனல் எனது தொலைகாட்சியில் தெரிந்தது. அதன் விலை ரூ. 1400 . இதில் என்ன பிரச்சனை என்றால், இது உள்ளூர் கேபிளை எடுத்து கொடுத்து இருந்தேன். மாதத்திற்கு என்னவோ ரூ. 100 மட்டுமே.ஆனால் இந்த தொலைகாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு, இதுவே தேவலாம் என்ற நிலையில் இருந்தேன். இருந்தாலும் என்னுடைய தொலைகாட்சிக்கு இந்த முறை போதாது என்று, எனக்கு தெரியாமல் நான் NTSC /PAL பற்றி தேடி கொண்டு தான் இருந்தேன்.
VGA convertor பிரச்சனை என்னவென்றால், ஒலி தனியாகவும், ஒளி தனியாகவும் பிரித்து கொடுக்கும். அதனால் என்னவோ படம் ஒழுங்காக தெரிந்தாலும், சத்தம் கேட்கும் போது ஒரு வித இரைச்சல் இருந்து கொண்டே தான் இருந்தது. மேலும் ஒளியின் அளவு, சுமாராக தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் தான், உள்ளூர் கேபிளால் வரும் பிரச்சனை வந்தது. அனைத்து சேனல்களும் புள்ளி புள்ளியாக தெரிய, கேபிள் டிவி ஆப்பிரேட்டரை கொண்டு வந்து காட்ட, இந்த பெரிய தொலைகாட்சியில் இவ்வளவு தான் சேனல்கள் தெரியும். இது என் பிரச்சனை அல்ல. அதே கேபிளை அரசு தொலைகாட்சியில் கொடுத்தால், நன்றாக தெரியும் என்று கூறி, இந்த பிரச்சனை முடிவாக ஏன் சுமங்கலி setup பாக்ஸ் வாங்க கூடாது என்று கேட்டார். நான் AIRTEL DTH ல் நடந்த அனைத்து விஷயத்தையும் கூறி, நீங்கள் DEMO கொடுங்கள், நன்றாக DIGITAL முறையில் தெரிந்தால் நான் வாங்கி கொள்கின்றேன் என்று கூற, உள்ளூர் கேபிள் ஆள் ஒத்து கொண்டார். ஒரு வாரத்திற்கு பிறகு அவர் setup பாக்ஸ் கொண்டு வந்து உபயோகபடுத்தி பார்த்தார். முதலில் நான் AIRTEL DTH பார்த்த பிரச்சனை இங்கும் வந்தது. அனைத்து DTH சும், கை விட்ட நிலையில் சுமங்கலி setup என்ன உதவ போகிறதா என்ற நினைத்து இருந்த நிலையில், setup பாக்ஸ்ன் உள்ளே சென்று அதனுடைய configuration யை பார்க்கும் போது, வீடியோ செட்டிங் க்குள் NTSC / PAL முறை என்று இரண்டு இருந்தது. அதை பார்த்த உடன் என்னுள் ஒரு சிறு நம்பிக்கை. ஆம் அந்த configuration மாற்றி அமைத்த உடன் என் வெளிநாட்டில் வாங்கி வந்த தொலைகாட்சியில் DIGITAL முறையில் நம்மூர் சேனலை பார்க்க முடிந்தது. அதுவும் மிக துல்லியத்துடன். ஆனால் நான் வாங்கிய அந்த VGA convertor ? இப்போது தேவையில்லை. பணம் போனது தான் மிச்சம். இன்னொரு விஷயம், இந்த சுமங்கலி setup பாக்ஸ் சென்னையில் மட்டுமே கிடைக்கும். சென்னை தவிர மற்ற (தமிழ்நாடு) நகரங்களில் உபயோகபடுத்த முடியாது. அவர்கள் DEMO கொடுக்கும் போது எடுத்த வந்த setup பாக்ஸ் பழையது. சென்னையில் சுமங்கலியை நிலைநிறுத்தி கொள்ள சன் நிறுவனம் இப்போது இலவச setup பாக்ஸ்யை தருகிறது. ஆனால் இந்த setup பாக்ஸ்ல் NTSC / PAL என்ற இரண்டு முறை இல்லை. இந்திய தொலைகாட்சிக்கு மட்டும் ஒத்துழைக்கும் PAL என்ற முறை மட்டுமே உள்ளது. அதனால் தான் நான் வாங்கும் போது கூட, என் தொலைகாட்சிக்கு எதுவாக பழைய setup பாக்ஸ்யை வாங்கி கொண்டேன். சுமங்கலி என்பது சன் நிறுவனத்தின் ஒரு பகுதி. சுமங்கலி setup பாக்ஸ்ல் NTSC / PAL முறை இருக்கும் போது, என் நினைப்பு படி SUN DTH ல்லும் இந்த முறை இருந்தாக வேண்டும். நான் என் தொலைக்காட்சிக்கு ஆராயும் போது, SUN DTH புதிதாக ஒரு setup பாக்ஸ் கொடுத்து உள்ளதாகவும், அதை பற்றி ஆராய வேண்டும் என்று கேள்வி பட்டேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. சென்னையில் உள்ள மக்கள் சன் DTH வாங்கி கொண்டு ஏமாந்து போவதற்கு பதிலாக, சுமங்கலியை வாங்கி கொண்டு போகலாம்.
நான் எனது பிரச்சனையை தீர்க்க தேடும் போது, விளக்கமாக ஒரு வலை தளத்திலும், இணைய தளத்திலும் இல்லை. அதனால் தான் இங்கு என்னுடைய அனுபவத்தை கொடுத்து உள்ளேன். படிக்கும் நபர் எந்த NTSC / PAL தொடர்ப என்ன கேள்விகள் இருந்தாலும், எனக்கு தெரிய படுத்துங்கள். என்னால் முடிந்த வரை உதவி செய்ய முயலுகிறேன்
No comments:
Post a Comment