மறுபடியும் அலட்டல் இல்லாமல், தரமான மலையாள திரைப்படம். இப்படத்திலும் கதை மற்றும் மம்மூட்டியின் அசத்தல் நடிப்பு என்று வைத்துக் கொண்டு, மற்றொரு உயிரோட்டம் உள்ள படம். இயக்குனர் பல விஷயங்களை ஒரு சேர ஒரே படத்தில் கொடுத்து இருந்தாலும், அனைத்து விஷயங்களும் முழுமையாக யோசிக்க பட வேண்டியது மற்றும் உணர பட வேண்டியது. கதை என்றால் ஒரு பெரிய மனிதரை சுற்றி நடக்கும் சம்பவங்கள். அப்பெரிய மனிதர் மம்மூட்டி. இவர் ஒரு காரியம் செய்வதற்காக, தன்னுடைய முன்னால் சொந்த பந்தகளின் உத்தரவுகளையும், சார்ச்க்கு சென்று இறைவனின் ஆசியையும் பெறுவதற்கு செல்லும் இடத்தில், இறந்து போனவர்களை காண்கிறார். அதே போல் இறைவனையும் நேரில் காண்கிறார். இறைவனிடத்தில் தன்னுடைய வாழ்க்கையை விளக்கி ஆசியையும் பெறுகிறார். ஆனால் இயக்குனர் இதற்கு திரைக்கதை அமைத்த விதம் தான் படத்தின் பலம்.
புகழ் வேண்டும் என்று அவர் கிளப் தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் போகும் இடம் ஆகட்டும், பணத்தை செலவு செய்து மற்றொருவருக்கு விழ எடுக்கும் போது அவருக்கு அமர்வதற்கு இடம் கூட கிடைக்காமல் போகும் காட்சி ஆகட்டும், பத்மஸ்ரீ வாங்கினால் பெயர் கிடைக்கும் என்று நம்பி அதை பெற குறுக்கு வழியில் சென்று பணத்தை இழந்து, பட்டம் கிடைக்காமல் போகும் காட்சி ஆகட்டும், மம்மூட்டிக்கு நிகர் மம்மூட்டி தான் என்பதை காட்டி இருப்பார். படத்தில் பல சீரியஸ் காட்சிகள் வைத்து இருந்தாலும், படம் முழுவதும் நகைச்சுவை இருக்கும். தன் வாழ்வில் கூறுக்கிடும் குஷ்பு மற்றும் ப்ரியாமணியின் கதைகளை லேசாக சேர்த்து, அதற்குரிய விஷயத்தையும் இயக்குனர் விளக்கி இருப்பார். குஷ்பு மற்றும் அவரது கணவரின் வசதி படைத்த வாழ்க்கையை காட்டி, உட்புற வாழ்க்கையை காட்டி இருப்பார்.
கடைசியாக தன்னை வளர்த்த ஆசிரியரின் ஆசையை நிறைவேற்ற, படிக்காமல் இருக்கும் ஒரு பள்ளி மாணவரை தேற்றி காட்டுகிறேன் என்று அழைத்து சென்று அதிலும் தோற்று போகிறார். ஆனால் அம்மாணவனின் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, சந்தேகத்தால் மகன் அறியும் படி, மனைவியை கொலை செய்த குடிக்கார கணவன். மாணவனின் தந்தை திருந்தும் போது, மாணவனின் வாழ்க்கை என்ன ஆகிறது, அதே போல் தந்தையின் நிலைமை என்ன ஆகிறது என்பதை தெளிவாக விளக்கி இருப்பார் இயக்குனர்.
இறைவன் கடைசியில் விளக்கும் போது, மம்மூட்டி இழந்த/ ஏமாற்றப்பட்ட போது, ஏமாற்றியாவரின் நிலைமையை எடுத்து சொல்லி, நிலைமையை விளக்குகிறார். எதற்கு வந்தோமோ, அதற்குரிய ஆசியை பெற்று மகிழ்ச்சியுடன் சார்சில் இருந்து கிளம்புகிறார். படம் முடியும் போது, நம் மனதில் ஒரு உணர்வு/நிம்மதி/மகிழ்ச்சி கிடைத்தது என்றால், அது தான் இப்படத்தின் வெற்றி. ஒரு முறையாவது கண்டிப்பாக காண வேண்டிய திரைப்படம்.
No comments:
Post a Comment